Followers

Saturday, February 21, 2015

கஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்!



கஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்!

மெக்கா புனித பள்ளி கஃபாவில் சென்ற திங்கட்கிழமை உம்ரா செய்ய வந்த சீனப் பெண் ஒருவர் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்காலிகமாக கஃபாவை சுற்றுவதற்காக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து குதித்து தனது உயிரை போக்கிக் கொண்டுள்ளார்.

கஃபாவின் பாதுகாப்பு துறை அதிகாரி முஹம்மது அல் மாதி உடலை கைப்பற்றி மன்னர் ஃபைஸல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மார்க்க அறிவில்லாத ஒரு சில மூட முல்லாக்கள் 'கஃபாவில் உயிர் பிரிந்தால் நேரடி சொர்கம்' என்று கட்டுக் கதைகளை அறியாத மக்களுக்கு போதித்து வருகின்றனர். இத்தனை நாளும் கம்யூனிஸ பிடியில் இருந்த சீன முஸ்லிம்கள் இஸ்லாமிய அறிவு இன்றியே மூடப் பழக்கங்களால் வளர்க்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையினாலும் இதனை செய்திருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன். தாராள பொருளாதார மயமாக்கல் என்ற கொள்கையில் பன்னாட்டு கம்பெனிகளின் வரவால் சீனா தனது இரும்பு பிடியை தளர்த்திக் கொண்டு மத சுதந்திரத்துக்கு அனுமதி அளித்து வருகிறது. சவுதி அரேபியாவிலிருந்து மார்க்க அறிஞர்கள் பலர் சீனா சென்று உண்மையான இஸ்லாத்தை போதித்தும் வருகின்றனர்.

உலக மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால் தற்கொலை சதவீதம் இஸ்லாமியரிடத்தில் குறைவாக இருப்பதாக பல்வேறு கணக்கெடுப்புகள் சொல்கின்றன. நமது தமிழகத்தில் கூட இஸ்லாமியர்களிடத்தில் தற்கொலைகள் நடப்பதை மிக அரிதாகவே காணலாம். அதற்கு காரணம் இஸ்லாம் தற்கொலையை கடுமையான குற்றமாக கருதுவதுதான். அடுத்து எந்த ஒரு நஷ்டம் வந்தாலும் அதனை இறைவன் மேல் போட்டு விட்டு 'இறைவன் நாடியதே நடக்கும்' என்று பள்ளி வாசல் சென்று இறை தியானத்தில் ஈடுபட்டு விடுவதால் மனதை லேசாக்கிக் கொள்கின்றனர். கேரளா மாநிலத்தில் நடந்த ஆய்வின் மூலம் கிடைத்த பதிலே நாம் மேலே கண்டது. இஸ்லாமிய கொள்கைகளை தங்கள் வாழ்விலும் கடை பிடிப்பதால் முஸ்லிம்கள் அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)


தகவல் உதவி
சவுதி கெஜட்
17-02-2015

No comments: