
ஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு!
காதலர் தினத்தை ஊர் முழுக்க கண்டிக்கும் பிஜேபியின் அலுவலகத்தில் சென்ற வெள்ளிக் கிழமை ஐந்து வயது குழந்தை ஒரு இளைஞனால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளாள். கல்கத்தா பெஹ்லா ஏரியாவில் உள்ளது பிஜேபி மண்டல அலுவலம். அந்த ஏரியாவில் உள்ள சிறு குழந்தையை நெடு நேரமாகியும் காணாது தேடியுள்ளனர். முடிவில் பிஜேபி அலுவல கதவை தட்டியுள்ளனர். உள்ளேயிருந்து அந்த சிறு குழந்தை அழுது கொண்டு வெளியேறியுள்ளது. உள்ளே 17 வயது மதிக்கத்தக்க இளைஞன் இருந்துள்ளான். குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் உடையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஆத்திமடைந்த பெற்றோர் காவல் நிலையம் சென்றனர்.
வன்புணர்வு நடந்துள்ளதை உறுதி செய்து கொண்ட காவல் துறை குழந்தையை மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டு அந்த இளைஞனை கைது செய்தனர். 'மருத்துவர்கள் வன்புணர்வு நடந்துள்ளதை உறுதிப் படுத்தியுள்ளனர்' என்கிறார் போலீஸ் கமிஷனர் ரஷீத் முனீர் கான்.
செய்தியறிந்து பொது மக்கள் பிஜேபி அலுவலகத்தை உடைத்து எறிய ஆயத்தமானார்கள். ஆனால் இது தவறு என்று சிலர் தடுத்து அவர்களை சமாதானப் படுத்தினர். காதலர் தினத்தன்று இந்துத்வா இந்த மண்ணுக்கு கொடுத்த பரிசு ஐந்து வயது குழந்தை கற்பழிப்பு.
இந்துத்வாவினால் வார்த்தெடுக்கப்படும் இளைஞர்கள் எந்த வழியில் செல்வார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதும். இந்து தாய்மார்களே! உங்கள் குழந்தைகளை கிருபானந்த வாரியார், விவேகானந்தர், மஹாத்மா காந்தி போன்ற உதாரண புருஷர்களாக மாற உண்மையான இந்துக் கொள்கைகளை போதியுங்கள். தேச பக்தி வேடம் போட்டு இளைஞர்களை காமுகர்களாகவும், கொலைகாரர்களாகவும் மாற்றும் இந்துத்வாவின் சாயல் கூட உங்கள் பிள்ளைகள் மேல் படராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் இந்துத்வா இளைஞர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமே ஏற்படுகிறது.
தகவல் உதவி
என்டிடிவி
14-02-2015
No comments:
Post a Comment