'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, February 24, 2015
2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்!
ஷோலே ஹிந்தி படத்தில் வரும் அம்ஜத்கான் போல் இருக்கும் இந்த பாகிஸ்தானிய சிறுவனுக்கு வயது 15 தான். பாகிஸ்தானின் ஹாங்கு மாவட்டத்தில் உள்ள இப்றாகிம்ஜாய் நகரில் வசித்து வந்தான். இந்த சிறுவனின் பெயர் அய்த்ஜாக் ஹஸன். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற இந்த சிறுவன் பள்ளியின் காம்பவுண்டுக்கு வெளியே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் பள்ளியை நோக்கி வேகமாக வருகிறார். அந்த நபர் கையில் உள்ள ரிமோட் கண்ட்ரோலையும், வயிற்றின் பகுதி சற்று உப்பியிருப்பதையும் நோட்டமிட்ட ஹஸன் இவன் தற்கொலை குண்டுதாரி என்பதை யூகித்துக் கொண்டார். அந்த நேரத்தில் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தன.
அவனை தடுத்து நிறுத்தி பள்ளி குழந்தைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று சக நண்பர்களோடு கூறுகிறான் ஹஸன். ஆனால் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று ஹஸனை தடுக்கின்றனர் அவனது நண்பர்கள். எனது உயிரை விட எனது நண்பர்களின் உயிரே முக்கியம் என்று கூறி தற்கொலை குண்டுதாரியை நோக்கி ஹஸன் வேகமாக ஓடுகிறான். இவன் வருவதைப் பார்த்து அவனும் ஓட எத்தனிக்கவே நிலை தடுமாறி பள்ளி வளாகத்தின் காம்பவுண்ட் சமீபமாக அந்த சக்தி வாய்ந்த டைம் பாம் வெடித்து சிதறுகிறது. தற்கொலை குண்டுதாரியும் இளைஞன் ஹஸனும் அதே இடத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். இருவருமே அந்த இடத்திலேயே இறந்து விடுகின்றார்கள். ஹஸன் அந்த கொலைகாரனை தடுத்திருக்கா விட்டால் பள்ளி குழந்தைகளில் பல நூறு பேர் இறந்திருப்பார்கள். இந்த இளைஞனின் சமயோஜித வியூகத்தால் பெரும் குண்டு வெடிப்பு தடுக்கப்பட்டது.
'எனது மகன் எனது மனைவியை அவனது தாயை அழ வைத்து விட்டு சென்றது வருத்தமாக இருந்தாலும் ஓராயிரம் குழந்தைகளின் தாய்களின் அழுகுரலை தனது உயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்தியிருக்கிறான். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்கிறார் ஹஸனின் தந்தை முஜாஹிர் அலி.
பாகிஸ்தான் அரசு இந்த சிறுவனின் வீர செயலை பாராட்டி பட்டமளித்து கௌரவித்தது. ஹஸன் செய்த இந்த வீர செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். இந்த செயலுக்கு ஹஸனுக்கு கண்டிப்பாக இறைவனிடத்தில் வெகுமதி உண்டு. இறைவன் இந்த இளைஞனின் உயிர் தியாகத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு சொர்க்கத்தில் நிரந்தர இடத்தை தர நாமும் பிரார்திப்போம். பழைய செய்தியாக இருந்தாலும் ஜிஹாத் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த செய்தியை பகிர்கிறேன்.
முகமூடி போட்டுக் கொண்டு கிருத்தவர்களையும், குர்துகளையும், ஷியாக்களையும் தலையை அறுத்து படமாக வெளியிடும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இந்த சிறுவன் ஹஸனின் தீர செயலை நினைத்துப் பார்க்கட்டும். இஸ்லாம் காட்டும் வழி இதுதான் என்று இனியாவது உணரட்டும். யூதர்களின் கைப்பாவையாக இஸ்ரேலின் ஏவலாளனாக இனியும் இருக்காமல் செய்த பாவங்களுக்குக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு தூய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளட்டும்.
தகவல் உதவி
பிபிசி
09-01-2014
http://www.bbc.com/news/world-asia-25663992
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment