Followers

Sunday, February 22, 2015

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?சில மாதங்களுக்கு முன்பு பெஷாவர் பள்ளிக் கூடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பள்ளிக் கூடத்தினுள் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிலரின் உடலை பார்த்த பாகிஸ்தானிகள் ஆச்சரியப்பட்டுப் போயினர். ஏனெனில் அந்த தீவிரவாதிகளின் உடலில் பல உருவங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. தமிழ் நாட்டில் உள்ள எந்த முஸ்லிமாவது தங்கள் உடலில் பச்சைக் குத்தி பார்த்திருக்கிறீர்களா? இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் பெயர்களையோ தங்கள் காதலியின் பெயர்களையோ தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொள்வதை பார்த்திருப்போம். இஸ்லாத்தில் இவ்வாறு உடலில் பச்சைக் குத்திக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெஷாவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவனின் உடலில் உருவப் படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்திலேயே அது வீடியோவாகவும் வந்தது. இது பற்றி எனது கம்பெனியில் வேலை செய்யும் பாகிஸ்தானி சொன்னதாவது 'பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானின் ராணுவமே சில இடங்களில் நுழைய முடியாது. அந்த அளவு சாலை வசதிகளும் இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யாவிலிருந்து ஆப்கான் வழியாக பாலைவனங்களூடாக பாகிஸ்தான் புகுந்து விடுவர். இவர்களில் பெரும்பாலோர் மொசாத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். சில நேரம் ஷியா பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். சில நேரம் சன்னி பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். மற்ற சில நேரங்களில் இந்திய பார்டர்களில் இங்கிருந்து துப்பாக்கி சூடு நடத்தி இந்தியா பாகிஸ்தானுக்கு முறுகல் நிலையை உண்டாக்குவர். இது இவர்களுக்கு இடப்பட்ட வேலை. பாகிஸ்தானிகள் சிலரும் இதற்கு உடந்தை. இதற்காக அவர்களுக்கு மாதாமாதம் பெரும் தொகை கைமாறாக கொடுக்கப்படுகிறது. ரூட் போட்டுக் கொடுப்பது. உணவு தயாரித்துக் கொடுப்பது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். உள் நாட்டு சிறு குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இவர்களுக்கு கை வந்த கலை. தங்களின் மீது சந்தேகப் பார்வை பட்டு விடாதபடி மிக கவனமாக காய்களை நகர்த்துவார்கள்' என்று சொன்னார்.

இதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்?

முறுகல் நிலை தொடர்ந்து இருந்தால் அமெரிக்க இஸ்ரேலிய ராணுவ தளவாடங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்குவதை தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இந்த ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக ஒபாமாவும் வாயை திறக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒபாமா கட்சியும் எதிர் கட்சியும் தேர்தல் செலவீனங்களுக்காக இந்த ஆயுத வியாபாரிகளையே நாட வேண்டியதாக இருக்கும். எனவே இவர்கள் எதனை சொல்கிறார்களோ அதனையே ஒபாமாவும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டுவார். எப்படி ஆர்எஸ்எஸ், அதானி, கும்பலுக்கு நமது மத்திய அரசு தலையாட்டுகிறதோ அது போல :-)

அல் ஷபாப், போகோ ஹராம், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான், இந்தியன் முஜாஹிதீன் என்று நாட்டுக்கு தக்கவாறு இந்த யூதர்களின் முகமூடி மாறிக் கொண்டே இருக்கும். தாலிபான்களை தீவிரவாதிகள் என்று சொல்லாதீர்கள் என்று அமெரிக்கா சமீபத்தில் அவர்களுக்கு சிறந்த சர்டிபிகேட் கொடுத்து கௌரவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. பாகிஸ்தானில் எவ்வாறு மொசாத்துக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் இந்துத்வாக்கள் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்துத்வா ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் இஸ்ரேலோடு நமது நாட்டின் தொடர்புகள் இன்னும் அதிகமாயுள்ளதை நாம் கவனித்திருப்போம். இனி மறைமுகமாக என்னவெல்லாம் நமது நாட்டில் அரங்கேற்றப் போகிறார்களோ பொருத்திருந்து பார்போம்.

1 comment:

Dr.Anburaj said...

ஆக மூளை உள்ளவன் இஸ்ரவேலன் என்கின்றீா்கள். உண்மைதான். கட்டுரையில் பொய்கள் நிறைய உள்ளன.புதிதாக ஈசலாத்தில் சோ்ந்தவா்கள் பலா் தீவிரவாத்த்தில் ஈடுபட்டுள்ளாா்கள் என்பதே உண்மை.பாக்கிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்று தீவிரவாத இயக்கங்கள் அறிவித்த பிறகு சுவனப்பிாியன் உளறுவது வீண்வேலை.