
சவுதி அரேபியாவின் ஹஃப்ரல் பாதின் என்ற மாகாணத்தில் மம்தூஹ் அல் துலூஹி என்ற சவுதி இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாகன விபத்தில் 17 பங்களாதேசத்து நாட்டவர் இறக்க காரணமாகியுள்ளார். தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மீது இவரது வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. தவறு யார் பக்கம் இருந்தாலும் இறந்தவருக்கு உயிரோடு இருப்பவர் இழப்பீட்டு தொகை தந்தே ஆக வேண்டும் என்பது இந்நாட்டின் சட்டம். சவுதி அரசின் சட்டப்படி இறந்தவர்களுக்கு 'இரத்தப் பணம்' எனும் இழப்பீட்டுத் தொகை தரப்பட வேண்டும். கொலையாக இருந்தால் 'கொலைக்கு கொலை' என்ற ரீதியில் இவரும் மக்கள் முன்னிலையில் கொல்லப்பட்டிருப்பார். ஆனால் இது ஒரு வாகன விபத்து என்பதால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு 5.1 மில்லியன் ரியாலை தர வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது. தொகை மிகப் பெரியது என்பதால் இந்த இளைஞரால் கட்ட முடியவில்லை. எனவே சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த எட்டு வருடங்களாக சிறையில் தனது காலத்தை கழித்து வருகிறார் துலாஹி என்ற இந்த இளைஞர்.
இந்த இளைஞரின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. இவரது குடும்பத்தினர் இவரை சந்திக்க சிறைக்கு வந்து செல்வதற்குரிய பொருளாதார வசதியைக் கூட இவர்கள் பெற்றிருக்கவில்லை. இவரது தாயார் மிகவும் வயதானதால் நோய்வாய்பட்டுள்ளார். 'நான் இறக்கும் முன்பே எனது மகனை பார்த்து விட வேண்டும்: என் மகனின் விடுதலை எப்போது' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இவரது குடும்பத்தினர் ஒரு தொண்டுள்ளத்தின் மூலம் பணத்தை திரட்டி முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பார்த்த தொகை சேரவில்லை. தற்போது சிறையில் உள்ள அவருக்காக பலரும் உதவ முன் வந்துள்ளனர். பணம் முழுவதும் வசூலானால் இந்த இளைஞர் விடுவிக்கப்படலாம். இறந்த 17 பங்களாதேசத்து குடும்பத்துக்கும் தலைக்கு 35 லட்சம் வரை தோராயமாக நிவாரணம் கிடைக்கலாம். இறந்த பங்களாதேசத்தவரின் குடும்பங்கள் அந்த இளைஞரை மன்னித்து விட்டு விட்டால் சவுதி இளைஞர் விடுதலை செய்யப்படுவார். பார்ப்போம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று.
தகவல் உதவி
சவுதி கெஜட்
19-05-2014
இறை வசனமான குர்ஆனின் சட்டங்கள் எவருக்கும் பாதிப்பில்லாமல் நடு நிலையாக தீர்ப்பு சொல்ல்க் கூடியது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் பார்கிறோம்.
17 உயிர்களை அதுவும் ஒரு விபத்தில் கொன்றதற்காக 8 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் இந்த இளைஞர். மேலும் 5.1 மில்லியன் ரியாலையும் நஷ்ட ஈடாக தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இது சவுதி அரேபியாவின் நிலை. நமது நாட்டிலும் குற்றவியல் சட்டங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பதையும் பார்போம்.
குடிகார கூத்தாடி சல்மான் கான் குடி போதையில் காரை ஓட்டி நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரைக் குடித்து விட்டு இன்று வரை சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு காலம் கழித்து வருகிறார். அதிகாரத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் எவரும் வெளியில் உலவலாம் என்ற நிலை.
மற்றொரு புறத்தில் நமது நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு அரசே 2500 அப்பாவி முஸ்லிம் பொது மக்களை கொன்று குவித்து விட்டு அதற்கு எந்த தண்டனையையும் பெறாமல் அந்த தவறைச் செய்தவர்களை அதை விட மேலான ஒரு பதவியில் நமது மக்கள் அமர்த்தியுள்ளனர். இன்று களிப்புடன் குற்றவாளிகள் எந்த வித வெட்கமும் இன்றி உலாவும் வருகிறார்கள். அவர்களுக்கு இன்று தண்டனை கிடைக்காமல் போகலாம். ஆனால் அகிலத்தின் அதிபதியின் முன்னால் தீர்ப்பு நாளில் தாங்கள் செய்த கொலைகளுக்கான தண்டனையை கண்டிப்பாக பெறுவார்கள். அதுவரை பொறுப்போம்.
டிஸ்கி: இது முன்பு எழுதி பிரசுரிக்கப்படாமல் விடப்பட்ட பதிவு. இந்த செய்தியை இதற்கு முன் படிக்காதவர்களுக்காக பதிகிறேன்.
No comments:
Post a Comment