இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின் முதன் முதலாக திறக்கப்படும் பாகிஸ்தான் இந்து கோவில் - மனங்களை வெல்லும் இம்ரான் கான்.
1947 இந்தியா எனும் தேசம் பாகிஸ்தான் இந்தியா என இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது, மூடப்பட்ட இந்து கோவில் சியால்கோட் நகரில் உள்ள சாவ்லா தேஜ் சிங் கோவில். இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
இக்கோவில் பொது மக்களின் வழி பாட்டிற்கு 1947ல் இருந்து திறந்து விடப்படாது இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து, அவர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தானின் அனைத்து தரப்பு மக்களுடைய மனதை கவரும் வண்ணம் செயல்பட்டு வருவதோடு மட்டும் அல்லாது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அதன் வெளிப்பாடாக, நாக் பஞ்சமி தினமான வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சாவ்லா தேஜ் சிங் கோவில் பொது மக்கள் வழிபாட்டிற்கு திறக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது பற்றி கூறுகையில் சியால்கோட் துனை ஆணையர் பிலால் ஹைதர், “ இது விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். இனி எல்லா நேரங்களிலும் பொது மக்கள் செல்லலாம்” எனக் கூறினார்.
அதே போன்று மூல்தான் மற்றும் லாகூர் போன்ற இடங்களில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்க்க பாகிஸ்தானிற்கான உயர் ஆனையர் அஜய் பிசாரியா அவரது மனைவி பாரதி சதுர்வேதி ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் கவர்னர் முஹம்மத் சர்வர்,” இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்ல உறவையே விரும்புகிறது” எனக் கூறினார்.
Thanks to
Neutral Today
Neutral Today
17 comments:
அருட்பிரகாச வள்ளலாா் பாடிய ஏக இறைவன் துதி
விண்ணப்பக் கலிவெண்பா -001. திருவடிப் புகழ்ச்சி
நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுந்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
2. பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
3. பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
4. பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம்
5. பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்
6. பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
7. பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
8. பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம்
9. தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
10. சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
11. தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
12. சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
13. தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
14. தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
215. தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்
16. சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம்
17. மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
18. வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்
19. மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
20. மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
21. மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
22. வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
23. மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
24. வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம்
ad
25. இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்
எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்
26. ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
27. இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்
28. எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
29. என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
30. என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
31. என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
32. எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.
திருவடிப் புகழ்ச்சி // திருவடிப் புகழ்ச்சி
00:00/00:00
1959-1960-001-3-Thiruvadi Pugalchi.mp3
Downlo
நமது பாரத பிரதமா் திரு.நரேந்திர மோடி அவர்களின் பேராண்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
இந்துக்களை நசுக்கினால் பாக்கிஸ்தான் மேல் இந்தியா கடும் ராணுவதாக்குதலை நடத்தும்.
பள்ளிக் கூடம் போகாத வாலறிவு பெற்ற வள்ளலாா்
எழுதிய பாடல்களில் அளவையும் பொருட்செறிவையும் படிக்க வேண்டும்.
முஸ்லீம்கள் படிக்க வேண்டும்.
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே
பாடல் ஆசிரியா் வளளலாா். சாதியை கண்டிக்கும் வன்மையைப் பாருங்கள்.
இந்து மதம் சாதியை ஆதரிக்கின்றது என்று சொல்பவன் மடையன்.மகாமடையன்.
திருவருட்பா ஆறாம் திருமுறை ,,, 5556------------5575, பாட்டு. விளக்கம்
1 March 2015 at 07:08
Public
132. உலகர்க்கு உய்வகை கூறல்
அஃதாவது, உலகத்து நன்மக்களுக்கு இம்மை மறுமைகட்கு நலம் பயக்கும் நல்லுரைகளைக் கூறுதல்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5556.
கட்டோ டேகனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே தரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலகியற் பித்துக் கொண்ட பெருமக்களே! கட்டும் கனவுமாக வாழ்கின்றோம் என்று சொல்கின்றீர்கள்; ஆனால் கண்ணும் கருத்துமாக இறைவனை நினைக்கின்றீர் இல்லை; பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்; ஆயினும் தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்; கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்களே அன்றி நற்குணங்களோடும் நல்ல கருத்துக்களோடும் பெரியோர்களே குறித்துரைப்பதை நினைக்கின்றீர்கள் இல்லை; எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணத் தெரியாத வர்களாகிய நீங்கள் எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள். எ.று.
கட்டு - இனத்தோடு கூடிச் சாதி ஆசாரக் கட்டோடு அன்பு கொண்டு வாழ்தல். கனம் - பெருந்தன்மை. கருத்தன் - கருத்தில் உறையும் இறைவன். பட்டு - பட்டாடை. படி - பொன்னால் செய்த ஆபரணங்கள். கொட்டும் முழக்கம் என்பது பல்வகை வாத்தியங்களைக் குறிப்பது. குணம் - நற்குணம். குறிப்பு - நல்ல அறிவுரைகள். இவற்றைக் குறிப்பவர்கள் பெரியோர்கள் ஆதலால் “குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்” என்று கூறுகின்றார். சில விடயங்களையும் அறியாது ஒழிகின்றனர் என்பதற்கு, “எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்” என்று அறிவிக்கின்றார். பித்துலகீர் - உலகியல் வாழ்வில் ஆசையுற்று வாழ்கின்றவர்கள். கட்டும் கனமும், பட்டும் துணியும், கொட்டும் முழக்கமும் இம்மை மறுமைகளுக்குத் துணை செய்வன அல்ல என்பது கருத்து. எட்டும் இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர் என்பதற்கு எட்டும் இரண்டும் சேர்த்துப் பத்தாம் என்று அறியா தொழிகின்றீர். பத்தாவது இறைவன்பால் கொள்ளுகின்ற பற்று என்பது இறைவன் பால் கொள்கின்ற பற்றே இருமைக்கும் துணையாவது என்பதாம்.
5557.
ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
மாறாமல் மனஞ்சென்ற வுழிச்சென்று திகைப்பீர்
வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலகியற் பித்து கொண்டு அலைகின்ற மக்களே! சிறிதும் தணியாமலும் கெடாமலும் நிறைந்த கோபத்தை உடையவர்களாக இருக்கின்றீர்கள்; உலகில் துன்பங்கள் தொடர்ந்து வருத்தும்போது அஞ்சாமல் எங்கும் திருகின்றீர்கள்; மனம் போன வழித் தடையின்றி மயங்குகின்றீர்கள்; நல்ல வழித் துறைகளைக் காணாமல் பழி உண்டாகும் நெறியிலே நின்று மணம் கமழாத பூப்போல வாழ்கின்றீர்கள்; இவ்வாற்றால் மூப்பும் நரை திரைகளும் மரணமும் எய்தியவழி என்ன செய்வீர்கள்; உயர்நிலைக்கு ஏறாமல் வீண் வழிகளிலே கீழ் நோக்கிச் செல்கின்றீர்கள்; இறுதியில் நீவிர் எதனைக் துணையாகக் கொள்வீர்; உரைப்பீர்களாக. எ.று.
பித்துலகீர் என்பதை முன்பாட்டில் கூறியது போலக் கூறிக் கொள்க. இனிவரும் பாட்டுக்களுக்கும் இவ்வாறே உரைத்துக் கொள்க. ஆறுதல் - தணிதல். அவிதல் - இல்லாதபடிக் கெடுதல். கோபம் தணிவதும் இல்லாமற் கெடுவதுமாகிய நற்பண்புகளை இல்லாதவர்களை, “ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர்” என்று மொழிகின்றார். உலக வாழ்வில் துன்பங்கள் தொடர்ந்து வந்து நெருக்குவது இயல்பாதலால் அதற்கு அஞ்சாமல் நெறிப்பட நேர்ப்பட்டு ஒழுகுதல் நேர்மை என்பது தெரிவித்ததற்கு, “அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்” என்று அறிவிக்கின்றார். மனம் சென்ற வழியே செல்லுவது முறையன்றாதலின், “மாறாமல் மனம் சென்ற வழி சென்று திகைப்பீர்” என்று கூறுகின்றார். மாறுதல் - மனம் போன வழியே போகாமை; அங்ஙனமே சென்றால் பழி பாவங்கள் தோன்றி வாழ்வை மணம் இல்லாத பூப் போலக் கெடுத்து விடும் என்பாராய், “பழி படும்படிக்கே நாறாத மலர் போலும் வாழ்கின்றீர்” என்று எச்சரிக்கின்றார். மூப்பு - முதுமை. நரை - தலைமயிர் பால்போல் வெளுத்தல். திரை - உடலில் தோல் சுருங்குதல். மரணம் - சாக்காடு. ஏறுதல் - ஞான நெறி பற்றி இன்ப வாழ்வு நோக்கி முன்னேறுதல்.
ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
கண்மூடித் திரிகின்றீர் கனிவொரும் இரப்போர்க்
கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
எத்துணை கொள்கின்றீர் புத்துல கீரே.
உரை:
உலகியல் வாழ்வில் பித்துக் கொண்ட பெருமக்களே! அறிவால் ஆராய்தல் இல்லாமையால் நீங்கள் ஆதியும் அனாதியுமாகிய அருட்சோதி ஆண்டவனை அறிந்து கொள்கின்றீர் இல்லை; இறத்தலும் பிறத்தலும் இல்லாமைக்குரிய வழி ஒன்றும் தெரிந்து கொள்கின்றீர் இல்லை; இறைவனை மறவாமையும் மாறாகியவற்றை நினையாமையுமாகிய இரண்டு நெறிகளையும் சிறிதும் அறிகின்றீர் இல்லை; காய்த்துப் பழுக்கின்ற தன்மையில்லாத சிவஞானக் கருத்தை நினைவிற் கொள்ளாமல் கண்மூடி அறிவின்றி உழல்கின்றீர்கள்; இல்லாமையால் வந்து இரப்பவர்களுக்கு ஒன்றும் கொடாது மறுத்தலையே வாழ்க்கைக்கு இனிய துணை என்று சொல்கின்றீர்; இனி இன்ப வாழ்வுக்கு எதனைத் துணையாகக் கொள்கின்றீர்; உரைப்பீர்களாக. எ.று.
ஆய்வுணர்வு இல்லாமையால் பரம்பொருளாகிய அருட்சோதி ஆண்டவனை உலகத்தவர் அறியாது ஒழுகுகின்றனர் என்பது பற்றி, “ஆயாமையாலே நீர் ஆதி அனாதியாகிய சோதியை அறிந்து கொள்கில்லீர்” என்று தெரிவிக்கின்றார். மாய்தல் - இறத்தல். மறத்தல் - இறைவன் திருவருளை மறத்தல். நினையாமை - அருள் ஞான நெறியை நினையாதொழிதல். காய்த்துப் பழுக்கின்ற காய் கனிகள் போலின்றி அறிந்தபொழுதே உள்ளத்தில் நிறைந்து இன்பம் செய்தலால் திருவருள் ஞானத்தை, காயாமை பழுக்கின்ற கருத்து” என்று கூறுகின்றார். கனிவு - அன்பு. அறியாதொழுகுவதைக் “கண் மூடித்திரிகின்றீர்“ என்று குறிக்கின்றார்.
5559.
சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் பித்துக் கொண்டு அலைகின்ற மக்களே! செத்து மறைகின்ற தன்மையின்றி வாழும் திறம் சிறிதும் உணர்கின்றீர்கள் இல்லை; தத்துவ ஞானத்தையும் இத்தகையது என அறிந்து கொள்கின்றீர்கள் இல்லை; பெரிய மாந்தை என்னும் நோயுற்ற குழந்தைகள் போல மெலிந்து வாழ்க்கையிலே கிடைக்கின்ற சிறிதாகிய இன்பத்தைப் பெற்று மகிழ்கின்றீர்கள்; காமமாகிய இருளில் கிடந்து அறிவின்றித் திரிகின்றீர்கள்: கற்க வேண்டியவற்றையும் கற்கின்றீர்கள் இல்லை; கருத்தாவாகிய இறைவனை நினையாமல் மயங்கி உலக வாழ்வில் உறங்குவதும் விழிப்பதும் செய்கின்றீர்கள்; இனி இன்ப வாழ்வு பெறுதற்கு எதனைத் துணை கொள்வீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
மரணம் இல்லாத பெருவாழ்வுக்கு வேண்டும் அறிவு நெறிகளை உணராமல் ஒழுகுகின்றீர்கள் என்பாராய், “சாமாந்தர் ஆகாத் தரம் சிறிது உணரீர்” என்று எடுத்துரைக்கின்றார். தரம் - தன்மை. சிறிதும் எனற்பாலது ஈற்றும்மை கெட்டுச் சிறிது என வந்தது. தத்துவ ஞானம் என்பது ஆன்ம தத்துவத்தையும் வித்தியா தத்துவத்தையும் சிவ தத்துவத்தையும் தெளிவாக உணர்தலாகும். இற்று - இத்தன்மையது. மாந்தை நோய் என்பது மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் வகையில் ஒன்று. குழைதல் - மெலிதல். சிற்றின்பத்தை “அற்ப மகிழ்ச்சி” என்று கூறுகின்றார். காமாந்தகாரம் - காம இச்சையாகிய இருள். கற்பன - வாழ்வுக்கு இன்பத்தைத் தரும் ஞான நூல்கள். கருத்தன் - கருத்தின்கண் எழுந்தருளும் இறைவனாகிய தலைவன்.
அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கினர்
பின்படு தீமையின் முன்படு கினர்
இச்சையில் கண்முடீ எச்சுகம் கண்டீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் ஆசையுற்று அலைகின்ற மக்களே! உயிரையும் உடம்பையும் அறியும் வகையில் அறிகின்றீர்கள் இல்லை; உங்களுக்கும் உண்மையான தந்தையும் தாயும் இன்னார் என்று தெரிந்து கொள்கின்றீர்கள் இல்லை; பசுமையும் செம்மையும் வறுமையும் கலந்துள்ள உம்முடைய வாழ்க்கையினுடைய பண்பு ஒன்றும் இல்லாமல் இருக்கின்றீர்கள்; இல்லாதவர்களுக்குப் பிச்சையுட்டு உண்ண பின்வாங்குகின்றீர்கள்; பின்பு தோன்றும் துன்பத்தை முன்பே படுகின்றீர்கள்; இச்சித்த பொருள்களின்மீது கண்மூடிச் சென்று எத்தகைய சுகத்தைக் காண்கின்றீர்கள்; இனி எய்துதற்குரிய இன்ப வாழ்வுக்கு எதனைத் துணை கொண்டுள்ளீர்; உரைப்பீர்களாக. எ.று.
அச்சு உயிர் அறியும் வகையாவது உயிரினுடைய உணர்தற்றன்மையும் உடம்பினுடைய சடத் தன்மையையும் தனித்தனி அறிதல். உலகுயிர்களுக்கு உண்மைத் தாயும் தந்தையும் சிவசத்தியும் சிவனுமாம் என உணராது உலகில் தம்மைப் பெற்ற தாயையும் தந்தையையுமே பெற்றோர் எனக் கருதி ஒழுகுவது பற்றி, “அம்மையும் அப்பனும் ஆர் எனத் தெரியீர்” என்று இயம்புகின்றார். பச்சை -பசுமை. கருமை என்பது வறுமை என்னும் பொருளில் வந்தது. உலகியல் வாழ்வில் வளமையும் வறுமையும் இரண்டும் இல்லாத செம்மையும் கலந்து காணப்படுதலால், “பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் பலித்த வாழ்க்கை” என்று பகருகின்றார். வறுமையைக் கருப்பு என்பது உலக வழக்கு. தீய செய்கையால் பின்னர் வருகின்ற துன்பத்தை, “பின்படு தீமை” என்று செப்புகின்றார். இச்சித்த பொருள் மேல் சென்று உழலும் இயல்பை “இச்சை” என்று இசைக்கின்றார்.
5561.
வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் ஆசை மிகுந்துறையும் மக்களே! வட்டி மேல் வட்டி வாங்குகின்ற நெறியில் நிற்கின்றீர்களே ஒழிய வட்டியைப் பெருக்கிக் கொள்கின்ற வழியை அறியாதவர்களாய் இருக்கின்றீர்கள்; பெட்டி மேல் பெட்டிகளை வைத்து அடுக்கிப் பயன் கொள்ளும் வழியைத் தெரிந்திருக்கின்றீர்களே அன்றி வைராக்கிய பெட்டியை நிரப்பிக் கொண்டு அதனோடு சேர்ந்து மகிழ்ந்து இருக்கின்றீர்கள் இல்லை; அதே சமயத்தில் உணவில்லாமையால் பட்டினி கிடக்கின்றவர்களைக் கண்ணால் பார்க்கவும் விரும்புகின்றீர்கள் இல்லை: உண்பது பழங்கஞ்சியாயினும் அதனை அவர்களுக்குக் கொடுக்க எண்ணுகின்றார்கள் இல்லை; எட்டி மரம் போல் வாழ்ந்துகொண்டு குட்டிச் செடி போல் கிளைத்திருக்கின்றீர்கள்; ஆனால் இறுதி நாளில் எதனைத் துணை கொள்கின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் பித்துக்கொண்டு வாழும் மக்களே! வன்மையான சொற்களைச் சொன்னாலல்லது வாய் திறவாது ஒழுகுகின்றீர்கள்; வாய்மை தூய்மையாகிய இரண்டையும் காய்ந்து பேசும் சொற்களால் வளர்க்க நினைக்கின்றீர்கள்: முன் சொல்வது ஒன்றும் பின் சொல்வதும் ஒன்றுமாகத் தீவினையாகிய மூட்டையைக் கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி முட்டிக் கொள்கிறீர்கள்; அதுவே அன்றிப் பெருமானாகிய சிவன் சொல்லும் நிலைத்த சன்மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழியில் செல்கின்றீர்கள்; பின்னர் சாகும் நிலையில் சாவாயில் புகுந்து யாது சொல்லப் போகின்றீர்கள்; பின்னே இன்னது சொல்வது அறியாதவர்களாகிய நீங்கள் யாதினைத் துணை கொள்ளப் போகின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
துன்மார்க்க நடையிடைத் தூக்குகின் றீரே
தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்க்கையில் பித்துக்கொண்டு ஒழுகுகின்ற பெருமக்களே! துன்மார்க்க வழியில் நல்லுணர்வின்றி இயங்குகின்றீர்களே அன்றி அவ்வியக்கத்தை விடுத்து நல்லறமாகின்ற துணையைச் சிறிதும் எண்ணுகின்றீர் இல்லை; சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்து வாழவோ சாக்காட்டையும் பிறப்பையும் போக்கிக்கொள்ள விரும்புகின்றீர் இல்லை; பல்வேறு வழிகளில் சென்று துன்புறுகின்ற வஞ்சனை நிறைந்த உள்ளத்தை அடக்கிக் கொள்ளாமல் பசித்து வந்தவருடைய சோர்ந்த முகத்தைப் பார்த்து ஒருபிடிச் சோறு தருவதற்கும் இசைகின்றீர்கள் இல்லை; உங்களுடைய மார்க்கந்தான் யாது? நீங்கள் விரும்பும் சுகம் யாது? உங்களுடைய வாழ்க்கையின் இயல்புதான் யாதாம்; இறுதிக் காலத்தில் எதனைத் துணையாகக்கொள்ள நினைக்கின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
கட்டோ டேகனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே தரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலகியற் பித்துக் கொண்ட பெருமக்களே! கட்டும் கனவுமாக வாழ்கின்றோம் என்று சொல்கின்றீர்கள்; ஆனால் கண்ணும் கருத்துமாக இறைவனை நினைக்கின்றீர் இல்லை; பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்; ஆயினும் தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்; கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்களே அன்றி நற்குணங்களோடும் நல்ல கருத்துக்களோடும் பெரியோர்களே குறித்துரைப்பதை நினைக்கின்றீர்கள் இல்லை; எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணத் தெரியாத வர்களாகிய நீங்கள் எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள். எ.று.
ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
மாறாமல் மனஞ்சென்ற வுழிச்சென்று திகைப்பீர்
வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலகியற் பித்து கொண்டு அலைகின்ற மக்களே! சிறிதும் தணியாமலும் கெடாமலும் நிறைந்த கோபத்தை உடையவர்களாக இருக்கின்றீர்கள்; உலகில் துன்பங்கள் தொடர்ந்து வருத்தும்போது அஞ்சாமல் எங்கும் திருகின்றீர்கள்; மனம் போன வழித் தடையின்றி மயங்குகின்றீர்கள்; நல்ல வழித் துறைகளைக் காணாமல் பழி உண்டாகும் நெறியிலே நின்று மணம் கமழாத பூப்போல வாழ்கின்றீர்கள்; இவ்வாற்றால் மூப்பும் நரை திரைகளும் மரணமும் எய்தியவழி என்ன செய்வீர்கள்; உயர்நிலைக்கு ஏறாமல் வீண் வழிகளிலே கீழ் நோக்கிச் செல்கின்றீர்கள்; இறுதியில் நீவிர் எதனைக் துணையாகக் கொள்வீர்; உரைப்பீர்களாக.
ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
கண்மூடித் திரிகின்றீர் கனிவொரும் இரப்போர்க்
கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
எத்துணை கொள்கின்றீர் புத்துல கீரே.
உரை:
உலகியல் வாழ்வில் பித்துக் கொண்ட பெருமக்களே! அறிவால் ஆராய்தல் இல்லாமையால் நீங்கள் ஆதியும் அனாதியுமாகிய அருட்சோதி ஆண்டவனை அறிந்து கொள்கின்றீர் இல்லை; இறத்தலும் பிறத்தலும் இல்லாமைக்குரிய வழி ஒன்றும் தெரிந்து கொள்கின்றீர் இல்லை; இறைவனை மறவாமையும் மாறாகியவற்றை நினையாமையுமாகிய இரண்டு நெறிகளையும் சிறிதும் அறிகின்றீர் இல்லை; காய்த்துப் பழுக்கின்ற தன்மையில்லாத சிவஞானக் கருத்தை நினைவிற் கொள்ளாமல் கண்மூடி அறிவின்றி உழல்கின்றீர்கள்; இல்லாமையால் வந்து இரப்பவர்களுக்கு ஒன்றும் கொடாது மறுத்தலையே வாழ்க்கைக்கு இனிய துணை என்று சொல்கின்றீர்; இனி இன்ப வாழ்வுக்கு எதனைத் துணையாகக் கொள்கின்றீர்; உரைப்பீர்களாக
சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் பித்துக் கொண்டு அலைகின்ற மக்களே! செத்து மறைகின்ற தன்மையின்றி வாழும் திறம் சிறிதும் உணர்கின்றீர்கள் இல்லை; தத்துவ ஞானத்தையும் இத்தகையது என அறிந்து கொள்கின்றீர்கள் இல்லை; பெரிய மாந்தை என்னும் நோயுற்ற குழந்தைகள் போல மெலிந்து வாழ்க்கையிலே கிடைக்கின்ற சிறிதாகிய இன்பத்தைப் பெற்று மகிழ்கின்றீர்கள்; காமமாகிய இருளில் கிடந்து அறிவின்றித் திரிகின்றீர்கள்: கற்க வேண்டியவற்றையும் கற்கின்றீர்கள் இல்லை; கருத்தாவாகிய இறைவனை நினையாமல் மயங்கி உலக வாழ்வில் உறங்குவதும் விழிப்பதும் செய்கின்றீர்கள்; இனி இன்ப வாழ்வு பெறுதற்கு எதனைத் துணை கொள்வீர்கள்; உரைப்பீர்களாக
அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கினர்
பின்படு தீமையின் முன்படு கினர்
இச்சையில் கண்முடீ எச்சுகம் கண்டீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் ஆசையுற்று அலைகின்ற மக்களே! உயிரையும் உடம்பையும் அறியும் வகையில் அறிகின்றீர்கள் இல்லை; உங்களுக்கும் உண்மையான தந்தையும் தாயும் இன்னார் என்று தெரிந்து கொள்கின்றீர்கள் இல்லை; பசுமையும் செம்மையும் வறுமையும் கலந்துள்ள உம்முடைய வாழ்க்கையினுடைய பண்பு ஒன்றும் இல்லாமல் இருக்கின்றீர்கள்; இல்லாதவர்களுக்குப் பிச்சையுட்டு உண்ண பின்வாங்குகின்றீர்கள்; பின்பு தோன்றும் துன்பத்தை முன்பே படுகின்றீர்கள்; இச்சித்த பொருள்களின்மீது கண்மூடிச் சென்று எத்தகைய சுகத்தைக் காண்கின்றீர்கள்; இனி எய்துதற்குரிய இன்ப வாழ்வுக்கு எதனைத் துணை கொண்டுள்ளீர்; உரைப்பீர்களாக. எ.று.
வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் ஆசை மிகுந்துறையும் மக்களே! வட்டி மேல் வட்டி வாங்குகின்ற நெறியில் நிற்கின்றீர்களே ஒழிய வட்டியைப் பெருக்கிக் கொள்கின்ற வழியை அறியாதவர்களாய் இருக்கின்றீர்கள்; பெட்டி மேல் பெட்டிகளை வைத்து அடுக்கிப் பயன் கொள்ளும் வழியைத் தெரிந்திருக்கின்றீர்களே அன்றி வைராக்கிய பெட்டியை நிரப்பிக் கொண்டு அதனோடு சேர்ந்து மகிழ்ந்து இருக்கின்றீர்கள் இல்லை; அதே சமயத்தில் உணவில்லாமையால் பட்டினி கிடக்கின்றவர்களைக் கண்ணால் பார்க்கவும் விரும்புகின்றீர்கள் இல்லை: உண்பது பழங்கஞ்சியாயினும் அதனை அவர்களுக்குக் கொடுக்க எண்ணுகின்றார்கள் இல்லை; எட்டி மரம் போல் வாழ்ந்துகொண்டு குட்டிச் செடி போல் கிளைத்திருக்கின்றீர்கள்; ஆனால் இறுதி நாளில் எதனைத் துணை கொள்கின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்வில் பித்துக்கொண்டு வாழும் மக்களே! வன்மையான சொற்களைச் சொன்னாலல்லது வாய் திறவாது ஒழுகுகின்றீர்கள்; வாய்மை தூய்மையாகிய இரண்டையும் காய்ந்து பேசும் சொற்களால் வளர்க்க நினைக்கின்றீர்கள்: முன் சொல்வது ஒன்றும் பின் சொல்வதும் ஒன்றுமாகத் தீவினையாகிய மூட்டையைக் கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி முட்டிக் கொள்கிறீர்கள்; அதுவே அன்றிப் பெருமானாகிய சிவன் சொல்லும் நிலைத்த சன்மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழியில் செல்கின்றீர்கள்; பின்னர் சாகும் நிலையில் சாவாயில் புகுந்து யாது சொல்லப் போகின்றீர்கள்; பின்னே இன்னது சொல்வது அறியாதவர்களாகிய நீங்கள் யாதினைத் துணை கொள்ளப் போகின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
துன்மார்க்க நடையிடைத் தூக்குகின் றீரே
தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலக வாழ்க்கையில் பித்துக்கொண்டு ஒழுகுகின்ற பெருமக்களே! துன்மார்க்க வழியில் நல்லுணர்வின்றி இயங்குகின்றீர்களே அன்றி அவ்வியக்கத்தை விடுத்து நல்லறமாகின்ற துணையைச் சிறிதும் எண்ணுகின்றீர் இல்லை; சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்து வாழவோ சாக்காட்டையும் பிறப்பையும் போக்கிக்கொள்ள விரும்புகின்றீர் இல்லை; பல்வேறு வழிகளில் சென்று துன்புறுகின்ற வஞ்சனை நிறைந்த உள்ளத்தை அடக்கிக் கொள்ளாமல் பசித்து வந்தவருடைய சோர்ந்த முகத்தைப் பார்த்து ஒருபிடிச் சோறு தருவதற்கும் இசைகின்றீர்கள் இல்லை; உங்களுடைய மார்க்கந்தான் யாது? நீங்கள் விரும்பும் சுகம் யாது? உங்களுடைய வாழ்க்கையின் இயல்புதான் யாதாம்; இறுதிக் காலத்தில் எதனைத் துணையாகக்கொள்ள நினைக்கின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை:
உலகியற் பொய் வாழ்க்கையில் ஆசை மிகுந்து அலைகின்ற மக்களே! நாங்கள் செய்யத் தகாத தீமைகளைச் செய்கின்றீர்கள்; சொல்லத் தகாத வன்மொழிகளைச் சொல்கின்றீர்கள்; சேரத்தகாத தீயவர்களோடு சேருகின்றீர்கள்; மேற்கொள்ளத் தகாத நடத்தைகள் மேற்கொள்கின்றீர்கள்; இவையே அன்றி உங்களைக் கண்போல் காத்தளிக்கின்ற கருத்தாவாகிய இறைவனை நினைந்து கண்களில் நீர் சொரிந்து வழிபடுகின்றிலீர்; எண்ணக் கூடாதன எல்லாம் எண்ணுதற்குரிய ஒரு காலம் வரும்; அப்பொழுது நீங்கள் எதனைத் துணை கொள்வீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
உரை:
சாதி மதம் நெறிகள் சாத்திரங்கள் கோத்திரங்கள் முதலியவற்றில் மனம் கொண்டுஒருவரோடு ஒருவர் பூசலிட்டு வருந்துகின்ற மக்களே! இவற்றிற்காக ஊர்தோறும் அலைந்து வீணாய் கெடுவது உங்கட்கு அழகாகாது; நீதி விளங்குகின்ற சன்மார்க்க நெறியில் உங்களை நிறுத்தி இன்பம் எய்துமாறு காண்பதற்கு அம்பலத்தில் ஆடும் ஒப்பற்ற தலைவனாகிய சிவபெருமான் நீங்கள் வாழும் வீதியிலே அருட் சோதி விளையாடல் புரிவதற்காக எழுந்தருளும் சமயம் இதுவாதலால் வாருங்கள் என உங்களை அழைக்கின்றேன்
ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
உரை:
ஆற்றில் வெள்ளம் பெருகி வரும் முன்பே அணை செய்து காத்துக்கொள்ள நினையாத உலக மக்களே! அகங்காரமாகிய பேய்பிடித்தலைந்து வருந்துகிறீர்கள்; நாளை எமன் வருவானாயின் என்ன செய்வீர்கள்; அந்தோ! அந்த எமனை உதைத்து நீக்கிய சிவனுடைய சிவந்த திருவடியைப் போற்றி வழிபட விரும்புகின்றீர்கள் இல்லை; வேறாயவற்றைப் பேசித் தீவினைகளை மிகுவித்து மெலிகின்றீர்கள்; வீணான உலகியலில் கொடுமை நிறைந்த பொய் வழக்கங்களைக் கைவிட்டு எம்பால் வந்து அடைவீர்களாக; நான் உரைக்கின்ற சொற்களை ஏற்றருளுதற்கு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் இதுவாதலால் நீவிர் அவனது ஞான சத்தியைப் பெறுதற்கு உடனே வருவீர்களாக; நான் சொல்லும் இது சத்திய வாக்காகும். எ.று.
இந்து ஞானியான வள்ளலாரின் அருமைகளை முஸ்லீம்கள் அறிந்து கொள்ள ஒரு வாயப்பு கிடைத்துள்ளது. படிக்கட்டும்.
அரேபியாவால் 1700 ஆண்டுகள் கழிந்தபின்னும் முஹம்மது போல் ஒரு மனிதனை! உருவாக்க முடியவில்லை என்பது தோல்வியாகும்.
ஆன்மீக உன்னதங்கள் இந்தியாவில் ஒரு தொடா்கதை.இந்தியாவின் சக்தி வாய்நத ஆன்மீகம் உயிரோட்டமானது.அமரத்துவம் பெற்றது. எனவே மகத்தான தலைவர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள்.
நன்றி
Post a Comment