தன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர மங்கை!
துருக்கியை தாயகமாக கொண்ட ஜெர்மன் பிரஜை தகாஸி அலா பரக்கா. சில மாதங்களுக்கு முன் ப்ராங்க் பர்ட்டில் உள்ள உணவு விடுதிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இரு பெண்களின் கூக்குரல் சப்தம் கேட்டுள்ளது. குடி போதையில் இருந்த இரண்டு செர்பிய இளைஞர்கள் அந்த இரண்டு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தனர். அந்த வழியில் பலரும் தங்களுக்கென்ன என்று அந்த பெண்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் சென்று கொண்டிருந்தனர்.
துருக்கி பெண்ணான பரக்காவும் அந்த வழியே சென்றுள்ளார். அந்த இளைஞர்களை நோக்கி கூக்குரலிட்டு அந்த பெண்களை விடச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த செர்பிய இளைஞர்களோ அந்த பெண்களை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற பரக்கா அவர்களின் அருகில் சென்று அந்த பெண்களை இழுத்துள்ளார். இதனால் கோபமுற்ற அந்த இளைஞர்கள் பரக்காவை தாக்க ஆரம்பித்தனர். பிடித்து கீழே தள்ளி விட்டனர். கனமான பொருள் கொண்டு அவரை தாக்கியுள்ளனர். வெறி கொண்ட இரண்டு ஆண்களுக்கு முன்னால் போராட முடியாமல் நிலை குலைந்து கீழே விழுந்தார் பரக்கா. அடி பலமாக இருக்கவே சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
செர்பிய இளைஞர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தி ஜெர்மானிய ஊடகங்கள் மூலமாக விரைவாக பரவியது. இதன் பலனாய் அவரது இறுதிச் சடங்கில் பல ஆயிரக்கணக்கான ஜெர்மானிய மக்கள் கலந்து கொண்டு தங்கள் சகோதரிக்கு கடைசி அஞ்சலியை செலுத்தினர். இவருக்கு 'ஜெர்மனியின் வீர மங்கை' என்ற விருது வழங்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் கையெழுத்து வேட்டை நடத்தி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலோ மார்க்கருக்கு அனுப்பி வைத்தனர். ஜெர்மன் அதிபரும் அந்த பெண்ணின் தீர செயலை பாராட்டினார்.
ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் சில தீவிரவாத நாய்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும், முகமூடி அணிந்து கொண்டு செய்து அதனை 'அல்லாஹூ அக்பர்' என்ற பெயரில் அரங்கேற்றி வருவதையும் தினம் பார்கிறோம். அதனை எல்லாம் பத்தி பத்தியாக எழுதும் ஊடகங்கள் இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து விடும். 'ஜிஹாத்' என்ற சொல்லை சரியாக விளங்கியதால்தான் பரக்கா தனக்கு சம்பந்தமில்லாத இரு பெண்களை காப்பாற்ற போய் தனது உயிரை இழந்திருக்கிறார். 'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு அநியாயத்துக்கு எதிராக போரிடுதல் என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு பெயர்தான் ஜிஹாத். இதல்லாது ஐஎஸ்ஐஎஸ் அல்லது போகோ ஹராம், இந்தியன் முஜாஹிதீன் போன்ற மிருகங்கள் நடத்தும் கொலைகள் அல்ல ஜிஹாத். அதனை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய பெயரில் இயங்கும் இந்த தீவிரவாத குழுக்கள் அனைத்தும் அமெரிக்க யூதர்களால் அரங்கேற்றப்படுபவை. சில நாட்களுக்கு முன்பு 'தாலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல' என்று இதே அமெரிக்கா அவர்களுக்கு நல்லெண்ண சர்டிபிகேட் வழங்கியதையும் ஞாபகப் படுத்திக் கொள்வோம். இந்த உண்மைகள் காலப் போக்கில் வெளி வரும். அது வரை பொறுப்போம்.
இறந்த சகோதரி பரக்காவின் மறு உலக வாழ்வு சிறப்புற அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திப்போம்.
தகவல் உதவி
MORALNEWS24.COM
http://www.moralnews24.com/en/?p=496
No comments:
Post a Comment