Followers

Monday, February 16, 2015

இந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா?

இந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா?



நமது வரலாற்று நூல்களை பாடப்புத்தகங்களில் ஒரு செய்தியை படிக்காத இந்தியர்களே இல்லை எனலாம். கஜினி முகம்மது 17 முறை படையெடுத்து வந்து சோமநாத புர ஆலயத்தை கொள்ளையடித்து சென்றான். தமிழகத்தில் மாலிக்காபூர் பல கோவில்களை கொள்ளையடித்து பலரை மதம் மாற்றினான் என்று பல ஆண்டுகளாக படித்து வந்திருப்போம்.

முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை பொருத்த வரை கோவில்கள் இறைவனை வணங்கக் கூடிய இடமாக மாத்திரம் இல்லை. அரசாங்கத்தின் கஜானாவாகவும் செயல்பட்டுள்ளது. அரசர்கள் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளும் புகலிடமாகவும் அன்றைய கோவில்கள் இருந்துள்ளன. இதனால்தான் கோவில்களை சுற்றி மிகப் பெரிய அகழிகள் வெட்டப்பட்டுள்ளதை இன்றும் பார்கலாம். தஞ்சை பெரிய கோவிலின் அகழிகளை நாம் இன்றும் காணக் கூடியதாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில்களிலும் இதே போன்ற அகழிகளை பார்கலாம். இந்த அகழியில் முதலைகளை வளர்பார்களாம். இதே கோவிலில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுரங்கங்களை தோண்டி வைத்துள்ளார்கள். அந்த சுரங்கங்களின் மறுமுனை அருகில் உள்ள கடற்கரைகளை சென்று அடையுமாம். எதிரிகள் அரசர்களை கொல்ல வந்தால் கடல் மார்கமாக தப்பிப்பதற்கு இந்த குகைகளை அந்த காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

கேரள பத்மநாத சுவாமி கோவிலின் ஆறு அறைகளில் மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ரங்க நாதர் கோவிலிலும் இது போன்ற புதையல்கள் உண்டு என்ற கருத்து பரவலாக உள்ளது. இதிலிருந்து நமக்கு தெரிய வருவது கோவில்கள் வணங்குவதற்காக மட்டும் அல்ல அது அரசர்களின் புகலிடமாகவும் அரசின் கஜானாவாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் பல இந்து அரசர்களே கோவில்களை தாக்கி அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்போம்.

1791 ல் மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றது. அப்போது பரசுராம பாவே என்ற மராட்டிய தளபதி கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தைத் தாக்கினான். 6000000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றான். சாரதா தேவி சிலையை பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து உடைத்தெறிந்தான்.

-(தமிழகத்தில் மாலிக்காபூர் ஓர் ஆய்வு பக்கம் 71, SARDESI J.S.THE HISTORY OF MARATHAS VOLUME 3 PAGE 189)

--------------------------------------

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் இருந்த சமணக் குகைக் கொயில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் பதினென்பூமி வின்னகரம் என்ற வைணவக் கோவிலாக மாற்றப்பட்டது.

பல்லவ மன்னனாகிய மகேந்திர வர்மன் சைவ சமயத்தைப் பின்பற்றினான். பாடலிபுத்திரத்தில் இருந்த சமணப் பள்ளியை இடித்து விட்டு அவற்றின் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணரத ஈச்சரம் என்று தன் பெயரில் கோவிலைக் கட்டிக் கொண்டான்.

-(பல்லவர் வரலாறு பக்கம் 275, வரலாற்று வெளிச்சத்தில் ஒளரங்க ஜேப் விகடன் பிரசுரம் பக்கம் 318, புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை. ப.இராம நாத பிள்ளை க.அ.இராமசாமிப் புலவர் குறிப்புகளுடன் சென்னை 1977)

---------------------------------------

கி.பி எட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டின் ஆலியை ஆண்ட குறுநில மன்னன் திருமங்கையாழ்வார். வைணவ சமயத்தை சேர்ந்த இம்மன்னன் நாகப்பட்டினம் பவுத்தக் கோவிலை கொள்ளையடித்தான். அங்கிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கொண்டு வந்து தங்கத்தை உருக்கி ஸ்ரீரங்கக் கொவிலின் விமான மண்டப கோபுரம் உள்ளிட்ட பல பணிகளை செய்து முடித்தான்.

-(நாலாயிர திவ்விய பிரபந்தம் பக்கம் 207, பாலசரஸ்வதி பி.கிருஷ்ணமாச்சாரிய ஸ்வாமிகள் பரிசோதித்து வெளியிட்டது)

---------------------------------------

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் மன்னன் வரகுண பாண்டியனின் மகன் சடைய மாறன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றான். பல நகரங்களையும் புத்த விகாரங்களையும் கொள்ளையிட்டான். அங்குள்ள விலையுயர்ந்த புத்தர் சிலைகளையும் மற்ற பொருட்களையும் கைப்பற்றி வந்தான்.

-(வரலாற்று வெளிச்சத்தில் ஒளரங்க ஜேப் விகடன் பிரசுரம் (வ.வெ.ஒள.வி.பி) - பக்கம் 345 இது இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சத்தில் இடம் பெற்றுள்ள செய்தி.)

--------------------------------------

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் இலங்கையின் மீது படையெடுத்தான். அனுராதபுரம், பொலனருவ ஆகிய இடங்களில் இருந்த புத்த கோவில்களை இடித்து தரை மட்டமாக்கினான். அந்த ஊர்களின் பெயர்களை மாற்றி ஜனநாத மங்கலம் என தன் பெயரைச் சூட்டினான்.

-(இழப்பதற்கு ஏதுமில்லை - பக்கம் 66 (வ.வெ.ஒள.வி.பி)- பக்கம் 349 கே.கே.பிள்ளை, சோழர் வரலாறு 1977 சென்னை பக்கம் 191)

--------------------------------------

இது போன்ற எண்ணற்ற ஆதாரங்கள் வரலாறு நெடுக கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இதனை எல்லாம் சொல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் வந்து போரிட்டதையும் பொருட்களை கொள்ளையடித்ததையும் வரலாறு நெடுக எழுதி வைத்து அதனை மாணவர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைத்துள்ளார்கள்.

இதனால்தான் ஒரு சில இந்து நண்பர்கள் முஸ்லிம்கள் என்றாலே முகத்தை சுழிக்கின்றனர். இது அவர்களின் தவறு அல்ல. திட்டமிட்டு இஸ்லாமிய எதிர்ப்பை விதைப்பதற்காக பாட புத்தகங்களில் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்களின் தவறாகும்.

மாலிக்காபூரைப் பற்றி ஒரு செய்தியையும் பார்போம்.

மாலிக்காபூர் தேவகிரியைக் கைப்பற்றினான். மக்களை மிக அன்பாக நடத்தினான். மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தினான். கொலை கைது என எந்த விதமான கொடுஞ்செயலிலும் அவனது படைகள் ஈடுபடவில்லை. இந்த நடவடிக்கைள் மூலம் மக்களின் மனதில் அமைதியை விதைத்தான். புதிய முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் பயப்படுவதற்கு ஏதும் இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது.

-(THE EARLY MUSLIM EXPANSION IN SOUTH INDIA PAGE 73 மாலிக்காபூர் செ.திவான் விகடன் வெளியீடு பக்கம் 83.)

இதை எல்லாம் படித்து முடித்தவுடன் நமக்கு தோன்றுவது என்னவென்றால் நமது வரலாறுகள் முற்றிலுமாக திருத்தி எழுதப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் உள்ள ஆறாத வடுக்கள் மாற இடமுண்டு. வருங்கால கல்வியாளர்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.



No comments: