Followers

Friday, February 27, 2015

ஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு - 5//பதிவர் சுவனப்பிரியன் பதிவிட்டிருக்கும் இரண்டாவது மூன்றாவது பதிவுகளை நான் அலட்சியம் செய்கிறேன். காரணம், விதி எண் ஆறில் குறிப்பிட்டபடி கம்யூனிசத்துக்கும் அந்தப் பதிவுகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக பதிவர் சுவனப்பிரியன் கருதி, அதை விளக்கிக் கூறினால் தொடரும் பதிவுகளில் அதைப் பார்க்கலாம்.//

அதாவது கம்யூனிஷத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யும் செயல்களை இவர் ஒதுக்கி விடுவாராம். கம்யூனிஷம் பெண்களை உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அதனை பார்த்து நமது மக்களும் பெண் விடுதலை என்று ஆண்கள் பார்க்கும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். அதன் முடிவு என்னவாக இருந்தது? தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்.

கார்ல் மாக்ஸூம், லெனினும், ஸ்டாலினும் பெண்கள் சார்பாக கொண்ட கருத்து நடைமுறை சாத்தியமில்லாதது என்பது தெளிவாகிறது. பெரும் பெரும் வால்யூம்களாக நாம் தத்துவங்களை எழுதிக் கொண்டிருக்கலாம். அது நடைமுறை சாத்தியமா என்பதில்தான் அந்த தத்துவங்களின் வெற்றி இருக்கிறது. இங்கு கம்யூனிஷத்தின் கொள்கை ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது.

//ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை.//

நான் பொய் சொல்கிறேனா? அல்லது இந்த கம்யூனிஸ்ட் பொய் சொல்கிறாரா என்பதை இந்து பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் மூலம் பார்போம்.

அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி. சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.

சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.

மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபரப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை 'முன் மடலின் (frontal lobe) ' தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=printகார்ல் மாக்ஸூம், லெனினும், ஸ்டாலினும் பெண்கள் சார்பாக சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இந்த ஆய்வின் மூலம் குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. இதை உணர்ந்ததால்தானோ என்னவோ ஸ்டாலின் தன் மகளுக்கு உடலின் கவர்ச்சியை காட்டாது ஆடைகளை அணிய வலியுறுத்தினார். தனது குடும்ப பெண்களை இஸ்லாமிய பெண் போல் நடக்க வைத்து விட்டு செங்கொடி போன்ற ஏமாந்த கம்யூனிஸ்டுகளிடம் தங்கள் உப்பு பெறாத சரக்கை ஏற்றி விட்டு மறைந்து விட்டனர். இது தெரியாத கம்யூனிஸ்டுகள் இதனை வேத வாக்காக நம்பி இன்று வரை மோசம் போய்க் கொண்டுள்ளனர்.

இது பற்றி தமிழர்கள் சுலபமாக விளங்கிக் கொள்ள தமிழனுக்கு பிடித்த சினிமாவிலிருந்தே உதாரணங்களை சொல்வோம்.

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஜோடியாக நடித்த பண்டரிபாய் சில காலம் கழித்து இதே இருவருக்கும் தாயாக நடித்தார். ரஜினி காந்துக்கு 'அன்புள்ள ரஜினிகாந்தில்' மகளாக நடித்த மீனா சில காலம் கழித்து 'தில்லானா.. தில்லானா' என்று அதே ரஜினியோடு டூயட் பாடினார். 10 வருடம் கழித்து தற்போது குழந்தை பெற்றுக் கொண்டு டிவியில் விளம்பர நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு இரண்டு வருடம் போனால் இதே ரஜினிக்கு தாயாக வேஷம் கட்டி வருவார். ஆனால் ரஜினி இன்னும் 10 வருடத்துக்கு சோனாக்ஷி சின்ஹா போன்ற இள நடிகைகளோடு டூயட் பாடி செங்கொடி போன்றவர்களை மகிழ்விப்பார். :-) இந்த எளிய உதாரணமும் விளங்காது கம்யூனிஷ கொள்கையானது அவரை சிந்திக்க விடாமல் தடுத்தால் நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது.

இதனை சரியாக உணர்ந்ததால்தான் குர்ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக கூறுகிறது. அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:1248 comments:

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 1.

16. அஞ்சான், on 27/02/2015 at 1:02 பிப said:

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட விதண்டாவாதத்திலேயே ஊறித்தளைத்த மனநோயாளியே.

மறுபடியும் முதலிலிருந்தா?

எனக்கு பதிலளிக்க முடியாமல் அரண்டு போய் தோல்வியை உன்னுடைய பாணியில் பறைசாற்றி ஓடுகிறாய்.

விடமாட்டேன்.

17.Zidane, on 27/02/2015 at 2:09 பிப said:

Sengodi sir, please reply to anjaan’s questions

18.செங்கொடி, on 27/02/2015 at 3:54 பிப said:

ஸிதேன்,

மனப்பிறழ்தலுள்ளவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலை. இது போன்றவர்கள் பதிலை எதிர்பார்ப்பதும் இல்லை. இதுவும் ஒரு வகையில் சுய சொரிதல் தான். சொரிந்து கொள்ளட்டும் எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.

19. Suresh, on 28/02/2015 at 11:00 முப said:

//தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த போகிறாய்?//

அஞ்சான்,

உங்களின் இந்த வாக்கியம் சரியான விவாதமல்ல.

உங்கள் (May not be) கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் கூட பைபிளில் கூறப்பட்டுள்ளதை கடை பிடிக்க முடியவில்லை. அதனால், பைபிளில் கூறப்பட்டுள்ளவைகளை எந்த கிரகத்திலுள்ள மனிதர்களுக்கு செயல் படுத்த போகிறீர்கள்?

20. அஞ்சான், on 28/02/2015 at 3:24 பிப said:

//Zidane, on 27/02/2015 at 2:09 பிப said:
Sengodi sir, please reply to anjaan’s questions//

Zidane,

Do not disgrace yourself by addressing the pest sengodi as sir.

Through your comment you have declared that I am right and the pest sengodi is dodging through stupid, silly and utter nonsense.

This pest sengodi cannot reply my questions at all . He only can twist and turn always.

Anybody can notice that this parasite sengodi’s purpose is to disgrace a particular religion by hiding under the dead rotting communism corpse.

When this pest sengodi gets the “treatment” sooner or later by the dept. concerned then this pest sengodi will eat every bit of what he has vomited.

To escape sengodi pest will plead that he is mentally unfit . .

Nowhere he can escape at all.

I DARE HIM TO PUBLISH THIS COMMENT.

Hope you understood.

Zidane have a good day.

அஞ்சான்,, on 28/02/2015 at 6:42 பிப said:

திரு.Suresh அவர்களே,

கருத்துக்கு நன்றி,

செங்கொடி கூறுவதப்போல் கம்யூனிஷத்தைக் கொண்டு “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் என்று பைபிளில் அல்லது வேறு எந்த மத நூலிலாவது உள்ளதா?

அல்லது கிறிஸ்தவர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா?

பைபிளின் பெயரால் ஆட்சி செய்யப்பட்டு கம்யூனிஷத்தைப்போல் கோடானு கோடி மக்களை கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டிருக்கிறதா?

கிறிஸ்தவம் தோன்றி 2015 ஆண்டுகளில் இன்று வரை கிறிஸ்தவம், பைபிளின் பெயரால் கொல்லப்பட்டர்வர்களின் தொகையை விட ஒப்பீட்டில் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று தோன்றிய நச்சான கம்யூனிஷத்தால் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் தொகை மிகைத்திருக்கிறதே.
கிறிஷ்தவம், பைபிளின் பெயரால் மருத்துவமனைகள், அறநிலையங்கள், அனாதை இல்லங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இத்யாதி இத்யாதிகளால் இன பேதமின்றி தொன்றுதொட்டு மனிதசமுதாயத்திற்கு செய்திருக்கும் செய்துவரும் தொண்டுகளின் குண்டூசி தலைஅளவு கூட கம்யூனிஷம் செய்திருக்குமா?

கம்யூனிஷத்தின் ஆட்சியிலிருத்து விடுபட்ட நாட்டிலுள்ளவர்கள் எல்லாம் இன்று மகிழ்ச்சியில் சுதந்திரமாக திளைத்திருக்கிறார்களே.

கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் செங்கொடி எடுத்துக்கொண்டு துதிபாடி வாழ்வதில் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை.

