ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு.
-சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம்
பொருள்: ஒன்பது வாசல் கொண்ட தோல் பையான இந்த உடம்பின் மீது அளவு கடந்த அன்பு வைத்து மனம் போன போக்கில் அலைந்து திரிந்தாயே மனிதா! எங்கிருந்தோ தத்தித் தத்தி நடந்து வந்து சட்டை போன்ற தங்கள் இறக்கைகளை பட பட வென அடித்து இறந்த உடல்களை தன் கூறிய அலகால் குத்திக் கிழித்து தின்பதை தினமும் பார்க்கிறாயே! இந்த நிலையை பார்த்த பின்பும் உலக ஆசைகளில் மயங்கி தவறுகளை செய்கிறாயே! என்கிறார் பட்டினத்தார்.
பண்டைய தமிழகத்தில் உடலை எரிக்கும் பழக்கம் இருந்திருக்க வில்லை என்பதை இந்த பாடலின் மூலம் அறிகிறோம். உடலை எரிக்கும் பழக்கம் பிற்கால ஆரியர்கள் வலிந்து புகுத்தியதால் தமிழர்களும் உடலை எரிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-------------------------------------------------------
ஒரு சாதாரண மனிதனுக்குள்ள பலஹீனங்களை வைத்து பாட்டாக பாடியுள்ளார். அதனையும் பார்போம்.
“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”
“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”
“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”
“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே”
“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”
“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”
“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”
இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.
“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”
காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
கன்னி வனநாதா ! கன்னி வனநாதா !
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ?
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ? (18-24)
என்று அழுகிறார்.
இவ்வாறு அழகிய கருத்துள்ள தமிழ் பாடல்கள் பல இருக்க ஒன்றுக்கும் உதவாத ராமாயணத்தை மக்களிடம் பிரபலப் படுத்திய பெருமை பார்பனர்களையே சாரும். இனி வருங்காலங்களிலாவது பாடப் புத்தகங்களில் பழைய தமிழ் பாடல்களை வைத்து தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை மீட்டெடுப்போம்.
No comments:
Post a Comment