விநாயக சதுர்த்தி விழாவில் தலித் எம்எல்ஏவுக்கு அனுமதி மறுப்பு!
ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளவர் வண்டவள்ளி ஸ்ரீதேவி. துல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவரம் கிராமத்தில் விநாயக சதுர்த்திக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்குள்ள மேல் சாதியினர் இவரை விழாவில் பங்கேற்க அனுமதிக்கவிலலை.
'தலித் பெண்ணான இவர் கோவிலுக்குள் வந்தால் கடவுள் தனது கருணை பார்வையை எங்களுக்கு தர மாட்டார்' என்று இதற்கு காரணமாக சொல்கின்றனர் அக்கிராமத்து மக்கள். கடைசியில் விழாவில் கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றார் எம்எல்ஏ.
'ஒரு எம்எல்ஏவான எனக்கே இந்நிலை என்றால் சாமான்ய மக்களின் நிலை எப்படி இருக்கும்?' என்று வருத்தமுடன் தனது ஆதங்கத்தை பதிவு செய்தார் எம்எல்ஏ.
கருணை பார்வையை மேல் சாதியினருக்கு மட்டும் வழங்கும் ஒருவன் கடவுளாக இருக்க முடியுமா? என்று ஏன் இந்த மக்கள் சிந்திப்பதில்லை? சாதி வெறி இந்த மக்களின் மனதில் எந்த அளவு குடி கொண்டுள்ளது என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த உதாரணம். இதில் மோடி வேறு 'ஒரே நாடு: ஒரே மொழி: ஒரே மதம்: ஒரே ரேஷன் கார்டு என்று கனவு காண்கிறார்... :-)
' ஆக்கம்: சுவனப்பிரியன்
No comments:
Post a Comment