செங்கொடி கம்யூனிஷத்தின் சிறப்புகளை இமயத்தின் மீது ஏறி நின்று கூவட்டும். கவலை இல்லை.

செங்கொடியின் நோக்கம் கம்யூனிஷ போர்வையில் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பது யாருக்கும் புரியாமலிருக்காது.

இன்றைக்கு ஒரு மதம், நாளை மற்றொன்று நாளை மறுநாள் மற்றொன்று இப்படியே ஒவ்வொன்றின் மீது அபத்தங்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்து வாசகர்களின் மனதில் நஞ்சை விதைத்து மத நல்லிணக்கத்தை வேரறுப்பதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.?

மத இன ஜாதி சண்டை சச்சரவுகளில்லாமல் இப்புவியில் உள்ள யாவரும் இன்புற்று வாழவேண்டும்.

என் கேள்விகளுக்கு செங்கொடி பதில் கூறியே ஆக வேண்டும்.

உங்கள் தினங்கள் இனியதாக தொடங்கட்டும்.

தொடரும் ….

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 2.

14. அஞ்சான், on 27/02/2015 at 10:03 முப said:

//உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்.// என கொட்டை எழுத்தில் பதிவின் கீழே போட்டிருப்பதின் நோக்கம் உன்னை போன்ற மனநோயாளிகள் உனக்கு டண்டணக்கா டடக்கு நக்கா பாடி ஆடவா?

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள்// — சரி ஓ.கே. !!

நீயே——////முறையாக விவாதிக்க வேண்டுமென்றால் பதிவிலுள்ள விசயங்களை அலசிப்பார்த்து அதற்கான எதிர்வினையை முன்வைத்து வாதிடுங்கள்.// —— என்றும்

விவாதிக்க வந்தால்——– //என்ன பிரச்சனை உங்களுக்கு?// //அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?// //இந்தப் பதிவில் இருந்த ஏதோ ஒன்று உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.// என்றும் கூறுகிறாய்.

உன் பதிவில் இருந்து நீயே,நீயே,நீயே,நீயே, குறிப்பிட்ட , பறை சாற்றிய, புலம்பிய, உளறியவை கொண்டே எனது கேள்விகள். – பதில்???

மறுபடியும் முதலிருந்து..

எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம். உண்மையா? பொய்யா?

நீ இந்த பதிவில் கூறியிருப்பது:

//1.உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை.//

//2.தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது.//

அப்படியென்றால் தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த? எந்த காட்டில்?

இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை என்றால் கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதாலேயா?

//3.ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது.//

ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்றால் செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?

கம்யூனிஷத்தின் பெயரை காப்பாற்ற சோஷியலித்தின் பெயரால் ரஷ்யாவிலும் சீனாவிலும் உலகெங்கிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல், நடத்தி சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?

//4.கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை//

அப்படியென்றால் ? ஏன் தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ?

நாட்டில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லாம் மனித குலம் இல்லையா? கம்யூனிஷம் மிருகங்களுக்கானதா?

//..”உங்களின் புரிதல் எல்லை வரை வந்து விவாதிக்க நான் தயார்.” என்று நீ தானே சவால் விட்டிருக்கிறாய்?

எங்கே என் கேள்விகளுக்கு தயை கூர்ந்து, அன்பு கூர்ந்து, இரக்கப்பட்டு பதில் கூறலாம் தானே?

15.செங்கொடி, on 27/02/2015 at 10:51 முப said:

அஞ்சான்

உங்கள் அசட்டுத்தனத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.முதலில் ஒருமையில் விழிப்பதை நிருத்துங்கள். அடுத்து நீங்கள் தேடலுடன் விவாதிக்க வந்திருக்கிறீர்கள் எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் எழுதுங்கள். அப்படியில்லாதவரை உங்கள் நோக்கம் எதுவோ அப்படித்தான் என் பதில்களும் இருக்கும்.

இது சுவனப்பிரியனுக்கான பதிவு தான். ஆனால் சுவனப்பிரியன் சார்பில் யார் வேண்டுமானாலும் வாதிடலாம். சுவனப்பிரியன் சார்பில் வாதிடுவது என்றால் சுவனப்பிரியனை நோக்கி முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். அதன் பிறகு கேள்விகள் கேட்க வேண்டும்.

மீண்டும் கூறுகிறேன். உங்களுடைய பின்னூட்டங்களை தொடக்கத்திலிருந்து படித்துப் பாருங்கள். அதில் எதிராளியை அசிங்கப்படுத்த வேண்டும் எனும் நோக்கம் தான் தெரிகிறதே தவிர நேர்மையான விவாதம் நடத்தும் நோக்கம் கொஞ்சமும் வெளிப்படவில்லை. ஆகவே, ஒரு நேர்மையான விவாதத்துக்கு தயாராகுங்கள் நிச்சயம் உங்களின் புரிதல் எல்லை வரை சென்று என்னால் பதில் கூற முடியும்.

இங்கு நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் விதண்டாவாதத்தனம் கொண்டவை.

எடுத்துக்காட்டு, தனியொரு நாட்டில் செயல்படுத்த முடியாது என்றால் வேற்றுக் கிரகத்திலா எனும் கேள்வி. அதற்கு அப்படித்தான் பொருள் வருகிறதா? சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்றால் சோசலிசம் கம்யூனிசத்தின் எதிரியா? என்ற கேள்வி. இந்தப் பொருளை எங்கிருந்து எடுத்தீர்கள்?

எனவே, உங்கள் கேள்விகளின் நோக்கம் நேர்மையான விவாதத்தில் இல்லை.

பதில் கூறமுடியாத படி எழுதியிருக்கிறானே இவனை எப்படி அசிங்கப்படுத்துவது என்று சிந்தித்து நீங்கள் அசிங்கப்பட்டு நிற்கிறீர்கள்.
நேர்மையான முறையில் நீங்கள் விவாதிக்க விரும்பினால், நேர்மையான முறையில் அணுகுங்கள். மீண்டும் உங்கள் வழக்கமான நாராச நடையை தொடர்ந்தால் இது என்னுடைய கடைசி பதிலாக இருக்கும்.

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 3.

12. செங்கொடி, on 26/02/2015 at 5:37 பிப said:

அஞ்சான்,

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள் அது எனக்கு முதன்மையானதல்ல.

ஆனால் யார் சார்பாக விவாதிக்கப் போகிறீர்கள் என்பதே முதன்மையானது.

என்ன பிரச்சனை உங்களுக்கு?

இந்தப் பதிவில் இருந்த ஏதோ ஒன்று உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்பது அதில் தெரிகிறது.

முறையாக விவாதிக்க வேண்டுமென்றால் பதிவிலுள்ள விசயங்களை அலசிப்பார்த்து அதற்கான எதிர்வினையை முன்வைத்து வாதிடுங்கள்.

உங்களின் புரிதல் எல்லை வரை வந்து விவாதிக்க நான் தயார். ஆனால் உங்கள் நோக்கம் அப்படி இருப்பதாக தெரியவில்லை. வீண் அலட்டல்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை.

இந்தப்பதிவில் இருப்பது பதிவர் சுவனப்பிரியனுக்கான பதில்கள். இதில் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?

புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

13.maha, on 26/02/2015 at 9:53 பிப said:


செங்கொடி அவர்களே, செம காமெடி போங்க. அஞ்சானுக்கு பின்னால் யாரோ நெருப்பு வைத்து விட்டார்கள் போலும். குதியோ குதியென்று குதிக்கிறார். கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் மட்டும் பக்கத்தில் இருந்தீர்களானால் கடித்து குதறியிருப்பார். இவர் மட்டுமல்ல , உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சூடு தாங்காமல் குதியோ குதியென்று குதிக்கிறார்கள்.
இணையம் வந்ததும் வந்தது, இஸ்லாத்தின் டவுசரை கிழி கிழியென்று கிழித்து விட்டது. மற்ற மதங்களை தாக்கும் இடத்திலிருந்து, தங்கள் மதத்தை தற்காப்பதில்தான் முஸ்லிம்கள் இப்பொழுது நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள்.

அடுத்த 100 வருடம் தாங்கினாலும் பெரிய விசயம். இயற்கையின் அடிப்படையே ” மாற்றமே மாறாதது “. இதை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் இஸ்லாம் டான்ஸ் ஆடுவது பரிதாபத்திற்கு உரியது.

சுவனப்பிரியன் மட்டுமல்ல. பல முஸ்லிம்கள் கள்ள மௌனத்துடந்தான் இருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்களிடம் நிச்சயமாக பதில் இல்லை. வசைபாடி, மிரட்டி, சாபம் விட்டு, ஒப்பாரி வைத்து ஓடுவதுதான் தற்போதைய முஸ்லிம்களின் வழி.

14. அஞ்சான், on 27/02/2015 at 10:03 முப said:

//இந்தப்பதிவில் இருப்பது பதிவர் சுவனப்பிரியனுக்கான பதில்கள். இதில் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?// —- என்று கூறுகிறாய்

அப்படியென்றால் இந்தப்பதிவை பொதுப்பார்வையில் வைக்காமல் சுவனப்பிரியனுடைய தனிப்பார்வைக்கு மட்டும் என நீ ஏன் குறிப்பிடவில்லை?

ஏன் வலைத்திரட்டியில் இணைத்து மற்றவர்களை அழைத்தாய்?

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு நீ
இப்போது ஓடி ஒழிய சுவனப்பிரியனா ?

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 4.

8.செங்கொடி, on 26/02/2015 at 11:37 முப said:

அஞ்சான்,

நல்ல மனநல மருத்துவரைச் சென்று சந்திக்கவும். நான் மனநல மருத்துவன் அல்லன்

9. அஞ்சான்,, on 26/02/2015 at 1:04 பிப said:

இந்த பதிவில்
2. கேட்கப்படும் கேள்விகளை எந்த விதத்திலும் திசை திருப்பாமல், சரியான கோணத்தில் பதில் சொல்வேன் என்றும், தேவையற்ற திசைதிருப்பல்களோ, குறிக்கோளற்று பதில் கூறுவதோ, பதில் கூறாமல் கடந்து செல்வதோ இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்.

3. என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீடுகளுடனும், விவாதத்தை தேடல்களுடன், விவாத நேர்மையுடன் நகர்த்திச் செல்வேன் என்றும், என்னுடைய வாதங்களில் தவறிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாகவும் இருந்தால் தயங்காமல் அவற்றை ஏற்று மாற்றிக் கொள்வதில் எந்த வித அசூயையும் எனக்கு இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்.

4. இந்த விவாதத்திலிருந்து நானாக முறித்துக் கொண்டு வெளியேறிச் செல்லமாட்டேன், இறுதி முடிவு எட்டப்படும் வரை விவாதம் சீரிய முறையில் செல்வதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
என்று கூறப்பட்டிருப்பருக்கிறதா? இல்லையா?

எனது கேள்விகள் பதிந்தவற்றை கொண்டே உருவானதா? இல்லையா?

கற்பனை கோட்டைக்குள் இருக்கும் மன நோயாளியே!

நல்ல மனநல வைத்தியரை போய் பாரு என்று முதலில் நான் உனக்கு கூறியதை எனக்கே வாந்தியா?

என் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.

இல்லாவிட்டால்
“தனக்குள் தானே சிக்கிக் கொண்ட செங்கொடி எனும் மனநோயாளி” என்று இப்பதிவின் தலைப்பை உடனே மாற்றிவிடவும்.

10.செங்கொடி, on 26/02/2015 at 1:37 பிப said:

அஞ்சான்,

நீங்கள் யார்? சுவனப்பிரியனா? அல்லது அவர் சார்பில் கலந்து கொள்பவரா? ஆம் என்றால் தொடக்கத்திலிருந்து வாருங்கள்.

நாகரீகமாக பேசுங்கள். தேடலுடன் விவாதியுங்கள். உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். மாறாக, கழிந்து செல்ல வேண்டும் என விரும்பினால் உங்கள் வீட்டு கழிப்பறைக்குச் செல்லுங்கள்.

11.அஞ்சான்,, on 26/02/2015 at 2:27 பிப said:

திருப்பாதே. திசை திருப்பாதே.

கற்பனை கோட்டையில் கழிப்பறையை துணைக்கு அழைப்பதை கண்டு பரிதாபம் கொள்ளுகிறேன்.

என் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் எனக்கு இன்னும் என்னென்ன பெயர் கண்டு பிடிக்கப்போகிறாய்?

ஏன் சுவனப்பிரியன் என்பவரிடமே அஞ்சான் என்னை நார் நாராக கிழித்து தொங்க விட்டுக்கொண்டிருக்கிறார். அது எப்படி என்று நேரிடையாக கேட்டிருக்கலாமே?

உனது பதிவை படிக்கும் நடுநிலை பள்ளி மாணவன் கூட நான் கேட்ட கேள்விகளை கேட்பானே?

உன் கைகளாலேயே நீ சுறுக்குப்போட்டுக்கொண்டு தொங்குவதை காண சகிக்கவில்லை
.
பேசாமல் ஈரச்சாக்கை போர்த்திக்கொண்டு உன் இரு கால்களுக்கிடையில் உன் முகத்தை புதைத்துக்கொண்டு காலத்தை ஓட்டவும்.

ஈசன் உன்னை ரட்சிக்கட்டும்.

ஐயா, அன்புடையீர், அறிவு ஜீவியே, புவி சிறக்க உதித்தவரே, நான் கேட்ட கேள்விகளுக்கு அன்பு கூர்ந்து பதில் கூறுவீர்களா?

சட்டியில் இருந்தால் தானே?

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 5.

3.அஞ்சான், on 26/02/2015 at 7:00 முப said:

முற்றிலுமாக மூளைச்சலவை செய்யப்பட்டு புழம்பித்திரியும் மனநோயாளி செங்கொடியை நாய் என அழைப்பது சொறிநாய்களுக்கு கூட அவமானம் தான்.

ரஷ்யாவில் 1920 தொடங்கி 1991 வரை கிறிஸ்துவ மதத்தை எப்படி எப்படி எல்லாம் நசுக்கி அழித்தது என்று உனக்கு தெரியுமா?

ரஷ்யாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மதகுருக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்காண சர்ச்சுக்கள் இடித்து நொறுக்கப்பட்டதும் உனக்கெங்கே தெரியப்போகிறது.

கம்யூனிசத்தால் உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்டார்களே. ஆதாரங்கள் வேண்டுமா?

அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சிக்கு மக்களை கதறவிட்டுக்கொண்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிச ஆட்சியாளார்களை பற்றிய ஆதரங்கள் வேண்டுமா?

கற்பனை கோட்டைக்குள் இருக்கும் மன நோயாளியே நல்ல மனநல வைத்தியரை போய் பாரு.

4. செங்கொடி, on 26/02/2015 at 7:28 முப said:

மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்கும் அதே குரைப்புகள்.
முதலில் இந்தப் பதிவுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்பதை கூறுங்கள். பிறகு நீங்கள் கூறுபவற்றுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். விரிவாகப் பேசலாம்.

5.அஞ்சான்,, on 26/02/2015 at 8:05 முப said:

++முதலில் இந்தப் பதிவுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்பதை கூறுங்கள். பிறகு நீங்கள் கூறுபவற்றுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். விரிவாகப் பேசலாம்.++ என்று கூறும் அறிவிழந்த ஜீவியே

//கம்யூனிசம் செத்துப் போய் விட்டதா? ஒரு கொள்கை சமூகத்தில் தேவையற்றதாகி விட்டது, மரித்து விட்டது என்று கூற வேண்டுமாயின் முதலில் அந்தக் கொள்கை உலகில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செயல்படுத்தும் போது எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கை உருவானதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளைத் தந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கொள்கையை செத்துப் போன கொள்கை என்று கூற முடியும். ஆனால் இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது. கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை.//
என்று இப்பதிவில் நீ குறிப்பிட்டிருப்பதை மீண்டும் படி.

தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த போகிறாய்?

எனது கருத்தை மறுக்க முடியுமா மனநோயாளியே?

என்னுடைய ஆதாரங்கள் உன்னுடைய பதிலை மறுப்புகளை பின் தொடரும்.

6.செங்கொடி, on 26/02/2015 at 10:13 முப said:

அஞ்சான்,

முதலில் நாகரீகமாக உரையாடுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது என்றால் என்ன பொருள் என்று உங்கள் தமிழாசிரியரிடம் சென்று கேட்டுவிட்டு வாருங்கள்.

உணர்ச்சி வேகமாக செயல்பட்டால் அங்கு அறிவு குறையும் என்பதற்கு நடைமுறை உதாரணமாக இருக்கிறீர்கள்.

7. அஞ்சான்,, on 26/02/2015 at 11:01 முப said:

“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று ஒரு தனிப்பதிவு போட்டு வாசகர்களின் கருத்தை கேட்க முடியுமா?

உன் பிளாக்கிற்கு வாசகர் இருந்தால் தானே.!!!

கடுப்புடன் யாரையாவது வீண் வம்புக்கிழுத்து தலைப்பு கொடுத்து உன்னுடைய மனநோயை, பன்னாடைத்தனத்தை . “கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்ற அபத்தங்களுடன் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றாய்.

“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” “தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்று உனது பிளாக்கின் பேனரில் இணைக்க முடியுமா?

செத்துப்போன கம்யூனிசத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு எனது கேள்விக்கு பதில் கூற முடியாமல் நாகரிகம் இல்லை, தமிழ் தெரியவில்லை என பிதற்றலாமா?

இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை என்றால்கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்றுதானே?

ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்கிறாய்.

செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?

சோஷலிசம் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும் உலகெங்கிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல், நடத்தி சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?

எங்கே நாகரித்துடன், விளங்கும் தமிழில் விளக்கமாக பதில் கூறமுடியுமா?

அஞ்சான் said...

திரு. சுவனப்பிரியன் அவர்களே,

செங்கொடி எனும் ஒரு நச்சுக்கொடியின் பதிவொன்றை படித்து துணுக்குற்றேன்.

நான் அந்தபதிவில் இட்ட கருத்துக்களுக்கு நச்சுக்கொடி தன்னுடைய பதில்களில் என்னை மீண்டும் மீண்டும் தாங்களுடன் இணைக்க படுபிரயத்தனம் எடுத்திருப்பதாலும்

நச்சுக்கொடிக்கான என்னுடைய கேள்விகள் பலரை சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதாலும்

தாங்களுடைய இணையதளத்தை கண்டுபிடித்து நான் பதிந்தவற்றை இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

அன்பு கூர்ந்து அனுமதிப்பீர்களாக.

என் கருத்துக்களும் கேள்விகளுமே தெளிவுபடுத்தும் என்பதால் என் அறிமுகம் தாங்களுக்கு அவசியமிருக்காது.

தாங்களுடைய சுய செயல்பாடுகளில் என் குறுக்கீடு இருக்காது.

உங்களுடைய தினங்கள் இனிய தினங்களாக தொடங்கட்டும்.

Best Regards.

அஞ்சான்.

செங்கொடியை பிண்ணி பெடலெடுத்து தோலுரித்து வறுத்து எடுத்துக்கப்படும் காட்சிகள்.

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 6.


20 பதில்கள்

1. அஞ்சான், on 25/02/2015 at 5:04 பிப said:

இசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசம்.

உலகம் முழுவதிலும் கம்யூனிசம் பெயரால் இவர்கள் செய்த வண்டவாளங்கள், கொடுமைகள் வெளியே வந்து, ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம்.

குரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.

2. செங்கொடி, on 25/02/2015 at 8:05 பிப said:

எது குரைப்பு? யார் நாய்? மனிதர்களுக்கு பொருளற்ற சப்தங்களை குரைப்பு என்று வகைப்படுத்தலாம். இங்கு எழுதப்பட்டிருப்பவை பொருளோடு கூடிய மறுப்பாக இருக்கிறது. எனவே, இதை குரைப்பு என்று வகைப்படுத்த முடியாது. ஆனால் இங்கு பொருளற்று,பொருத்தமற்று இருப்பது உங்களின் பின்னூட்டம் தான். எனவே யார் நாய் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தீன் said...

அல்லாஹ்தாலா ஆண் விலா எலும்பிலிருந்து பெண்ணை படைத்தான் என்று தன் திருமறையில் தெளிவாக கூறியுள்ளான். விஞ்ஞானம் இன்று வித்தியாசத்தை கூறலாம். ஆகவே பெண்ணை பாதுகாப்பது ஒரு ஆணின் கடமை என்பதையும் உணர வேண்டும். மேலும் ஒரு பெண் வேலைக்கு செல்வதால் அவள் எதிர்க்கொள்ளும் தொல்லைகள் அநேகம்.

செங்கொடி said...

இந்த பதிவுக்கு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்
https://senkodi.wordpress.com/2015/03/09/suvana-4/
உங்கள் பார்வைக்கும் பங்களிப்புக்கும்