அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம்
-----------------------------------
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். (ஆதாரம் புகாரி முஸ்லிம்)
துல்ஹஜ் 9 ல் வைப்பதோடு மட்டுமல்லாது இந்த மாதம் 9 நாட்களும் பலர் நோன்பிருப்பதைப் பார்த்திருப்போம். அதுவும் நபிகள் நாயகம் வலியுறுத்திய ஒன்றுதான். போர்க்களங்களில் கலந்து கொள்வதை விட சிறந்த செயல் துல் ஹஜ் மாதம் முதல் 10 ல் செய்யப்படும் அமல் என்று வருவதால் இங்கு சவுதியில் பரவலாக ஒன்பது நாளும் நோன்பு நோற்பதை பார்க்கலாம்.
எனவே உடல் ஆரோக்கியமும், வேலைப் பளுவும் அதிகம் இல்லாதவர்கள் 9 நாளும் நோன்பிருந்து நன்மைகளை பெற்றுக் கொள்ள முயல்வார்களாக!
No comments:
Post a Comment