Followers

Sunday, July 05, 2020

பெரும்பாலும் காவலர்களும் நல்லுள்ளங்களே..!!

பெரும்பாலும் காவலர்களும் நல்லுள்ளங்களே..!!
100 % நல்லவர்கள் மட்டும் பணியுரியும் எந்த துறையுமே உலகில் இல்லை. எல்லா துறையிலும் தீயவர்கள் சில பேர் இருந்தாலும், நல்லவர்களே அதிகம் இருப்பார்கள். அதே போன்று தான் நம் காவல்துறையும்..
இந்த காவலர் பெயர் சையது அபுதாஹீர். 23 வயது இளம் காவலரான இவர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பதட்டத்துடன் வருபவரை நிறுத்தி விசாரிக்கிறார்.
அதற்கு அந்த நபர் திருச்சி அருகே சிற்றூரில் உள்ள தனது ஏழை கர்ப்பிணி மனைவியை மிகுந்த சிரமத்திற்கிடையில் 7 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும், தாயும் சேயும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் மருத்துவர் சிகிச்சைக்கு இரத்தம் கேட்டு அதற்காக தான் அலைவதாகவும் காவலரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட காவலர் தானும் அதே வகை இரத்தப்பிரிவு என சொல்லி இரத்தத்தை தானமளிக்கிறார்.
அறுவை சிகிச்சை முடிந்து தாயும் சேயும் நலம் பெறுகிறார்கள். விஷயமறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த காவலரின் சேவையை பாராட்டி ரூ 1,000/- சன்மானம் அளிக்கிறார். மேலும் இதுபற்றி விவரம் அறியும் தமிழக காவல்துறை இயக்குநரும் அவரின் சேவையைப் பாராட்டி ரூ 10,000/- சன்மானம் அளிக்கிறார்.
அந்த ரூ 11,000/- சன்மானத் தொகையை காவலர் முழுவதுமாக ஏழை கர்ப்பிணி பெண்ணின் மருத்துவ செலவிற்கு அளித்து விட்டு எப்போதும் போல் தன் கடமையில் ஈடுபட்டுள்ளார் இந்த காவலர்.
உதவிக்கு பதவி அதிகாரம் முக்கியமல்ல ! மனம் தான் வேண்டும் !!
குறிப்பு : இது சில வாரங்களுக்கு முன்புள்ள செய்தி, இருப்பினும் களங்கம் சுமத்தப்படும் காவல்துறையின் மத்தியில் இவர்களை போன்ற நல்உள்ளங்களும் பணி செய்கின்றனர், என்று உணர்த்தவே இப்பதிவு.


1 comment:

Dr.Anburaj said...


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:322)

தொண்டு செய்த காவலா் ஒரு முஸ்லீம் என்வேதான் பதிவிட்டுள்ளீர்கள்.
இருப்பினும் நல்ல செய்தி. வாழக