300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா?
சாரங்கன்!
//இசுலாத்தில் நரகம் முசுலிமா இல்லாட்டியே கிடைக்கும். அதாவது முந்நூறு குழந்தைகளை கொன்னவனுக்கு சொர்க்கம்.//
'ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும் “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32
மனித உயிர்களுக்கு முஸ்லிம்கள் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக முந்நூறு குழந்தைகளை கொன்றவன் சொர்க்கம் போவானா? அவனுக்கு நிரந்தர நரகமே. அரபு பெயரை வைத்திருப்பதால் ஒருவன் முஸ்லிம் ஆகி விட முடியாது. குர்ஆனின் கட்டளைகள் அவன் வாழ்வில் நடை முறை படுத்தியால் மட்டுமே இஸ்லாமியனாகிறான்.
//புத்தருக்கு, அப்துல் கலாமுக்கு, கபீர் தாசருக்கு, காந்திக்கு, அம்பேத்காருக்கு ,… புல் டைம் நரகம் தான். ஆகா ஒட்டுமொத்த நல்லவர்களுக்கு நரகம், பொறுக்கிகளுக்கு சொர்க்கம். இது தானே இஸ்லாம்.//
'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், இறைச் செய்தியை கிடைக்கப் பெறாதவர்கள், மற்றும் கிறித்தவர்களில் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'
-குர்ஆன் 5;69
இந்த வசனத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் நற் காரியங்கள் செய்து ஏக இறைவனை தனது மனதுக்குள் நினைத்து மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் அவர்கள் எந்த அச்சமும் படத் தேவையில்லை என்கிறான் இறைவன்.
நீங்கள் சொன்ன புத்தராகட்டும், அப்துல் கலாமாகட்டும், கபீர்தாசராகட்டும், காந்தியாகட்டும் அல்லது அம்பேத்காராகட்டும் இவர்கள் அனைவரும் ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ் நாளில் மனித குலத்துக்கு நன்மை செய்திருந்தால் அவர்களை நான் தண்டிக்க மாட்டேன் என்று குர்ஆனில் இறைவன் உத்தரவாதம் தருகிறான். அவர்கள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். எனவே அவர்கள் மனதளவிலும் மனித குலத்துக்கு நன்மை செய்து ஏக இறைவனை வணங்கி இறந்திருப்பார்களானால் அவர்கள் சொர்க்கத்தில் உல்லாசமாக இருப்பர். காந்தியும் புத்தரும் இறந்து விட்டார்கள். அது அவர்கள் பாடு. உயிரோடு இருக்கும் நீங்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.
No comments:
Post a Comment