Followers

Sunday, September 01, 2019

இந்திய பொருளாதார சரிவின் சூத்ரதாரிகள் யார்?

அஸ்ஸாமில் 19 லட்சம் இந்தியர்களை நாடற்றவர்களாக அறிவித்தாகி விட்டது. அடுத்து திரிபுரா, மேற்கு வங்கம், மஹாராஷ்ட்ரா என்று அனைத்து மாநிலங்களிலும் சோதனை தொடருமாம். நல்ல செயல்தான். அனைத்து மாநிலங்களிலும் சரியான ஆவணம் இல்லாத இந்திய குடிமக்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டும் என்கிறது ஆய்வறிக்கை. இவ்வாறு நாடற்றவர்களாக அறிவித்த அந்த மக்களுக்கு அரசு என்ன மாற்று ஏற்பாடு செய்துள்ளது? அவர்களை திறந்தவெளி சிறைச் சாலையில் அடைத்து வைக்கக் கூடும். அவர்களின் உணவு, உடை, சுகாதாரம், பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றை கவனிப்பது யார்? பாதுகாப்பு பராமரிப்பு என்று தினமும் பல கோடிகளை இந்த திட்டம் விழுங்கப் போகிறதே? பல தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இவரகளை எந்த நாடு ஏற்கும்?
பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகள் இந்த அகதிகளை ஏற்க முன் வராது. இவர்கள் எங்கள் நாட்டவர்களே அல்ல என்று ஐநாவில் சாதிக்கும். திறன் வாய்ந்த அரசாக இருந்திருந்தால் இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் எல்லைகளை கவனமாக பார்க்க வேண்டும். பெரும் மதில் சுவர்களை எழுப்பி ஊடுருவலை தடுக்கலாம். இதனால் கண்காணிப்பு பணி நமக்கு சற்று குறையும். மூன்றடுக்கு பாது காப்பு போட்டால் நூறு சதவீத ஊடுருவலை தடுத்து விடலாம். ஆனால் இதனால் அரசியல் சித்து விளையாட்டு விளையாட முடியாது என்பதால் அதனை செய்ய மாட்டார்கள். பல தலை முறைகளாக இங்கு உள்ளவர்களை மத வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்கி விட்டு இனி வருபவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபடலாம்.
மோடியும் அமீத்ஷாவும் செய்த குளறுபடிகளை இனி வரிசையாக பார்போம்.
1.குளறுபடியான ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தனர். அதனால் சிறு குறு தொழில்கள் பாதிப்படைந்து லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்தது.
2. அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை. பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு ஒரே இரவில் பண மதிப்பிழப்பை கொண்டு வந்தனர். இதனால் பாதிப்படைந்தது கோடிக்கணக்கான சாமான்ய மக்களே! கார்பரேட் முதலாளிகள் இதனால் லாபமடைந்தனர்.
3.காஷ்மீர் 370 சட்ட திருத்தம் கொண்டு வந்து இன்று அம் மாநிலத்தை தீராத தலைவலியாக மாற்றி விட்டனர். அந்த மக்களின் அன்பை பெறுவதற்கு பதில் அதிகாரத்தின் மூலம் வெறுப்பை சம்பாதித்து விட்டனர். இனி அங்கு தொழில் தொடங்குவதோ, சுற்றுலா துறையின் வளர்ச்சியோ கேள்விக் குறிதான்.
4. மாட்டுக் கறி விவகாரத்தில் பசு குண்டர்களை சிறையில் அடைப்பதை விடுத்து அவர்களுக்கு பதவி வழங்கி கவுரவித்தனர். இதனால் உற்சாகமடைந்து பல இந்துத்வ சமூக விரோதிகள் நூற்றுக்கணக்கான மக்களை கொன்றும் சொத்துக்களை சேதப்படுத்தியும் ஆனந்தமடைந்தனர். உலக முதலீட்டாளர்கள் தங்கள் நிறுவனங்களை சத்தமில்லாமல் வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று விட்டனர். சட்டம் ஒழுங்கு சரியில்லாத நாட்டில் எவன் தனது பணத்தை முதலீடு செய்வான்?
5.சரியான திட்டமிடாத அஸ்ஸாம் குடியேற்ற திட்டமும் நமது பொருளாதாரத்தை வருங்காலத்தில் வெகுவாக விழுங்கப் போகிறது. 20 லட்சம் 30 லட்சம் மக்களை அகதிகளாக பராமரிப்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல.
6. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை ஒழித்து விட்டு அந்த நிலங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க காய் நகர்த்துகின்றனர். இதனால் நீராதாரம் முற்றாக மாசு படும், கோடிக்கணக்கான விவசாயிகள் வேலையிழப்பர். அதற்கு மாற்றுத் திட்டமும் அரசிடம் கிடையாது.
இப்போதும் நிலைமை கெட்டு விட வில்லை. மோடியும் அமித்ஷாவும் நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் யோசனை கேட்பதை விடுத்து மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ரகுராம் ராஜன் போன்ற கல்வியாளர்கள் தலைமையில் கட்சி பேதமின்றி குழு அமைத்து அந்த குழுவின் பரிந்துரைப்படி ஆட்சி நடைபெற ஆவண செய்ய வேண்டும். இதை தவற விட்டால் இந்தியாவில் மிகப் பெரிய புரட்சி ஏற்படப் போவதை எந்த இரும்புக் கரம் கொண்டும் தடுத்து விட முடியாது. அதை நோக்கித்தான் நாடு சென்று கொண்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு பல சிரமங்களை கொடுப்பதன் மூலம் இஸ்லாத்தை இந்தியாவிலிருந்து ஒழித்து விடலாம் என்பதும் மோடி, மற்றும் அமித்ஷாவின் கணக்கு. இதிலும் அவர்கள் தோல்வியையே தழுவப் போகிறார்கள். எநத அளவு வறுமையை நோக்கி முஸ்லிம்கள் செல்கிறார்களோ அந்த அளவு அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை வலுப்பெறும். வரலாறு அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளது. ஆப்ரிக்காவில் இந்த அளவு வறுமை வாட்டியும் அவர்கள் இஸ்லாத்தை கை விடவில்லை. குஜராத்தில் மோடி தலைமையில் 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், அகதி முகாம்களில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அடைபட்டும் ஒரு முஸ்லிமையும் இந்து மதத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இந்த உண்மைகளை இனியாவது விளங்கி வருங்கால இந்தியாவை அனைத்து மக்களையும் அனைத்துச் செல்லக் கூடிய நீண்ட கால திட்டத்தை தீட்டுவார்களாக! இல்லை என்றால் ஹிட்லர், முசோலினி, யை போன்று மோசமான தலைவர்களில் ஒருவராக மோடி உலக மக்களால் பார்க்கப்படுவார்.
ஆக்கம்: சுவனப்பிரியன்


