Followers

Tuesday, February 17, 2015

மதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்!



இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் மதாயீன் சாலிஹ் என்ற இறைவனால் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்திருந்தார். இறைத் தூதர் சாலிஹ் நபியும் அவரை பின் பற்றி வாழ்ந்த மக்களும் வாழ்ந்த இடங்கள் இவை. இறை கட்டளையை மீறியதால் நபி சாலிஹையும் அவரை பின் பற்றியவர்களையும் தவிர்த்து மற்றவர்களை அழித்து விட்டதாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். நீங்கள் நடந்து செல்லும் இடங்கிலேயே அந்த அழிக்கப்பட்ட இடங்களை பார்க்கிறீர்கள் என்றும் குர்ஆனில் இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். இந்த இடங்களை பார்க்க இளவரசர் விருப்பப் பட்டதால் இளவரசர் சுல்தான் பின் சல்மான் அவரை அல் ஊலாவில் இருக்கும் மதாயீன் சாலிஹ் என்ற ஊருக்கு சென்ற புதன் கிழமை அழைத்து வந்திருந்தார். அந்த புகைப்படத்தையே நாம் பார்கிறோம்.

இந்த இடத்திற்கு நானும் பல முறை சென்றுள்ளேன். சவுதியில் உள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. 5000 அல்லது 7000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனித குலத்தின் நாகரிகம் எப்படி இருந்தது என்பதை இன்றும் நாம் பார்கலாம். அனுமதி இலவசம். விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சென்று பார்த்து வாருங்கள். இறைவனின் கோபம் எந்த அளவு ஒரு சமூகத்தை அழித்திருக்கும் என்பதை நாமும் உணரலாம். இறைவனைப் பற்றிய அச்சம் மேலும் அதிகரிக்கும்.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் காப்பாற்றினோம், நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை பயங்கரமான பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.
-அல்குர்ஆன் 11:64-67




தகவல் உதவி
சவுதி கெஜட்
12-02-2015

No comments: