Followers

Monday, July 27, 2020

பெற்றோரின் சிறப்பு!

பெற்றோரின் சிறப்பு!
‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னைப் (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக! எனப் பிரார்த்திப்பீராக!
(அல்-குர்ஆன் – 17 : 24)
“ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதரே! நான் அழகிய நட்பு கொள்வதற்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனது தாய் என்றார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு யார்? என நான் கேட்டேன். உனது தாய் என்றார்கள். பிறகு யார்? எனக் கேட்டேன். உனது தந்தை என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)


4 comments:

Dr.Anburaj said...

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் [ஈயார் = பிறக்குக் கொடாதவர்]

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு [உண்டி = உணவு]

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

7. எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும் [எண் = கணிதம்; எழுத்து = மொழியிலக்கணம்]

8. ஏவா மக்கள் மூவா மருந்து [ஏவு = வேலைசெய்யென்று கட்டளையிடு; மூவா = மூக்காத, பெற்றோர் மூக்காத, வயதாகாத]

9. ஐயம் புகினும் செய்வன செய் [ஐயம் = பிச்சை]

10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு [ஔவியம் = பொறாமை, வஞ்சனை; ஆக்கம் = செல்வம், நன்மை]

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்; சிக்கென = உறுதியாக, சிக்கனமாக; வீண்செய்யாமல் தக்கவைக்குமாறு]

14. கற்புஎனப் படுவது சொல்திறம் பாமை

15. காவல் தானே பாவையர்க்கு அழகு

16. கிட்டா தாயின் வெட்டென மற [கிட்டாதாயின் = கிடைக்காதானால்; வெட்டென = உறுதியாக]

17. கீழோர் ஆயினும் தாழ உரை

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

19. கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

24. கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

25. கௌவை சொல்லின் எவ்வெவர்க்கும் பகை

26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை

27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு

28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

Dr.Anburaj said...

31. சூதும் வாதும் வேதனை செய்யும்

32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் [கைதவம் = கபடம், பொய்]

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு

34. சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

38. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை

39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

40. தீராக் கோபம் போராய் முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு

46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது

47. தோழ னோடும் ஏழைமை பேசேல்

48. நல்இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்

49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை

50. நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை

51. நீரகம் பொருந்திய ஊரகத்திரு

52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை

55. நேரா நோன்பு சீர் ஆகாது

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் [நைபவர் = வருந்துபவர், கேட்டு வருந்துபவர்; நொய்ய = கீழானவை]

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் [நொய்யவர் = சிறியவர், மெலிந்தவர், வலிமையற்றவர்; வெய்யவர் = எல்லாரும் விரும்பத்தக்கவர், மதிக்கத்தக்கவர்]

58. நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை [நோன்பு = தவம்]

59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்

60. பாலோடு ஆயினும் காலம்அறிந்து உண்

Dr.Anburaj said...

61. பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்

62. பீரம் பேணில் பாரம் தாங்கும் [பீரம் = தாய்ப்பால்; பேணில் = ஊட்டிக்கவனித்தால்; பாரம் = சுமை]

63. புலையும் கொலையும் களவும் தவிர்

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் [பூரியோர் = கயவர், கீழானவர்; சீரிய = உயர்ந்த]

65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும் [பெற்றோர் = முற்றிய அறிவு; செற்றம் = தீராக் கோபம், கறுவல்]

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

67. பையச் சென்றால் வையம் தாங்கும்

68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்

69. போனகம் என்பது தான்உழந்து உண்டல் [போனகம் = விருந்து, உணவு; உழந்து - உழைத்து; உண்டல் = உண்ணுதல்]

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை

72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

77. மேழிச் செல்வம் கோழை படாது

78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துஉண்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

88. வேந்தன் சீறீன் ஆம் துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்

91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

Dr.Anburaj said...


சிரவணன் கதை
பெற்றோர், பிள்ளைகளை பெற்று, வளர்த்து, கல்வி மற்றும் இதர செல்வங்களை கொடுத்து, அவர்களை காப்பாற்றுவது எப்படி கடமையோ, அதேபோல், தன்னை வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை, அவர்களின் அந்திமக் காலம் வரை காப்பாற்றுவது, பிள்ளைகளின் கடமை. இக்கடமைகளை யார் செய்யத் தவறினாலும், அந்த பாவம் அவர்களை பிறவி தோறும் தொடரும்.
பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, சிரவண குமாரன் கதையைக் கேளுங்கள்...
சிரவண குமாரன் என்ற சிறுவன், தன் பார்வையற்ற பெற்றோரை, கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்தான். ஒரு நாள், இவனின் பெற்றோருக்கு, காசி யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, காவடி செய்து, அதில் அவர்களை அமர வைத்து, தூக்கி சென்றான். வரும் வழியில், 'தாகமாக இருக்கிறது' என்று பெற்றோர், சிரவணனிடம் கூறவே, ஒரு மரத்தடியில் அவர்களை அமர வைத்து, நீர் கொண்டு வர,
குளத்திற்கு சென்றான்.
சிரவணன் குடத்தைத் தண்ணீரில் அழுத்தி, நீர் நிரப்ப முயன்ற போது, 'பளக் பளக்' என்று சத்தம் எழுந்தது. அங்கு வேட்டைக்கு வந்திருந்த தசரத மன்னன், அந்த ஓசையை கேட்டதும், 'ஏதோ மான் தான் தண்ணீர் குடிக்கிறது' என்று நினைத்து, ஓசை வந்த திசை நோக்கி, அம்பை எய்தார். அம்பு, குறி தவறாமல், சிரவண குமாரன் மீது பாய்ந்தது. அவன் அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த தசரதர், அவன் உயிருக்கு போராடுவதைக் கண்டு நடுங்கி, மன்னிப்பு கேட்டார்.
அப்போது சிரவண குமாரன், தசரதனை நோக்கி, 'ஐயா... பார்வையற்ற என் பெற்றோர், தாகத்தால் தவித்துக் கொண்டிருப்பர். இந்தத் தண்ணீரைக் கொண்டு சென்று, அவர்களிடம் கொடுங்கள். அவர்கள், நீர் குடித்து முடிக்கும் வரை, என் முடிவை, அவர்களுக்கு தெரிவித்து விடாதீர்கள். என் நிலையை அறிந்தால், தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இதனால், பெற்றோரின் தாகத்தை தீர்க்காத பாவம், என்னை வந்து சேரும்; உயிர் போகும் இந்த கடைசி நேரத்திலும், நான் அவர்களை வணங்கினேன் என்று கூறுங்கள்...' என்றான்.
தசரதர் அப்படியே செய்து, சிரவண குமாரன் பெற்றோரிடம், சாபம் பெற்றது தனிக் கதை. சிரவணம் என்ற சொல்லுக்கே, கேட்பது என்று பொருள். பார்வையற்ற பெற்றோரிடம் அன்பு கொண்டு, அவர்களைக் காப்பாற்றிய, சிரவண குமாரன் கதையை, நம் குழந்தைகளும், கேட்கும்படி செய்தால், முதியோர் இல்லங்கள் பெருகாது.