கிருஸ்துராஜ் பாஸ்டராக இருந்து முஹம்மதாக மாற்றிக் கொண்டவர்.
சவுதியில் பணியில் இருக்கும் போது இஸ்லாம் இவருக்கு அறிமுகமாகியுள்ளது. அங்கேயே இஸ்லாத்தை தழுவி தனது பெயரை முஹம்மதாக மாற்றிக் கொண்டவர். ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர். தமிழகத்தில் பல இடங்களில் தனது இஸ்லாமிய பிரசாரத்தை மேற்கொண்டிருந்தவர். இஸ்லாத்தை ஏற்ற குறுகிய காலத்திலேயே அல்குர்ஆனை கற்று குர்ஆன் வகுப்புகள் நடத்தும் அளவிற்கு அல்லாஹ் அவருக்கு கல்வி ஞானத்தை வழங்கினான்.
இன்று இவர் நம்மிடம் இல்லை.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!
1 comment:
இவா் பாவமற்றவராக வாழ்ந்தாா் என்று கூறும் தைரியம் தங்களுக்கு ஏன் இல்லை.
22.7.2020 அன்று எனது ஊரில் புகழ் பெற்ற குடும்பத்தின் மருமகள் புற்று நோய் தாக்கி அமரா் ஆனாா். அவரை அடக்கம் செய்யும் போது ” ஒரு பாவம் அறியாத இந்த குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா” என்று பலரும் பேசிக்கொண்டார்கள். நானும் பேசினேன்.
ஒரு பகட்டு இல்லாத இந்து குடும்பம் எப்படி வாழ்கிறது பாருங்கள்.
அரேபிய மத (நபி) முஹம்மது கூட தன்னை பாவம் இல்லாதவா் என்று அறிவிக்கவில்லை.
அறிந்து செய்த பாவம் அறியாது செய்த பாவங்கள் ..................... அனைத்தையும் மன்னிக்க இறைவனிடம் மன்றாடுகின்றார்.
Post a Comment