Followers

Tuesday, July 14, 2020

மோடியின் கையாலாகதனத்தால் ஈரானின் ரெயில்வே ப்ராஜக்ட் சீனாவுக்கு!

மோடியின் கையாலாகதனத்தால் ஈரானின் ரெயில்வே ப்ராஜக்ட் சீனாவுக்கு!
ஈரானில் உள்ள சபஹார் போர்ட்டிலிருந்து ஜெஹதான் வரையிலான ரெயில்வே ப்ராஜக்ட்டை ஈரான் இந்தியாவுக்கு வழங்கியிருந்தது. ஆனால் இந்தியாவோ அமெரிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஈரானிடமிருந்து இறக்குமதி செய்த பெட்ரோலிய பொருட்களுக்கு தடை விதித்தது. ரெயில்வே ப்ராஜக்ட்டையும் துரித கதியில் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டது. இதனால் கோபமடைந்த ஈரான் தற்போது அந்த ரயில்வே ப்ராஜக்டை சீனாவின் உதவியோடு தானே செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த வழித் தடமானது நமது பொருட்களை ஆப்கானிஸ்தானத்துக்கு கொண்டு செல்வதற்கான மிக முக்கியமான வழித்தடமாகும். மற்றொரு வழித்தடத்தை பாகிஸ்தான் தடுத்து விட்டது. இருக்கும் ஒரே வழி சபஹார் போர்ட்தான். இதன் மூலம் நமக்கு பல மில்லியன் அந்நியச் செலாவணி வர்த்தகம் நடைபெற வேண்டிய இடமிது. அதனையும் இழந்து விட்டு தற்போது கையை பிசைந்து கொண்டுள்ளது இந்தியா.
இது பற்றி எல்லாம் கவலை கொள்ளாத மோடியும் அமித்ஷாவும் ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பதில் மும்முரமாக உள்ளனர்.
தகவல் உதவி
எகானமிக்ஸ் டைம்ஸ்
14-07-2020
தமிழாக்கம் சுவனப்பிரியன்.




No comments: