Followers

Tuesday, February 03, 2015

மாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணமித்ததா?பாலூட்டிகள் பெரும்பாலும் நிலத்திலேயே வாழ்கின்றன. திமிங்கிலம் மட்டுமே நீரில் வாழ்கிறது. ஒரு உயிரிலிருந்து மற்றொன்று பரிணமித்து வந்ததற்கு பல காரணங்களை பரிணாமவியலார் கூறுவதுண்டு. ஒரு செல் இரு செல்லாக பரிணமித்து நீரில் வாழ்ந்த உயிரினங்கள் பிறகு நிலத்துக்கு வந்து இயற்கை தேவைகள் ஏற்பட்டதால் கால்கள் தானாக முளைத்து நான்கு கால் உயிரினமாக பரிணமித்து குரங்கு வரை வந்து அதிலிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் படிப்படியாக உரு மாறினான் என்று டார்வினின் கோட்பாட்டை பலரும் எடுத்து விடுவர். கடவுளை மறுக்க இந்த வாதம் இவர்களுக்கு உதவி செய்வதால் நாத்திகர்கள் பெரும்பாலும் இந்த பரிணாமவியலை தூக்கிப் பிடிப்பர். இதற்கு படிம ஆதாரங்களோ ஜெனடிக் ஆதாரங்களோ சமர்பித்தார்களா என்றால் அதுவும் கிடையாது. எல்லாமே அனுமானங்கள்தான்.

உலகிலேயே மிக பருமன் கூடிய விலங்கினங்களில் பெரிதானதாக திமிங்கிலம் கருதப்படுகிறது. இது பாலூட்டியாகவும் உள்ளது. இனப் பெருக்கம் செய்யும் முறை, பார்வைத் திறன், கேட்கும் திறன், இரத்த ஓட்ட அமைப்புகள் போன்றவை அனைத்தும் கடல் வாழ் உயிரினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இது பெரும் சிக்கலை அவர்களுக்குள் ஏற்படுத்தியது. எதிலிருந்து இது பரிணமித்திருக்கும் என்ற கற்பனை குதிரையை தட்டி விட்டனர். உருவ ஒற்றுமையை வைத்து நில வாழ் உயிரினங்களில் எதோடு ஒத்துப் போகிறது என்ற ஆய்வில் இறங்கினர். பெரிதான வாய் தலை அமைப்பு போன்ற ஒன்றிரண்டு ஒற்றுமைகளை வைத்து தங்கள் கற்பனைகளையும் கலந்து மாடுகளிலிருந்து திமிங்கிலம் பரிணமித்தது என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்த ஆய்வுகளுக்கு படிம ஆதாரங்கள் எதனையும் இவர்கள் சமர்பிக்கவில்லை. 500 மில்லியனுக்கும் அதிகமான படிமங்கள் நம்மிடம் ஆதாரங்களாக உள்ளன. பல லட்சம் வருடங்கள் பழமை வாய்ந்த படிமங்களும் ஆய்வாளர்களிடம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவை அனைத்துமே அன்று எவ்வாறு உருவத்தில் இருந்ததோ இன்று வரை எந்த மாற்றங்களும் இல்லாமல்தான் உள்ளன. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிணமித்திருந்தால் கண்டிப்பாக இடைப்பட்ட இனம் கிடைத்திருக்க வேண்டும். இன்று வரை அவ்வாறு ஒன்று கிடைக்காததால் பரிணாமம் கற்பனை கதை என்ற முடிவுக்கு நாம் சுலபமாக வந்து விடலாம்.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த முஸ்தாக் ஹூசைன் பரிணாமவியலுக்கு ஆதரவாக ஒரு ஆய்வினை வெளியிட்டுள்ளார். மாட்டிலிருந்து திமிங்கிலம் வந்திருக்கலாம் என்றும் அதற்கு ஆதாரமாக அந்த இரு உயிரினங்களின் ஜீன்களின் எண்ணிக்கை ஒத்து வருவதாக தனது அய்வில் கூறியுள்ளார். இதே ஒற்றுமை வேறு உயிர்களுக்கும் பொருந்தி வருவதை அவர் ஏனோ வசதியாக மறைத்து விட்டார். இவரது ஆய்வுக்கு படிம ஆதாரங்கள் எதனையும் சமர்பிக்கவில்லை. வழக்கம் போல் இவரும் இப்படியும் இருக்கலாம் என்று தான் கூறுகிறார். இது சம்பந்தமாக அவர் கொடுத்துள்ள ஜீன்களின் தொடர் பட்டியலைத்தான் நாம் பார்க்கிறோம். அடிப்படை ஆதாரமற்ற இந்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் ஆர்டிகிளாக வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு தேவை குர்ஆனை பொய்பிக்க எதையாவது செய்தாக வேண்டும். :-)

கடல் வாழ் உயிரினங்களுக்கும் நில வாழ் உயிரினங்களுக்கும் அடிப்படையில் சுவாச உறுப்புகளில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. முதலில் இங்கு மாற்றங்கள் ஏற்பட்டால்தான் கடலிலிருந்து நிலத்துக்கோ அல்லது நிலத்திலிருந்து கடலுக்கோ ஒரு பிராணி பரிணாமம் அடைந்தால் உயிர் வாழ முடியும். அந்த சுவாச உறுப்புகள் எப்போது மாற்றி அமைக்கப்பட்டது? யாரால் மாற்றியமைக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கும் அவர்களிடத்தில் பதில் இல்லை.

உலக முடிவு நாள் வரை இவர்களால் பரிணாமத்துக்கு ஆதாரங்களை சமர்பிக்க முடியாது. கற்பனை கதைகளை வேண்டுமானால் சொல்லி காலத்தை ஒப்பேத்தலாம். பல நாடுகள் இந்த ஆய்வுகளுக்காக மில்லியன் கணக்கில் செலவு செய்து வருகிறது. பரிணாமம் பொய் என்று சொல்லி விட்டால் ஆய்வுகளில் உள்ளவர்களின் வேலை போய் விடும். எனவே அது வரை இழுத்து பிடித்து எதையாவது சொல்லி ஒப்பேத்திக் கொண்டிருப்பார்கள். நாமும் இது போன்ற நகைச்சுவைகளை ரசித்து விட்டு சென்று விட வெண்டியதுதான். :-)

தகவல் உதவி
ஹாருன் யஹ்யா
harun yahya
new york times
08-11-2014

http://www.harunyahya.com/en/Articles/196418/The-Express-Tribune%E2%80%99s-error-concerning-%E2%80%98cow-whale%E2%80%99-evolution

நகைச்சுவைக்காக இந்த காணொளி!


1 comment:

சுவனப் பிரியன் said...

சாரங்கன்!

//நல்லது எங்கே இருந்தாலும் அதை ஏற்று அங்கு கடவுளை காணும் தன்மை கொண்டது ஹிந்து மதம்.//

நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

அப்போ இந்த தண்டனை எதற்கு சார்? இதை போதித்த மதம் எது?

//குல்லா போடாதவர்கள் நரகம் சென்று நலிவர் என்பது இஸ்லாம் மதம்//

குல்லா போடுவது யூதர்களின் பழக்கம். குர்ஆனிலோ நபி மொழிகளிலோ குல்லா போடச் சொல்லி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. நானும் குல்லா போடுவதில்லை :-)

//பாகிஸ்தான்ல முந்தா நேத்து தான் எழுவது ஷியாக்களை குண்டு வைத்து கொலை பன்னிருகீங்க. //

பாகிஸ்தான் காரன்கிட்டே கேட்டா இந்திய சதி என்று சொல்கிறான். அது யூதர்களின் வேலையா என்பதும் உறுதியாக தெரியவில்லை. சென்னை மண்ணடியில் ஷியாவும் சன்னியும் காலா காலமாக நட்போடு பழகி வருகிறார்களே! ஆக இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் இஸ்லாம் அல்ல. அரசியல் என்பது விளங்குகிறதா?