கேரளம் கொல்லத்தை சேர்ந்த சகோதரர் ராஜேஷ், எப்படி முஹம்மது பிலாலாக மாறினார் என்ற இவரின் கருத்தையும் இவரின் ஆமான பேச்சையும் கேட்டு ,இந்த சகோதரரின் இமானையும் கண்டு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என்னை அல்ஹம்துலில்லாஹ்,
முஹம்மது பிலால் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் ;
"நான் 16 வயதில் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டேன், எனது 19 வயதில் ஒரு பள்ளிக்கு சென்று நான் இஸ்லாத்தை ஏற்க்க ஆசைப்படுவதாக கூறிய போது என்னை உன் குடும்பாத்தாரிடம் சொல்லிவிட்டு வா என்றார்கள் என் குடும்பாத்தார்களிடம் நான் சொல்லிய போது அதை அவர்கள் ஏற்க்கவில்லை, மனதளவில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு 30வயது வரை அப்படியே இருந்தேன் பிறகு நானாக ஒரு பள்ளிக்கு சென்று ஓழு செய்து கொண்டு தொழுது கொண்டேன் பிறகு ஒரு சகோதரரின் உதவியுடன் லாஹி லாஹா இல்லாஹ் முஹம்மது ரஸுல்லாஹ் என்ற கலிமாவை மனதார ஏற்று கொண்டேன், சமுக வளைத்தளங்களில் நான் குர் ஆன் ஓதிய வீடியோ பதிவை செய்த போது என்னை சிலர் காசுக்காக மதம் மாறி விட்டதாக கூறுகின்றனர், கண்டிப்பாக இல்லை நான் இன்றளவும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். இது எனக்கு கிடைத்த அருள். நான் இறப்பிற்க்கு பிறகான வாழ்க்கையையே நேசிக்கிறேன், அதுவுமின்றி இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. நான் இருந்த முன்பு என் மதத்தை இழிவாகவும் நான் நினைக்கவில்லை. காரணம் இஸ்லாம் கூறுகிறது உனது மார்க்கம் உனக்கு எனது மார்க்கம் எனக்கு என்றும் பிற மதங்களை இழிவாக பேச கூடாது என்றும் இஸ்லாம் எச்சரித்துள்ளது" என்றும் மிகவும் தெளிவாக பேசி உள்ளார் ...
தன் பெயருக்கு ஏற்றார் போல் முஹம்மது பிலால் என்ற பெயர் வைத்ததாலே எண்ணவோ உலகின் முதல் பாங்கு ஒலிக்க செய்த பிலால் (ரலி)அவர்களை போல் அழகிய குரலுடன் பாங்கும் சொல்லி வருவதுடன் யாஸின் சூறாவையும் ஓதும் குரல் வளத்தையும் உச்சரிப்பையும் கேளுங்கள் ...
No comments:
Post a Comment