சீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா
“ஆதித்தமிழன் அம்மணமாக திரிந்தான்: சீமான் அப்படியிருக்க தயாரா” - ஹெச் ராஜா.
ஆதித் தமிழனை விடுங்கள் அருமை ராஜாவே!
அகோரிகள் இன்றும் அம்மணமாக காசியில்
அலைந்து திரிவதை அறியாதவரா நீங்கள்?
இந்துத்வா பேசிடும் நீங்களும் உங்கள் கூட்டமும்
இதே போன்று அம்மணமாக அலைந்திட தயாரா?
தமிழனின் தொன்மையான வரலாறை தோண்டினால்
'தாம் தூம்' என்று குதிப்பது ஏன் அருமை ராஜாவே!
கைபர் போலன் வழியாக எனது நாட்டுக்குள் புகுந்து
எனது நாட்டு தொப்புள் கொடி உறவை சூத்திரனாக்கி
கோவிலுக்குள்ளும் இன்று வரை அனுமதிக்காத அந்த
கொடுமைகள் வெளி வந்து விடும் என்ற பயமா?
சீமானைப் பற்றி பல முரண்கள் என்னிலும் உண்டு
அதற்காக இந்துத்வா பேசி எனது நாட்டை அழிக்கும்
உம்மைப் போன்றவரெல்லாம் சீமானை வசை பாடுதலை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என்று
கனவிலும் நினைக்க வேண்டாம்! அருமை ராஜாவே!
எந்நாளும் தமிழர்கள் சிந்தனையை சிதறடித்து விட்ட
ஏமாளிகள் என்று எண்ண வேண்டாம்! அருமை ராஜாவே!
1 comment:
அரேபிய வல்லாதிக்க காலிகளின் கூடாரம்தான் இசுராம் என்பதை அறிந்தவா் எச்.ராஜா.அவரை தங்களால் ஜெயிக்க இயலாது.
அகோாிகள் இந்துக்கள் அல்ல.
Post a Comment