Followers

Thursday, February 05, 2015

நன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா?

பொன் முத்து குமார்!

//சுவனப்பிரியன்! அப்படியானால் வாழ்நாளில் மனித குலத்துக்கு நன்மையே செய்த நாத்திகர்கள் கதி ?//

ஒருவனின் மனைவி தனது கணவனுக்கு எல்லா பணி விடைகளையும் செய்கிறாள். வீட்டை அலங்கரிக்கிறாள். மாமியார் மாமனாரை தனது தாய் தந்தையைப் போல கவனிக்கிறாள். கணவன், மாமியார், மாமனாருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுகிறாள். வயதான மாமனாரையும் மாமியாரையும் கழிவறைக்கு தூக்கிச் செல்வதும் இந்த பெண்தான். கணவனும் தனது மனைவிக்கு தனது சம்பாத்தியம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறான். இவ்வளவு சரியாக நடக்கும் மனைவி இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு ஆடவனோடு கள்ள தொடர்பு கொள்கிறாள். இதை அந்த கணவனின் மனம் ஒப்புக் கொள்ளுமா? தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன்? அரிவாளை தூக்கிக் கொண்டு மனைவியை வெட்ட அந்த கணவன் வருவதை சாதாரணமாக பார்கிறோம்.

நமது உடலை நோட்டமிடுங்கள். எவ்வளவு காரியங்கள் தினமும் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து வருகிறது. இந்த உலகம் இவ்வளவு வேகமாக சுற்றியும் அதன் தாக்கம் நமக்கு தெரியாமல் ஒரு தாயைப் பொல் இந்த பூமி நம்மை அரவணைக்கிறது. நமது உடல் தாங்கும் அளவுக்கு சூரியனை தூரமாக்கி வைத்து அதன் மூலம் பல நன்மைகளை வாரி வழங்கும் சக்தி எது? எல்லா கோள்களும் ஒரே நேராக சுற்றிக் கொண்டிருக்க பூமியை மட்டும் சற்று சாய்வாக சுற்ற வைத்து குளிர், வெப்பம், நடுநிலை என்று முக்காலங்களையும் நாம் அனுபவிக்க ஏற்படுத்திய சக்தி எது? இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் பார்க்கும் ஒரு சராசரி மனிதன் நமக்கு மேல் ஒருவன் இருந்து இதனை எல்லாம் ஆட்டி வைக்கிறான் என்ற முடிவுக்கே வருவான்.

இவை அனைத்தும் தானாக உருவாகிக் கொண்டது என்பதை நமது அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒத்துக் கொண்டால் அது பகுத்தறிவே கிடையாது. ஆனால் நாத்திகர்கள் வீம்புக்காக நாத்திக கொள்கையை பிடித்து தொங்கிக் கொண்டுள்ளனர். இது அறியாமையினால் அல்ல: இதனை மனிதனின் திமிர் வாதம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான நாத்திகர்கள் நன்கு படித்து அறிவை தன்னகத்தே கொண்டவர்கள்.

நாத்திகத்தை நிலை நிறுத்த பரிணாமக் கொள்கையை எப்படியாவது முட்டு கொடுத்து உயிர் கொடுக்கப் பார்கின்றனர். ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமித்ததற்கு இடைப்பட்ட இனங்களின் படிம ஆதாரங்கள் ஒன்றைக் கூட டார்வினிஷ்டுகள் சமர்ப்பிக்கவில்லை. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிணமிக்க முதலில் ஜீன்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் உருவ ஒற்றுமைகளை வைத்து குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்று சொன்னால் நம்மை படைத்த இறைவனுக்கு கோபம் வராதா? உடல் ஆரோக்கியமும், செல்வ வளம், குழந்தைச் செல்வம், சமூக அந்தஸ்து என்று இத்தனையையும் இந்த மனிதனுக்கு வாரி வழங்கிய அந்த இறைவனை புறக்கணித்து விட்டு நாத்திகத்தின் பக்கம் சென்றால் அந்த மனிதனை அவன் வாழ்நாளில் என்னதான் நன்மைகள் செய்திருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக இறைவன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வேதங்களில் இறைவன் கூறுகிறான். அந்த கணவன் அறிவாளை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தது போல் நாத்திகர்களை நரகில் தள்ளுவேன் என்கிறான் இறைவன்.

18 comments:

suvanappiriyan said...

//இது குரான் வசனம் அல்ல, யூதர்களின் இது தாளமுத் வசனம். ஸல்லவர்கள் கண்ணுமன்னு தெரியாம காப்பி அடித்து விட்டார்.//

இதை நான் மறுக்கவில்லையே! யூதர்கள், கிறித்தவர்களின் இறைவன் யார்? குர்ஆனை வழங்கிய அதே ஏக இறைவன் தானே. இறைவன் அருளிய வசனங்களோடு தங்கள் கருத்துகளையும் அதில் புரோகிதர்கள் சேர்த்ததால் தானே 'இறை வசனம்' என்ற அதன் பொலிவை இழந்தது? அதனால் தான் குர்ஆனே இறங்க காரணமானது.

நாம் இருவருமே ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம். :-) இந்த வசனம் தல்மூதில் இருக்கிறது என்றும் குர்ஆன் கூறுகிறது. 'இஸ்ரவேலர்களுக்கு இதனை விதியாக்கி இருந்தோம்' என்றும் குர்ஆன் கூறுகிறது.

Anonymous said...

mudiyala

மணி said...

நண்பரே,

சுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும்? அதேபோல் நாத்திகன் பல நல்லவைகளைச் செய்தாலும் கடவுளை ஏற்றுக் கொள்ளாததால் அவன் செய்த நல்லவைகள் பலனில்லாமல் போகும் என்கிறார். ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
https://senkodi.wordpress.com/q-a/#comment-8496

வலிப்போக்கன் said...

பெரும்பாலான நாத்திகர்கள் நன்கு படித்து அறிவை தன்னகத்தே கொண்டவர்கள்.

மணி said...

திரு சுவனப்பிரியன்,

உங்களின் இந்த பதிவுக்கு நண்பர் செங்கொடி பதிலளித்துள்ளார். உங்கள் பதில் என்ன?
https://senkodi.wordpress.com/2015/02/06/god-clandestine-affair/

suvanappiriyan said...

Thiru Mani!

செங்கொடியின் வழக்கமான வழ வழா கொழ கொழா பதிலை படித்தேன். கடவுள் என்ற ஒன்று கிடையாது என்பதை எந்த அறிவியல் அல்லது எந்த வரலாற்று அய்வாளர் நிரூபித்துள்ளார்? அவரிடம் இதற்கான ஆதாரத்தைக் கேளுங்கள்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு நேரிடையான ஆதாரங்களை ஆத்திகர்கள் எவ்வாறு சமர்பிக்கவில்லையோ அதே போல் நேரிடையாக இன்ன காரணத்தினால்தான் இந்த உலகம் உண்டானது. இந்த உயிர்கள் உண்டானது. இந்த உயிர்களில் பிரதானமான மனிதன் உண்டானான் என்று எந்த ஆய்வு முடிவுகளும் அறிவிக்கவில்லை. எல்லாமே அநுமானத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவரிடம் விளக்கம் கேளுங்கள்.

சகதியிலேயே உழன்று கொன்றிருக்கும் ஒருவருக்கு ஆத்திகர்களின் வாதமும் அவ்வாறு தான் தோற்றமளிக்கும். :-)

மணி said...

செங்கொடி, on 10/02/2015 at 2:09 பிப
நண்பர் மணி,
நல்லதே செய்யும் நாத்திகர்களுக்கு நரக தண்டனை சரியா என்பது கேள்வி. இதற்கு பதிவர் சுவனப்பிரியன் தரும் பதில் ஓர் உதாரணம் மட்டுமே. இதற்கு நாம் அந்தக் கேள்விக்கு நேரடியாகவும், அவர் கூறிய உதாரணத்தின் வழியாகவும் பதில் கூறினோம். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் பதிலோ,விளக்கமோ அளித்திருக்கிறாரா? இல்லை. மாறாக, நம்முடைய பதில் வழவழா கொளகொளாவென்று இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். என்ன விதத்தில் நம்முடைய பதில் வழவழா என்றும் கொளகொளாவென்றும் இருக்கிறது? என்ன அடிப்படையில் அந்தப் பதில் ஏற்புடையதில்லாமல் இருக்கிறது? அந்தப் பதிலில் இருக்கும் தவறு என்ன? ஏதாவது கூறமுடியுமா? பதிவர் சுவனப்பிரியனால்?
இது அவருக்கு முதன்முறையல்ல. சில ஆண்களுக்கு முன்பு உங்களைப் போலவே டென்தாரா என்பவர் என்னிடம் பரிணாமம், கடவுள் நம்பிக்கை குறித்து சில கேள்விகளை வைத்து அதற்கு நான் பதில் கூறியிருந்தேன். பின்னர் ஒருநாள் பதிவர் சுவனப்பிரியன் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது டென்தாரா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பதிவர் சுவனப்பிரியனின் பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. ஏற்கனவே அதற்கு பதில் கூறியிருக்கிறோம் எனும் அடிப்படையில் அந்தப் பதிவில் இயன்றால் பதில் தருக என்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தோம். நம்முடைய பதிலை வாசித்த பதிவர் சுவனப்பிரியன், தனக்கு பதில் கூற நேரமில்லாதிருப்பதால் சில கேள்விகளை கேட்கிறேன் அதற்கு பதில் கூறுங்கள் என்று கேட்டு பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார். அவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தனிப் பதிவொன்றில் பதிலெழுதி முறைப்படி அவருக்கும் தெரிவித்து வெளியிட்டிருந்தோம். இன்று வரை அதற்கு பதிலில்லை. இப்போது நீங்கள், இப்போதாவது பதில் கிடைக்குமா? பதிவர் சுவனப்பிரியனிடம் கேட்டுச் சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன்.
மற்றப்படி பதிவர் சுவனப்பிரியன் முன்வைத்திருக்கும் அனைத்து விசயங்களுக்கும் ஆதாரங்களுடன் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அவற்றை அறிவு நேர்மையுடன் ஏற்கவோ மறுக்கவோ பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா? இருந்தால் விவாதமாகவே நடத்தி விடலாம். அவர் செங்கொடி தளத்துக்கு வந்தாலும் சரி, அல்லது அவருடைய தளத்தில் என்றாலும் சரி எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை.
அவ்வாறன்றி நெருக்கடியான தருணங்களில் பதில் கூறாது அமைதி காப்பதும், பின்னர் பிரிதொரு சந்தர்ப்பத்தில் அதே விசயத்தை புதியது போல் பேசி கேள்வி எழுப்புவதும் மதவாதிகளுக்கு கைவந்த கலை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.

suvanappiriyan said...

திரு மணி!

ஏற்கெனவே பலரும் பலமுறை செங்கொடியோடு பின்னூட்டங்களின் மூலம் விவாதித்தாகி விட்டது. இப்போது இவரிடம் தனியாக எனது தளத்திலோ அல்லது அவரது தளத்திலோ விவாதிக்க வேண்டுமானால் நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அந்த அளவு விவாதத்தில் கவனம் செலுத்த என்னிடம் நேரம் இல்லை. யாரென்றே முகம் தெரியாமல் இணையத்தின் மூலம் விவாதித்து ஒரு முடிவையும் எட்ட முடியாது. நேரிடையான விவாதமே ஒரு முடிவைக் கொடுக்கும்.

எனவே அவர் தரப்பிலிருந்து குறிப்பிட்ட சில பேரும் ஆத்திக இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட நபர்களும் நேரிடையாக அமர்ந்து விவாதிப்போம். அதுதான் ஒரு முடிவை எட்டும். இதற்கு முன்பு அனைத்து தலைப்புகளிலும் இவரோடு பல இஸ்லாமியர்கள் விவாதித்து உள்ளனர். எதிலுமே ஒரு முடிவு எட்டப்படவில்லை.

எனவே நேரடி விவாதத்திற்கு அவர் தயாரா என்று கேளுங்கள். அதற்கு உண்டாகும் செலவுகளைக் கூட நானோ அல்லது இன்னும் சிலரோ கூட பகிர்ந்து கொள்கிறோம். அவருக்கு எந்த செலவும் இல்லை. நேரடி விவாதத்துக்கு அவர் தரப்பிலிருந்து மூன்று பேரை அனுப்பட்டும். எங்களது தரப்பிலிருந்து மூன்று பேர் வருவார்கள். தன்னை அவர் வெளிக் காட்டிக் கொள்வதில் பயம் இருந்தால் அவர் தரப்பில் வேறு யாருமாவது வரட்டும். இதனை வீடியோவும் எடுப்போம். பிறகு பொது மக்கள் பார்த்து ஒரு முடிவினை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
அவரிடம் நேரடி விவாதத்துக்கு தயாரா என்பதை கேட்டு சொல்லுங்கள்.

மணி said...

செங்கொடி, on 11/02/2015 at 4:54 பிப
நண்பர் மணி,
இதில் நேரம் செலவழிப்பது வீண் என எண்ணுகிறேன்.
முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டவுடன் நேரடி என பிலாக்கணம் செய்வது மதவாதிகளின் வாடிக்கை தான். நான் ஏற்கனவே பலமுறை தெளிவாக அறிவித்திருக்கிறேன், நேரடி விவாதம் எதற்கும் நான் தாயாரல்லன் என்று. இதை ஒரு தனிப்பதிவாகவும் கூட வெளியிட்டிருக்கிறேன். அதன் பிறகும் நேரடியாய் வந்தால் தான் ஆயிற்று என்பவர்களை என்ன சொல்லி அழைப்பது?
பதிவர் சுவனப்பிரியன் எழுத்தில் தெரிவித்த கருத்துக்கு, நான் எழுத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். இதற்கு அவர் எழுத்தில் பதிலளிப்பதில் என்ன பிரச்சனை? எழுத்தில் பதிலளிக்க மறுப்பதற்கு காரணங்களாக சிலவற்றை தெரிவித்திருக்கிறார். 1) நேரமின்மை, 2) முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை, 3) நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும். இந்த மூன்று காரணங்களும் தவறானவை.
தனக்கு அதிகமாக நேரம் கிடைப்பதால் தான் இணையத்தில் அதிகம் எழுதிக் கொண்டிருப்பதாக அவரே அண்மை பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார். அதாவது, தனக்கு கம்பனி செலவிலேயே இணைய தொடர்பு கிடைத்திருப்பதாலும், 2மணி நேரம் மட்டுமே அலுவலக வேலை இருப்பதாலும், குடும்பம் உடனில்லாமல் தனியாக இருப்பதாலும் சொந்த வேலைகள் போக நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் தனக்கு நேரம் கிடைப்பதால் தான் தன்னால் அதிகம் எழுத முடிகிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இங்கு தனக்கு நேரம் இல்லை என்கிறார். ஏன் பதிவர் சுவனப்பிரியன் தனக்குத் தானே முரண்பட வேண்டும்? எனவே, நேரமின்மை என்பது தவறான காரணம்.
ஒரு பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு முகம் தெரிந்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையா? கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்கு முகம் எதற்கு? நேரடியாக தோன்ற வேண்டும் என்பது எதற்கு? முகம் தெரிவதும், தெரியாமலிருப்பதும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்? இணையப் பரப்பில் எனக்கு முன்பிருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பதிவர் சுவனப்பிரியன். அவர் இதுவரை ஏத்தனையோ பேர்களிடம் விவாதித்திருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார், பதில் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரிடமும் முகம் தெரிந்து நேரடியாகத்தான் உரையாடினாரா? அல்லது முகம் தெரியாத யாரிடமும் அவர் விவாதித்ததில்லையா? என்றால் இப்போது மட்டும் ஏன் நேரில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? எனவே, முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை என்பது தவறான காரணம்.
நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும், எழுத்து விவாதத்தில் முடிவை எட்ட முடியாது என்பது பிழையான புரிதல் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட வேண்டுமென்றால், விவாதிக்கும் இருவரும் நேர்மையுடனும், தேடலுடனும், பரிசீலனையுடனும் அந்த விவாதத்தை அணுக வேண்டும். அப்போது தான் அந்த விவாதத்தில் சரியான முடிவை எட்ட முடியும். மாறாக முன் முடிவுடன் தன்னுடைய கருத்தைத் தவிர வேறெதையும் பரிசீலிக்க மாட்டேன் எனும் நிலையெடுத்தால் அந்த விவாதத்தில் முடிவை எட்ட முடியாது. நேரடி விவாதம் என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் இதில் ஒன்று தான். ஆக விவாத நேர்மையுடன் இருக்கிறோமா? இல்லையா? என்பது தான் முக்கியமே தவிர நேரடி விவாதமா? எழுத்து விவாதமா? என்பது இங்கு முக்கியம் இல்லை. எனவே, நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும் என்பது தவறான காரணம்.

மணி said...

ஏற்கனவே, செங்கொடி தளத்தில் நடந்த விவாதங்களை பதிவர் சுவனப்பிரியன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அத்தனை விவாதங்களிலும் எனக்கு எதிர்நிலையில் நின்று விவாதித்த அனைவரும் விவாத நேர்மையற்று விவாதித்தார்கள் என்பதை அவர்களின் வாதங்களிலுருந்தே எடுத்துவைத்து என்னால் நிருவ முடியும். அதேநேரம் என்னுடைய வாதங்களிலிருந்து நான் விவாத நேர்மையின்றி விவாதித்திருக்கிறேன் என்று பதிவர் சுவனப்பிரியனோ அல்லது வேறு எவரோ நிருவ முடியுமா? விவாத நேர்மையுடன் விவாதிக்க எப்போதும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன், அந்த விவாத நேர்மை பதிவர் சுவனப்பிரியனுக்கு இருக்கிறதா? என்பது தான் இங்கு கேள்வியின் மையமாக இருக்கிறதேயன்றி, நேரடியாகவா? எழுத்திலா? என்பதில் இல்லை.
நான் ஏன் நேரடியாக விவாதிக்க விரும்புவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையான காரணம் நான் செங்கொடியாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பது. அதனால் தான் நான் எழுத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன், களத்தில் நான் வேறு தன்மைகளுடன் இருப்பேன். ஆனால் பதிவர் சுவனப்பிரியன் போன்றவர்கள் அப்படி அல்லர். அவர்கள் என்ன அடையாளத்துடன் எழுதுகிறார்களோ, அதே அடையாளத்துடன் அவர்கள் உலவவும் செய்கிறார்கள். இந்த வேறுபாட்டை புரிந்திருப்பதால் தான் அவர்களால் நேரடி விவாதம் என்பதை திரையாக பயன்படுத்த முடிகிறது. மற்றப்படி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதெல்லாம் ஒரு பொன்மாற்று தான். என் சார்பில் யாரையேனும் விவாதிக்கச் செய்தால் அது நான் விவாதிப்பது போலாகுமா? பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு எதிரான என் பதிவு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன? இரண்டில் எது சரி? என்பது தான் இங்கு பிரச்சனை. தன்னிடம் பதில் இல்லை என்றால் நேர்மையாக அதை தெரிவிக்கலாம். அல்லது அறிந்தவர்களிடம் கேட்டுச் சொல்ல அவகாசம் வேண்டும் என்று கேட்கலாம். அல்லது என்னிடம் பதில் இல்லை வேறு யாரிடமும் கேட்டுச் சொல்லவும் இயலாது என்பன போன்று கூறிவிடுவது தான் நேர்மையானவர்களின் செயல். மாறாக நேரடியாக வாருங்கள் நான் செலவை ஏற்றுக் கொள்கிறேன், முடியாவிட்டால் வேறு யாரையாவது அனுப்புங்கள் என்பதெல்லாம் ஏமாற்று.
நண்பர் மணி இங்கு தொடக்கத்திலிருந்தே கவனித்து வாருங்கள், பதிவர் சுவனப்பிரியன் பதிவில் தொக்கி நிற்கும் அனைத்து அம்சங்களையும், பின்னர் அவர் அளித்து வந்த பதில்களின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து பதிலெழுதி வருகிறேன். ஆனால் என்னுடைய பதில் எதனையும் பதிவர் சுவனப்பிரியன் பரிசீலித்து பதிலளிக்கவில்லை. முதலில் வழவழா கொளகொளா என்று குறிப்பிட்டார். பின்னர் நேரடியாக விவாதிக்க வாருங்கள் என்கிறார். ஆனால் கடைசி வரை பதிலில்லை. இது போன்றவர்களிடம் நேரடியாக விவாதித்து என்ன பயன்? எழுத்தில் விவாதித்து என்ன பயன்? பலன் எதுவும் இருக்கப்போவதில்ல என்பதால் தான் இதில் நேரம் செலவழிப்பது வீண் என்று சொல்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

