Followers

Friday, February 06, 2015

மதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்?

மதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்?

ஹானஸ்ட் மேன்!

//கிறிஸ்தவர்களை படைத்ததும் முஸ்லிம்களை படைத்ததும் அல்லாதான் என்றால் வெவ்வேறு மதங்கள் எதற்கு? //

'அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2;75

முன்பு இறைவன் வழங்கிய வேதத்தை மாற்றியதாலேயே குர்ஆன் இறங்க வேண்டிய அவசியம் வந்தது.

//அவர்களை எதற்கு பாகிஸ்தானில் அடிக்கிறீர்கள்?//

குற்றம் செய்த எவரையும் தண்டிப்பதற்கு ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளது. தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது. இந்த சட்டத்துக்கு மாற்றமாக நடப்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல.

//ஒரு முஸ்லிம் பெண் ஒரு கிறிஸ்தவனை மணந்தால் அவளை எதற்கு துன்புறுத்துகிறீர்கள்? இதெற்கெல்லாம் பதில் உண்டா?//

திருமணம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. வாழ்நாள் முழுக்க அவனோடு காலத்தை கழிக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு எந்த மதத்தைப் பின் பற்றுவது. குழந்தையை எந்த மதத்தில் சேர்ப்பது? குழந்தைக்கு பெண் எந்த மதத்தில் எடுப்பது? என்று பல சிக்கல்கள் வரும். இதனால் மனத்தாபம் வந்து திருமண முறிவு ஏற்படும். எனவே ஒத்த கொள்கையுடைய ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதே நல்லது. ஆண் எந்த சிக்கலையும் சமாளித்து வேறொரு திருமணம் செய்து கொண்டு விடுவான். ஆனால் பெண்ணின் வாழ்வு முறை மிகவும் சிக்கலானது. திருமணம் முடிந்து விவாகரத்து வாங்கினால் பிறகு வேறொரு திருமணம் முடிப்பது எல்லா சமூகத்திலும் பெரும் பிரச்னை. எனவே பெண்களை நாங்கள் கண்டித்து வைக்கிறோம் அவர்களின் எதிர்கால நலனுக்காக!

//My humble question:– Is your Quran direct literal word of Allah unmodified in any way?//

இறைவன் எவ்வாறு குர்ஆனை அருளினானோ அதில் ஒரு மாற்றமும் இல்லை என்பதுதான் உலக முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை போனால் அவன் இஸ்லாமியன் அல்ல.

ஆனால் நபிகள் நாயகம் ஹதீதுகள் என்று சொன்னதில் சில குளறுபடிகள் உள்ளதை நானும் மறுக்கவில்லை. யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பது போல் நடித்து 'முகமது நபி அதை சொன்னார்' 'முகமது நபி இதை சொன்னார்' என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அது போன்ற ஒன்றைத்தான் நீங்களும் குறிப்பிடுவது.

குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் ஹதீதுகள் அனைத்தும் யூதர்களால் புனையப்பட்டவை. அதை ஒதுக்கி விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.

//ஆனால் அந்த எதிர்கால நரகவாசி மேடையில் இந்துமதத்தை திட்டி பேசினால் முஸ்லிம்கள் கை தட்டுகிறார்கள் விசில் அடிக்கிறார்கள். வசூலுக்கு உண்டி என்திவந்தால் ஜேபியில் உள்ள பணத்தை வாரி கொட்டுகிறீர்கள்? ஒரு நரகவாசிக்கு பணத்தை கொட்டுவது ஏனப்பா?//

எங்கள் ஊருக்கு மீலாது நபி விழாவுக்கு வீரமணி வந்த போது அவரிடம் 'நபிகள் நாயகத்தை பற்றி மட்டும் பேசுங்கள். இந்து மத குறைகளை பேச வேண்டாம்' என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் 'எனக்கு தெரியாதா? நான் பேச மாட்டேன்' என்று ஒத்துக் கொண்டார். எனவே முஸ்லிம்கள் தங்கள் விழாக்களில் இவ்வாறு பேசுவதை விரும்புவதில்லை.

மற்ற மேடைகளில் அவர் உங்களை திட்டினால் அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்? வசூலுக்கு யார் வந்தாலும் வியாபாரிகள் பண உதவி செய்வார்கள். சில நேரம் இந்து முண்ணனி துண்டு ஏந்தி வந்தால் அவர்களுக்கும் பத்தோடு பதினொன்றாக பணம் கொடுக்கும் முஸ்லிம்களை பார்த்துள்ளேன். பல மதத்தவர் வாழும் நாட்டில் இதெல்லாம் சகஜம். :-)

//இவை அனைத்தும் தானாக உருவாகிக்கொண்டது என்பதை உமது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லா மட்டும் தானாக உருவாகி கொண்டார் என்பதை மட்டும் உமது அறிவு ஏற்றுகொள்கிறதோ?//

நமக்கு அறிவு குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. நமக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஆன்மா எங்கிருந்து வந்தது? அது எங்கு போகிறது என்பதை அறிவியல் இன்று வரை கண்டு பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில்தான் நமது அறிவு உள்ளது. இறைவனை படைத்தது யார் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை. இதற்கான பதில் உலக முடிவு நாளன்று அனைவருக்கும் விளக்கப்படும். இறைவனும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நம் அனைவருக்கும் காட்சி தருவான். அது வரை நாமும் பொறுப்போம்.

நாத்திகர்கள் சொல்வது போல் இறைவன் இல்லாவிட்டால் இறப்புக்கு பிறகு எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் குர்ஆன், பைபிள், தோரா, ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும் திருக்குறள் சொல்வது போல் இறைவன் உண்மையில் இருந்து விட்டால் அங்கு ஆத்திகனான நான் தப்பித்தக் கொள்வேன். நாத்திகர் அங்கும் மாட்டிக் கொள்வார்.

மேலும் நான் இஸ்லாத்தை முழுமையாக பின் பற்றுவதால் பெரும் பலனை அடைந்துள்ளேன். திருமணம் முடிக்க, குழந்தை பெற்றுக் கொள்ள, பொருள் சம்பாதிக்க, வாழ்வை சந்தோஷமாக்கிக் கொள்ள பல சலுகைகளை எனக்கு குர்ஆன் தருகிறது. மன நிம்மதியோடு இருக்கிறேன். மனக் கஷ்டம் வந்தால் ஐந்து வேளை பள்ளி வாசல் சென்று இறைவன் முன்னால் வீழ்ந்து விட்டால் உடன் என் மனது லேசாகி விடுகிறது.

ஆனால் நாத்திகர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எந்த வழியும் இல்லை. குடும்ப பிரச்னைகள் அதிகமாக போனால் டாஸ்மாக்குக்கு சென்று அரசுக்கு வருமானத்தை அதிகமாக்கிக் கொடுப்பர் :-)

1 comment:

Anonymous said...

//இவை அனைத்தும் தானாக உருவாகிக்கொண்டது என்பதை உமது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அல்லா மட்டும் தானாக உருவாகி கொண்டார் என்பதை மட்டும் உமது அறிவு ஏற்றுகொள்கிறதோ?//

Adhu yarpa indha commenta potadhu, Admin pls post surathul ikhlas tarjuma for this comment