Followers

Monday, July 27, 2020

எந்த முகத்தோடு பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல நமது நாடு முயல்கிறது?



பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான் என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது.
எனவே பிரசித்தி பெற்ற குருத்துவாரா, மசூதிக்கு சொந்தமானது எனவும், அங்கு குருத்துவாராவை மசூதியாக மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு பூட்டிக் கிடந்த பல குருத்வாராக்களை சீக்கியர்களிடம் ஒப்படைத்துள்ளது இம்ரான் கான் அரசு. தற்போதய அரசு மிக சிறப்பாக மாற்று மதத்தவர்களை நடத்துவதாக அங்குள்ள இந்து கிருத்தவர்கள் சீக்கியர்கள் சொல்வதை நாம் காணொளியாகவே பார்த்தோம்.
அது முஸ்லிம்களுக்கு சொந்தமானதா அல்லது சீக்கியர்களுக்கு சொந்தமானதா என்பதை அந்த நாட்டு அரசும், நீதிமன்றமும் மக்களும் முடிவு செய்து கொள்வர். இதில் நமது நாடு ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?
ஏற்கெனவே பாபரி பள்ளியை அநியாயமாக பிடுங்கிக் கொண்டீர்கள். ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்துக்களிடமிருந்து பிடுங்கி பள்ளி கட்டியதாகவும் எந்த ஆவணமும் இல்லை. பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்பதாலேயே அநியாய தீர்ப்பை சொல்ல வைத்தது மோடி அரசு. நாட்டில் அமைதி நிலவட்டும் என்பதற்காக முஸ்லிம்களும் அதிக எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. வரும் ஐந்தாம் தேதி கள்ளத்தனமாக கைப்பற்றப்பட்ட பாபரி பள்ளி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட மோடி அடிக்கல் நாட்ட செல்கிறார்.
இத்தனை அநியாயங்களையும் செய்து விட்டு எந்த முகத்தோடு பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல நமது நாடு முயல்கிறது? கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா?


3 comments:

Dr.Anburaj said...

பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான் என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது.

சு...ன் தாங்களே அது இந்து சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வாரா என்று ஒப்புக் கொண்டு வீட்டீர்கள். நன்றி. இந்துவுக்கு வெற்றி.

பின் அதை மசுதியாக மாற்றப்பட்டது. என்பதும் உண்மை. பணி முழுமைபெறாமல் இருந்தது.
சீக்கியர்கள் அதை முழுமையாக குருத்துவாராவாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெகுகாலமாக முயன்று வருகின்றார்கள்.
நமது பிரதமாின் அற்புதமான ஆளுமை மற்றும் ஐநா சபை மற்றும் சா்வதேச நாடுகளின் கடும் கண்டனம் காரணமாக அரேபிய மத வெறிபிடித்த பாக்கிஸ்தான் அரசு பணிந்து வருகின்றது.பல வெளிநாட்டு உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் கலங்கிப் போன இம்ராம்கான் அரசு சிறுபான்மை மக்களுக்கு ஏதோ சிறு உதவிகளைச் செய்து பெரியதாக சாதித்து விட்டதாக படம் போடுகின்றது.

பாக்கிஸ்தான் கைகூலியான சு...ன் அந்த சிறிய படத்தை 70 எம்எம் படமாக பதிவு செய்துள்ளாா்.

Dr.Anburaj said...

பாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான் என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது.
குருத்துவாரா தான் என்று ஒப்புக் கொண்டபின் தாவா வழக்கு ஏன் ?

அது முஸ்லிம்களுக்கு சொந்தமானதா அல்லது சீக்கியர்களுக்கு சொந்தமானதா என்பதை அந்த நாட்டு அரசும், நீதிமன்றமும் மக்களும் முடிவு செய்து கொள்வர்.

இதில் நமது நாடு ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?

சு...ன் அசல் பாக்கிஸ்தான் காரன் போல் கோணல் பத்தியோடு பேசுகின்றான்.

ஹிந்துக்களுக்காக

ஹிந்து சிறுபான்மையினா் நலனுக்காக பாக்கிஸ்தான் மீது முழுமையான போரே நடத்துவோம்.

அரசுவேலைகளில் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து கல்வி மற்றும் அனைத்து அரசு திட்டங்களையும் இந்து சிறுபான்மையினருக்கு கண்ணியமாக முறையில் வழங்கவில்லையெனில் பேரழிவு போா் ஒன்றை பாக் அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்.
இந்திய முஸ்லீம்களுக்கு இருக்கும் உரிமை பாக் இந்துக்களுக்கு உளளது என்று அல்லாவின் மீது சத்தியம் செய்து பதிவு செய்யும் திராணி சு...ன் அவர்களக்கு உள்ளதா ?????

Dr.Anburaj said...


ஸ்ரீராம ஜென்ம புமியை மீட்டுக் கொடுத்தது இந்தியாவின் உச்ச நீதி மன்றம்தான்.

பிறகு என்ன விவாதம் வேண்டிக் கிடக்குது!