மணி said...

திரு. சுவனப்பிரியன் அவர்களுக்கு, நான் உங்களுடைய தளத்தையும், நண்பர் செங்கொடியின் தளத்தையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறிய விசயம் எனக்கு சரி எனப்பட்டதால் அதைப்பற்றி செங்கொடி என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரிடம் கேட்டேன். அது இப்போது நேரடியா எழுத்தா என்று போய் நிற்கிறது. செங்கொடி வந்தாலும் வராவிட்டாலும், அதற்கான பதிலை மட்டும் சொல்லிவிடுங்களேன். எனக்கு அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ மணி!

நாத்திகர்களுக்கு விவாதம் ஒரு பொழுது போக்கு. எதையுமே நம்பாத ஒருவன், எல்லாவற்றையும் ஏன் என்று கேள்வி கேட்டு அதை விவாதிக்க முடியும். கேள்வி மேல் கேள்வியும் கேட்டு கொண்டே இருக்கலாம். அது எளிது. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. எனது நேரமும் அவரது நேரமும் விரயமானதுதான் மிச்சமாக இருக்கும். ஒரு முடிவையும் எட்ட இயலாது. அவர் என்னிடம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான பதில் அவரது தளத்திலும் எனது தளத்திலும் பலமுறை கொடுத்தவைகளே! அதனை திரும்பவும் தோண்ட நான் விரும்பவில்லை.

கம்யூனிஷமும் நாத்திகமும் சாதிக்காததை ஆத்திக இஸ்லாம் சாதித்துள்ளது. இதனை கம்யூனிஷம் வீழ்ந்து அந்த நாடுகளில் இஸ்லாம் மறுமலர்சி பெற்று வருவதை தினமும் பார்கிறோம். இறைவன் இருக்கிறான் என்பதற்கு நமது சிந்தனையை இந்த பிரபஞ்சத்தில் உலவ விட்டாலே பதில் கிடைத்து விடும். ஒன்றும் இல்லாமல் எல்லாமே தானாக உருவாகிக் கொண்டது என்பதே முதலில் பகுத்தறிவு வாதத்துக்கு எதிரானது. அடுத்து இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் இறை வேதமான குர்ஆனுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது இறை வேதம்தான் என்பதற்கு இதை விட ஒரு சாட்சி நமக்கு தேவையில்லை. எழுதப் படிக்க தெரியாத ஒரு பாமர அரபி எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய எல்லா நாட்டு மக்களும் பின் பற்றக் கூடிய ஒரு வேதத்தை தர இயலவே இயலாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் செங்கொடி நாத்திக கருத்துக்களை பரப்பியும் ஒரு சதவீத இஸ்லாமியரைக் கூட அவரது கொள்கையின் பக்கம் திருப்ப முடியவில்லை. முன்பை விட இஸ்லாமிய இளைஞர்களிடம் குர்ஆனின் தாக்கம் அதிகமாகியிருப்பதை நீங்களும் அறிவீர்கள். தர்ஹா வணக்கங்களும் மூடப் பழக்கங்களும் ஒழிந்து 80 சதமான இஸ்லாமியர்கள் ஏகத்துவத்தை நோக்கி வந்து விட்டனர்.

நானும் இறைவன் இருக்கிறான் என்பதை கண்ணுக்கு எதிரில் நிரூபிக்க வில்லை. அவரும் இறைவன் இல்லை என்பதை எனது கண்ணுக்கு எதிரில் நிரூபிக்க முடியவில்லை. இருவருமே நம்பிக்கை அடிப்படையில்தான் விவாதித்து வருகிறோம். இருவருமே சம தூரத்தில் தான் இருக்கிறோம் என்பதாக வைத்துக் கொள்வோம்.

இன்று நான் இஸ்லாத்தை பின் பற்றுவதால் என்ன நஷ்டத்தை பெற்று விட்டேன்? சமூக அந்தஸ்து, சுய மரியாதை, கல்வி, மனைவி, குழந்தை, செல்வம் என்று சகல இன்பங்களையும் பெற்று சந்தோஷமாக வாழ்கிறேன். செங்கொடி சொல்வது போல் இதோடு இந்த வாழ்வு முடிந்து விட்டால் எனக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை.

ஆனால் செங்கொடி சொல்வதற்கு மாற்றமாக நாளை இறைவன் என்ற ஒருவன் இருந்து சொர்கம் நரகம் எல்லாம் இருந்து விட்டால் அங்கு இவர் நஷ்டவாளியாக ஆவார். குடும்ப பகை, ஊர் பகை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மன நிம்மதியும் இல்லாமல் தனக்குத் தானே சட்டங்களை வகுத்துக் கொண்டு ஊரையும் சொந்தங்களையும் விட்டு விலகி ஒரு குறிப்பிட்ட இலக்கு இல்லாமல் வாழ்ந்து மடிந்து இந்த நாத்திக கொள்கையை வைத்து எதனை சாதித்து விடப் போகிறார்? இன்று வரை இவரது மனைவியைக் கூட இவரது கொள்கையின் பக்கம் திருப்ப முடியவில்லை என்று இவரது ஊர் நண்பர்கள் நேற்றுதான் என்னிடம் கூறினர். இத்தனை வருடம் மாய்ந்து மாய்ந்து எழுதி கண்ட பலன் இதுதான்.

இந்து மதத்திலும் கிருத்தவ மதத்தின் அதன் வேத நூல்கள் மனிதக் கரங்களால் மாசுபட்டதால் அந்த மதங்களில் நாத்திகம் வேகமாக பரவி இன்றுவரை அவர்களுக்கு ஒரு பிரச்னையாக உள்ளது. ஆனால் குர்ஆனுக்கு அந்த நிலை ஏற்படாததால் செங்கொடியைப் போன்று இன்னும் ஓராயிரம் செங்கொடிகள் வந்தாலும் மார்க்க அறிவே இல்லாத ஒரு முஸ்லிமையும் கூட மாற்றி விட முடியாது. உலக முடிவு நாள் வரையில் இதுதான் நிலைமை. இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

செங்கொடி மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்வு உள்ளது என்பதை இன்றில்லா விட்டாலும் என்றாவது உணருவார். அவருக்காக பிரார்திப்போம்.

suvanappiriyan said...

நாங்கள் நாத்திகர்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள் என்பார் செங்கொடி. உலகில் நடக்கும் பல கொலைகளுக்கு மதங்களின் காட்டுமிராண்டி கொள்கைகளே காரணம் என்று சந்தடி சாக்கில் பொய்களை அவிழ்த்து விடுவார்.

நேற்று அமெரிக்காவில் மூன்று மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது படித்திருக்கலாம். மூன்று பேரும் முஸ்லிம்கள். ஓய்வு நேரங்களில் ஒரு சாரிடி மூலம் அங்குள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் போன்று பல பொது நல சேவை செய்து வந்தனர் இந்த மூன்று முஸ்லிம்களும். இது பிடிக்காத செங்கொடி போற்றி புகழும் நாத்திக கொள்கையை கொண்ட க்ரேக் ஸ்டீவன் என்ற கொடியவன் இந்த மூன்று முஸ்லிம்களையும் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். இதற்கு காரணமாக அவன் சொல்வது அவன் தனக்குள் ஏற்றுக் கொண்ட நாத்திக கொள்கையைத்தான்.

நாத்திக கொள்கை வளர்வதற்கு தடையாக இருப்பது இந்த மதவாதிகள்தான். எனவே தான் கொன்றேன் என்று பேட்டி கொடுக்கிறான் இந்த கொடியவன். மறுமை வாழ்வு, சொர்கம் நரகம் என்ற செயல்பாடுகள் எல்லாம் கிடையாது என்ற நம்பிக்கைதான் இந்த கொடுமையை அவனை செய்ய தூண்டியது.

க்ரேக் ஸ்டீவன், செங்கொடி போன்ற நாத்திகர்கள் எண்ணிக்கை பெருகுவது மனித குலத்துக்கு எத்தகைய கேடு என்பதையே நேற்றைய சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


தருமி said...

// நெருக்கடியான தருணங்களில் பதில் கூறாது அமைதி காப்பதும், பின்னர் பிரிதொரு சந்தர்ப்பத்தில் அதே விசயத்தை புதியது போல் பேசி கேள்வி எழுப்புவதும் மதவாதிகளுக்கு கைவந்த கலை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்//

நான் உணந்து கொண்டேன்!

தருமி said...

க்ரேக் ஸ்டீவன் கொடுவினை செய்தான்; தண்டிக்கப்பட வேண்டியவன்.

வரிசையாக நிற்க வைத்து, அல்லாஹூ அக்பர் என்ற கோஷத்தோடு 20 பேரை வெட்டிக் கொன்றவர்கள் செய்தது என்ன...? மதப் பரப்புதலா? மதத் தொண்டா? அவர்களின் ‘மறு வாழ்வில்’ அவர்களுக்கும் சுவனமா...?

மணி said...

திரு சுவனப்பிரியன் அவர்களுக்கு, செங்கொடி பதிவாகவே வெளியிட்டிருக்கிறார். பார்வையிடுங்கள்.
https://senkodi.wordpress.com/2015/02/17/suvana-2/

suvanappiriyan said...

திரு தருமி!
//நான் உணந்து கொண்டேன்!//

நீங்களும் இத்தனை வருஷமா நாத்திக பதிவுகளாக எழுதி குவித்துக் கொண்டுதான் உள்ளீர்கள். இதனால் சாதித்தது என்ன? என்னத்த உணர்ந்தீங்களோ போங்க. உங்களை நினைத்து பரிதாபம்தான் படுகிறேன். கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக!

//வரிசையாக நிற்க வைத்து, அல்லாஹூ அக்பர் என்ற கோஷத்தோடு 20 பேரை வெட்டிக் கொன்றவர்கள் செய்தது என்ன...? மதப் பரப்புதலா? மதத் தொண்டா? அவர்களின் ‘மறு வாழ்வில்’ அவர்களுக்கும் சுவனமா...?//

அவர்கள் இஸ்லாமியர்களே அல்ல. அமெரிக்க ஆயுத வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட கூலிப் படை. முகத்தை யாராவது திறந்து பார்த்துள்ளீர்களா? முகமூடி எதற்கு? அனைவரும் அருமையாக ஆங்கிலம் பேசுகிறார்களாம். அங்கு நடப்பது பணத்துக்கான அரசியல். இப்போதுதான் தாலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல என்று சர்பிகேட்டும் கொடுத்து விட்டார்கள். :-) என்னமோ நடக்குது.... மர்மமாய் இருக்குது.


suvanappiriyan said...

திரு மணி!

பதில் நீண்டு விட்டதால் தனி பதிவாகவே கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_18.html