3 comments:

Dr.Anburaj said...

குளறுபடியான ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தனர். அதனால் சிறு குறு தொழில்கள் பாதிப்படைந்து லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்தது.
விடை கணினி இணையவழி கண்காணிப்பு காரணமாக வியாபாரிகள் ஊழல் செய்யும் வாய்ப்புகள் குறைந்துள்ளது.அதிகபோர் வரி செலுத்துகின்றார்கள். எனவே அரசுக்கு வரி வருவாய் கூட கிடைத்து வருகின்றது. கணினி மயத்திற்கு காரணகர்த்தா அமரா் ராஜவ்காந்திதான். அவரை குற்றம் காண விருப்பமா ?
-----------------------------------------------------------------------------
2. அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை. பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு ஒரே இரவில் பண மதிப்பிழப்பை கொண்டு வந்தனர். இதனால் பாதிப்படைந்தது கோடிக்கணக்கான சாமான்ய மக்களே! கார்பரேட் முதலாளிகள் இதனால் லாபமடைந்தனர்.
விடை பச்சை பொய்.பாக்கிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் பல லட்சம் கோடி நாட்டில் உலா வந்தது.பயங்கரவாதிகள் நக்சல் காடையர்கள் கையில் பல கோடி.காஷ்மீரில் போலீஸ் ராணுவத்தினா் அரசுஊழியர்கள் மீது குழுவாக கல்ஏறிய நாளைக்கு ரூ.500 ஊதியம் வழஙகப்பட்டு வந்தது.அனைத்தும் ஒழிக்கப்பட்டது. கருப்புபணம் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டது. வருமான வரிக்கு காட்டாத பல லட்சம் கோடி பணத்திற்கு வருமான வரி கட்டி தொழில் அதிபர்கள் தங்களைக் காத்துக் கொணடனா்.கார்பரேட்களும் இதே நிலைமைதான்.
-----------------------------------------------------------------------.
3.காஷ்மீர் 370 சட்ட திருத்தம் கொண்டு வந்து இன்று அம் மாநிலத்தை தீராத தலைவலியாக மாற்றி விட்டனர். அந்த மக்களின் அன்பை பெறுவதற்கு பதில் அதிகாரத்தின் மூலம் வெறுப்பை சம்பாதித்து விட்டனர். இனி அங்கு தொழில் தொடங்குவதோ, சுற்றுலா துறையின் வளர்ச்சியோ கேள்விக் குறிதான்.
பதில் பச்சை பொய். பணத்திற்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசோடு உறவாடும் காஷ்மீரத்து முஸ்லீம் அரசியல் வாதிகள் பயங்கரவாதிகளோடும் பாக்கிஸ்தான் அரசோடும் களள உறவில் இருந்தனா்.இந்தக்களை அழிக்க பெரும் திட்டம் போட்டு காஷ்மிரில் சிறுபான்மையாக வாழ்ந்த 4 லட்சம் இந்துக்களை பயங்கரவாத செயல்களால் அகதியாக்கி காஷ்மீரை விட்டு துரத்திவிட்டார்கள்.இந்த சம்பவம் குறித்து சுவனப்பிரியனோ வேறு துலுக்க அரசயில் வாதிகளோ பேச மறுத்து வருகின்றார்கள். காஷமிரில் வாழும் அட்டவணை இனத்தனவா் மலைசாதி மக்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது பெரும் கொடுமையிலும் கொடுமையாகும்.அரசுபணம் தணிக்கை கிடையாது. ஊழல் ஊழல் வானஅளவிற்கு நடந்து வந்தது. திருந்தாக ஜென்மங்களுக்கு தடிஅடிதான் தீர்பு. பாக்கிஸதான் ஆதரவு பயங்கரவாதிகளை ஒழிக்க ஒரேவழி 370 ஒழித்ததுதான். மிகச சிறந்த தீர்வை திரு.மோடி அவர்கள் அளித்தள்ளார்கள். பாக்கிஸ்தான் படையையும் காஷ்மீரில் வாழும் பாக்கிஸ்தான் ஆதரவுஅரேபிய காடையர்களைஎதிர் கொள்ளும் வலிமை இந்துஸ்தானத்து படைகளுக்கு உண்டு. காஷ்மீரில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...

பங்களாதேஷ்யில் இருந்து பெரும் அளவில் முஸ்லீம்கள் இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக குடியேறிஉள்ளார்கள்.

அவர்களில் பங்களாதேஷ் இந்துக்களை விட்டு விட வேண்டும்.

முஸ்லீம்கள் ரோகின்கோ முஸ்லீம்கள் அனைவரையும் அகதிகளாக அறிவிப்பு செய்து அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் 2 பிள்ளைகளுக்கு மேல் பெறறுக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள்தாம்.எத்தனை மனைவிகள் இருந்தாலும் ஒரு கணவனுக்கு இரண்டு குழந்தைதான் அனுமதி. அனைவருக்கும் இரண்டு குழந்தை பிறந்த உடன் கருத்தரிப்பு தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து அடைக்கலம் பெற்றோம். இந்தியாவில் துலுக்கம் பெரும்பான்மை பெற்றால் இந்துக்கள் என்ன கதியை அடைவார்கள் என்பது முகலாய படையெடுப்பு கதைகளை படித்தால் தெரியும்.

Dr.Anburaj said...

முஸ்லிம்களுக்கு பல சிரமங்களை கொடுப்பதன் மூலம் இஸ்லாத்தை இந்தியாவிலிருந்து ஒழித்து விடலாம் என்பதும் மோடி, மற்றும் அமித்ஷாவின் கணக்கு. இதிலும் அவர்கள் தோல்வியையே தழுவப் போகிறார்கள். எநத அளவு வறுமையை நோக்கி முஸ்லிம்கள் செல்கிறார்களோ அந்த அளவு அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை வலுப்பெறும். வரலாறு அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளது. ஆப்ரிக்காவில் இந்த அளவு வறுமை வாட்டியும் அவர்கள் இஸ்லாத்தை கை விடவில்லை
----------------------------
இந்தியாவில் பிறந்து வாழும் முஸ்லீம்கள் அனைவரும் இந்தியர்கள். அரேபியவல்லாதிக்க சிந்தனை முற்றிலும் ஒழிக்கப்படும். ஆப்பிரிக்காவில் வறுமை ஏற்பட்டதற்கு காரணமே அரேபிய வல்லாதிக்கம்தானே காரணம். குரான் படிப்பான்.பின் பிறகு நான் அசல் முஸ்லீம் நீ காபீர் என்று சண்டையிடுவான். ஆயிசா உதுமானை காபீர்என்று திட்டியதுபோல. பின் உதுமான கொலை செய்யப்பட்டாா்.கொலை செய்தவன் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. கல்வி அறிவியல் கல்வி மருத்துவம் என்று மககள கவனம் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.குரானை படித்தவன் தானும் உருப்பட மாட்டான்.பிறரையும் உருப்பட விடமாட்டான். வறுமைதான் மிச்சம்.