Followers

Saturday, February 14, 2015

மார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை!

மார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை!



ஏழு வருடம் மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றவர்கள்தான் மார்க்கத்தை சொல்ல வேண்டும். இஸ்லாத்தை போதிக்க நாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற எழுதப்படாத விதி முன்பு தமிழகத்தில் இருந்தது. அதனை எல்லாம் உடைத்து மார்க்கத்தை சொல்ல ஆலிம் பட்டம் தேவையில்லை. பயிற்சி இருந்தால் சாமான்யனும் சொல்லலாம் என்ற நிலையை இன்று தமிழகம் பார்த்து வருகிறது. புரோகிதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை இன்று உலகுக்கு நிரூபித்து வருகிறோம்.

அந்த வகையில் சொற்பொழிவு எப்படி ஆற்றுவது? தலைப்புகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? மக்களை சலிப்படைய செய்யாமல் எவ்வாறு நமது பேச்சு இருக்க வேண்டும்? ஜூம்ஆ சொற்பொழிவு எதன் அடிப்படையில் அமைய வேண்டும்? என்பதை எல்லாம் விளக்கும் முகமாக திருச்சியில் கருத்தரங்கு நடைபெற்றது. அதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியையே நாம் பார்கிறோம்.

சென்ற பெருநாள் தினத்தன்று எனது மகனிடம் தொலைபேசினேன். அப்போது வெளியூரில் இருப்பதாக சொன்னார். பெருநாள் தினத்தன்று வெளியூரில் என்ன பண்ணுகிறாய்? என்று கேட்டேன். தவ்ஹீத் பள்ளியில் பெருநாள் பயான் பண்ண எனது நண்பனோடு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளோம். இரண்டு மணி நேரம் கழித்து ஊருக்கு வந்து விடுவேன் என்றார். கல்லூரியில் படிக்கும் எனது மகனுக்கும் மகனின் நண்பனுக்கும் ஆர்வம் எவ்வாறு திசை திருப்பப் பட்டுள்ளது என்பதை பார்க்கிறோம். சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றங்கள் அமைத்து பாலாபிஷேகம் செய்து வரும் இந்நாளில் பெருநாள் தொழுகை சொற்பொழிவுக்காக வெளியூர் செல்லும் இந்நாள் இளைஞர்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்திய அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

No comments: