Followers

Tuesday, July 28, 2020

தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.

அன்பார்ந்த உறவுகளே...
பசியினால் வறுமையினால் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் அருகிலுள்ள முஸ்லிம்களாகிய எங்களை நீங்கள் அணுகுங்கள். இருப்பதை பகிர்ந்து உண்போம்.
உயிர் விலை மதிப்பற்றது. அதை ஒருபோதும் அநியாயமாக இறக்க விடமாட்டோம்.
கடைக்கோடி ஒரு இஸ்லாமியன் உயிரோடு இருக்கும் வரை.
வாழும் போதும், மரணிக்கும் போதும் உங்களோடு இருப்போம். தனியாக விட்டு விட மாட்டோம்.
இன்ஷா அல்லாஹ்
---------------------------------------
நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)
'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'
குர்ஆன் 13:28


1 comment:

Dr.Anburaj said...


திருக்குறளில் ”தற்கொலை” பற்றி பேசவேயில்லை.

அன்று மனிதன் தற்கொலை செய்து கொள்ளவேயில்லை.அதனால்தான் வள்ளவா் ”தற்கொலை” குறித்து பாடல்கள் எழுதவில்லை.