பிஹெச்டி பட்டதாரி இன்று காய்கறிகளை விற்கிறார்.
மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த ரஜியா அன்சாரி அறிவியலில் ஆய்வுப் படிப்பை முடித்து விட்டு பிஹெச்டி பட்டம் வாங்கியுள்ளார். இவர் முஸ்லிம் என்பதால் தகுதியான வேலை கிடைக்கவில்லை. எனவே தங்களின் குலத் தொழிலான காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ளார். ஆனால் அதற்கும் காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்து இவர்களை அலைக்கழிக்கிறது.
'படித்த படிப்புக்கு வேலையும் இல்லை. கிடைத்த வேலையை பார்க்கலாம் என்றால் அதற்கும் ஆயிரம் கட்டுப்பாடுகள். எங்கள் குடும்பமும் எங்கள் குழந்தைகளும் எங்கு செல்வோம் சாப்பாட்டுக்கு? கலெக்டர் அலுவலகம் முன்போ அல்லது மோடியின் வீட்டின் முன்போ உயிரை மாய்த்துக் கொள்ளவா?'
என்று ஆதங்கத்தோடு கேட்கிறார் ரஜியா.
பாசிசவாதிகளிடம் இதற்கு என்ன பதில் இருக்கிறது.
No comments:
Post a Comment