


'பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்த அளவு அது மக்களால் நம்பப்படும்'
-அடால்ஃப் ஹிட்லர்.
தெஹல்கா பத்திரிக்கைக்காக ஆஷிஸ் கேத்தன் தனது உயிரை பணயம் வைத்து நடத்திய நேர் முக பேட்டியில் முக்கிய சாட்சிகளான மூன்று பேரின் வாக்கு மூலங்களைத்தான் நாம் பார்க்கிறோம். எந்த அளவு ஜோடிக்கப்பட்டு அதன் மூலம் யாரெல்லாம் பலன் அடைந்தார்கள் என்பதை நமக்கு வரலாறு சொல்கிறது. இதனால் அப்பாவிகளான இந்துக்கள் 60க்கு மேற்பட்டவர்களும் முஸ்லிம்கள் 2000 க்கும் மேற்பட்டவர்களும் தங்கள் உயிரை இழந்தார்கள். இறந்த இந்த உயிர்களின் உடம்பை வைத்து இன்று பலர் வெற்றி வாகை சூடியிருக்கலாம். ஆனால் அரசன் அன்று கொல்வான்: இறைவன் நின்று கொல்வான்: அந்த இறைவனின் தண்டனையை நமது காலத்திலேயே நாம் காண இறைவனிடம் பிரார்த்திப்போம்.
டெஹல்காவின் முழு புலனாய்வையும் தமிழில் திரு அ. முத்துக் கிருஷ்ணன் மொழி பெயர்த்து 'குஜராத் 2002 படுகொலை - நம் காலத்தின் மிக பயங்கர நிகழ்வு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதனை வாசல் பதிப்பகமும் தலித் முரசும் வெளியிட்டுள்ளார்கள். விலை ரூ 50. வசதியுள்ளவர்கள் வாங்கி பலருக்கும் விநியோகிப்போமாக!
No comments:
Post a Comment