Followers

Sunday, February 15, 2015

கிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா?



உலகில் முன்னேறிய நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா, ஜெர்மனி, துபாய் போன்ற இன்னும் பல நாடுகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உடல் உழைப்பு சார்ந்த கை பந்தாட்டம், கால் பந்தாட்டம், கூடைப் பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, மேற்கு இந்திய தீவுகள் என்று வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை அதிகமாகக் கொண்ட நாடுகளே இந்த விளையாட்டை பிரபலப்படுத்தி மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ளன. இந்தியா முன்னேற வேண்டுமானால் முதலில் இந்த தயிர் சாத ஆட்டமான கிரிக்கெட்டை ஒழித்து மற்ற ஆட்டங்களை பிரபலப் படுத்த வேண்டும். அப்போதுதான் மற்ற ஆட்டக்காரர்களுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் கிடைக்கும்.

இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடந்தால் ஏதோ பெரும் போர் நடப்பது போல் பில்டப் கொடுத்து மக்களை மடையர்களாக்குவதும் ஓரளவாவது குறையும். மாணவர்களிலிருந்து வயதான கிழடுகள் வரை அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து கிடக்கும் பைத்தியக்காரத் தனமும் குறையும். சினிமா கூத்தாடிகளின் பின்னால் சென்று சீரழிவதை விட இது ஓரளவு தேவலாம் என்று கூறிக் கொள்ளலாம். இப்படி எல்லாம் எழுதுவதால் விளையாட்டுக்கு எதிரி என்று என்னை யாரும் எண்ண வேண்டாம். எனது பள்ளி சார்பாக பல முறை பால் பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொண்டு பல முறை வெற்றி பெற்றவன். பள்ளிகளில் அவசியம் விளையாட்டு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த கிரிக்கெட் இரண்டு சதமே உள்ள ஒரு இனத்துக்கானது என்று எழுதப்படாத விதி ஒன்று நம் நாட்டில் உள்ளது. அதனையும் மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது அவா.

-------------------------------------------

"Eleven fools are playing but eleven thousand fools are watching" - George Bernard Shaw

Anonymous said.....

Firstly,cricket is a game just like any other game.The game has become more popular in the country than any other game.This is resulting in subjugation of other sports. People are paying more than due importance to this game.

"India loses in Olympics.Nobody bats an eye.Cricket team loses one t20 world cup and everyone goes crazy."
Some common occurences are:

-Student Unions postpone exams for the whole state.
-Cooking is stopped in the house unless its very necessary.
-Shops are jammed,there are road shows,people become highly unattentive,go on making unnecessary comments and suggestions as if they have known this game and played it their whole life.They find mistakes in the teams decision.
THESE THINGS ARE REALLY RIDICULOUS.I feel like saying "WHO THE HELL YOU THINK YOU ARE"
-People stop caring and make unwanted noise to show there so called love for cricket and disturb people.There might be a child who is studying to shape his future.There might be a patient nearby.
-Next day,a whole lot of people go on discussing the issue or issues and go on making predictions like parrot tellers which are just based on NOTHING . It takes a while for these persons to come back to their own life.
-The most evil of all is that theres lots of money betting and other filthy practices.

"All that I am saying is Too much of anything is always bad."
If you are crazy of sports its okay.If you know about other games,sports and athletics just as fine you know about cricket then it is fine too.But its an appeal to the people becoming mad about cricket:"Stop behaving weird.Your purpose of birth is not watching cricket only".

No comments: