பார்பனருக்கு உதவிய இஸ்லாமிய இளைஞர் முஹம்மது ஆஷிஃப்!
கர்நாடகாவில் உள்ள மூட்பித்ரியில் வசித்து வந்தவர் வேணுகோபால் என்ற பார்பனர். வயது 62. பொருள் இருந்தபோது ஒட்டி உறவாடிய உறவுகள் கடைசி காலத்தில் தூரமாயினர். எனவே ஒரு அனாதை ஆசிரமத்தில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஒரு நாள் இவருக்கு திடீரென கொரோனா தொற்று தாக்கியது. தனக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் இறக்கும் போதாவது தனது பிள்ளைகளை உறவினர்களை காண ஆசைப்பட்டார்.
ஆனால் இவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த இவரது உறவினர்கள் கடைசி வரை இவரை பார்க்க வரவில்லை. மிகவும் மனம் நொந்தபடியே இறந்து போனார். இவரது உடலை எடுத்து ஈம கிரியைகள் செய்ய எவரும் முன் வரவில்லை. இதனை அறிந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முஹம்மது ஆஷிஃப் தனது நண்பர்கள் உதவியோடு அந்த பெரியவருக்கு செய்ய வேண்டிய கடைசி ஈம கிரியைகளை செய்து முடித்தார்.
பல உறவுகள் வசதியாக வாழ்ந்தும் அனாதை பிணமாக எரியூட்டப்பட்டார் வேணு கோபால். இதுதான் உலகம். வேணுகோபாலை ஒரு ஆதமுடைய மகனாக ஆஷிஃப் பார்த்ததால்தான் மனித நேயத்தோடு உதவ முன் வந்தார். இங்கு நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன் என்ற வர்ணாசிரம பெருமை எல்லாம் எங்கு போனது.
இந்த நாட்டை விட்டு முஸ்லிம்களை துரத்தி விட அல்லும் பகலும் உழைக்கும் சங்கிகளே! முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து முற்றாக சென்று விட்டால் இது போன்ற மனித நேய பணிகளை மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் உதவிகள் செய்வது யார்? இன்று ரத்ததானத்தில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment