Followers

Thursday, February 19, 2015

செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி! -1(கம்யுனிஸ கொள்கையில் வெறுப்புற்ற ஹங்கேரிய மக்கள் ஸ்டாலினின் சிலைக்கு கொடுத்த மரியாதையே இது)

//மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம்.//

மதவாதியை உங்களை அறியாமலேயே மதிவாதி அதாவது சிந்திக்கத் தெரிந்தவன் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. உங்களையும் அறியாமல் ஆத்திகத்தின் பக்கம் வர ஆரம்பித்துள்ளீர்கள் என்பதையே இந்த தட்டச்சு பிழை காட்டுகிறது. :-)

//பதிவர் சுவனப்பிரியனை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். இது சவால். ஏற்றுக் கொள்ளும் துணிவு இருக்கிறதா பதிவர் சுவனப்பிரியனிடம்.//

ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் நான், கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோ நாத்திகத்தையோ ஏற்றுக்கொள்ள எந்த தேவையும் இல்லை. இஸ்லாத்தில் குறை இருந்தால் அல்லவா மற்ற இடங்களை தேடி நான் ஓட வேண்டும்? இஸ்லாத்தில் கொஞ்சம், முதலாளித்துவத்தில் கொஞ்சம், நாத்திகத்தில் கொஞ்சம் சோஸலிஷத்தில் கொஞ்சம் என்று எடுத்து கார்ல் மார்க்ஸ் செங்கொடிக்கு கொடுத்த ஒரு நாத்திக சித்தாந்தமே இந்த கம்யுனிஸம். எந்த ஒரு இஸமும் மக்களால் பின் பற்றத்தக்க ஒன்றாக இருக்க வேண்டும். கம்யுனிஸ கொள்கைகளை அதனை உருவாக்கிய கம்யூனிஸ்டுகளே பின்பற்றுவதில்லை.

"மகளே ஸ்வெத்லானா! உடலோடு ஒட்டிக்கொள்ளும் படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!"

நூல்: சர்வம் ஸ்டாலின் மயம், என்ற புத்தகத்தில் பக்கம்;135

தனது மகளுக்கு நம்ம ஸ்டாலின் அண்ணாச்சி எழுதிய கடிதமே நாம் மேலே பார்பது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய வித்தியாசம் உண்டு. அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இஸ்லாமும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. இதை உணராத காரணத்தினாலேயே கம்யூனிஸ்டுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களையும் தொழிற்சாகைளுக்கு இழுத்து வந்து கட்டாய வேலை வாங்கினர். கம்யுனிஸ வெறியில் ஏதோ சில ஆண்டுகள் இவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த திட்டம் முடிவில் தோல்வியில் முடிந்தது. குடும்ப வாழ்வு சிதைந்து பல குழந்தைகள் பராமரிப்பின்றி மனநோயாளிகளாக மாறியதைத்தான் பார்தோம். ரஷ்யா மக்களே கம்யூனிஸத்தை குப்பை கூடையில் தூக்கி எறிந்தனர். ஸ்டாலின் சிலையை உடைத்து அதே கம்யுனிஸ்டுகள் குப்பை கூளத்தில் தள்ளி விட்டுருப்பதைத்தான் இங்கு நாம் பார்கிறோம். ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற உஸ்பெஸ்கிஸ்தான் இன்று கம்யூனிஸத்தை தூர எறிந்து விட்டு இஸ்லாத்தை கையில் எடுத்துள்ளது. செசன்யாவிலும் கம்யுனிஸம் போய் இஸ்லாம் ஒவ்வொரு வீட்டையும் ஆள்கிறது.(போன மாதம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனுக்கு எதிராக சார்ளி ஹெப்டோ பத்திரிக்கையை எதிர்த்து கம்யூனிஸ செசன்யாவில் திரண்ட முஸ்லிம்களில் ஒரு பகுதியினரே இவர்கள். கம்யூனிஸம் தோன்றிய நாடுகளிலேயே அதனை சவக்குழிக்கு அனுப்புவதில் முன்னணியில் உள்ளது முஸ்லிம்களே))

ஆணும் பெண்ணும் சமம்தான் என்று சொன்ன ஸ்டாலின் தனது மகளை மட்டும் இஸ்லாமியர்களைப் போல் கண்ணியமாக உடை அணிய ஆர்வமூட்டுகிறார். தனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்று வாழ்ந்ததனாலேயே கம்யூனிஸம் நமது கண் முன்னாலேயே கரைந்து கொண்டிருக்கிறது.

அடுத்து ஆணும் பெண்ணும் சரி சமமாக உழைக்க வேண்டும் என்று கூறும் செங்கொடியும் மற்ற கம்யூனிஸ்டுகளும் தங்கள் மனைவியை அவ்வாறுதான் நடத்துகிறார்களா? தமிழகத்தில் உள்ள வலது, இடது, உல்ஃபா, மாவோ என்று எத்தனை கம்யுனிஸ்டுகள் உள்ளனரோ அவர்களில் 80 சதவீதமான நபர்கள் தங்கள் மனைவியை குடும்ப தலைவியாகத்தான் நடத்துகின்றனர். நன்றாக சமைக்க வேண்டும்: வீட்டை நன்கு பராமரிக்க வேண்டும்: அழகிய குழந்தைகளை பெற்றுத் தர வேண்டும்: அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டும். வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உழைத்து களைத்து வரும் கணவனுக்கு இல்லற சுகத்தை தர வேண்டும். கற்பை பேணிக் கொள்ள வேண்டும். இதுதான் கம்யூனிஸ்டுகளின் வீடுகளிலும் பெரும்பாலும் நடக்கிறது. ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் நடைமுறையில் தாங்கள் மிக கவனமாகவே இருந்து கொள்கின்றனர். :-)

அடுத்து கம்யுனிஸ கொள்கைகள் எங்கெல்லாம் போகிறதோ அதனை ஏற்காத மக்களை வன்முறையால் கொன்றொழிப்பதே இவர்கள் வேலை. கார்ல்மார்க்ஸ், எஞ்செல்ஸ், ரோஸா லக்ஸம்பர்க், லெனின், ட்ராட்ஸ்கி, மாவோ, ஸ்டாலின், போல்போட் என்று நீளும் வரிசையில் உள்ள அனைவருமே வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதை முக்கியமானதொரு அடித்தள கொள்கையாக கொண்டவர்கள். நான் உயரிய நோக்கத்திற்காக கொல்கிறேன் என்றுதான் எல்லா வன்முறையாளர்களும் கூறுகிறார்கள். :-)

திபெத்தில் லட்சக்கணக்கான பவுத்தர்களையும் உய்குர் மாகாணத்தில் லட்சக்கணக்கில் முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி கம்யூனிஸத்தை திணிப்பதும் உடன்படாதவர்களை கொன்று ஒழிப்பதுவுமே கடந்த கால கம்யூனிஸ வரலாறு. கம்யூனிஸ்ட் என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்களிலிருந்து, நேபாள மாவோயிஸ்டுகளிலிருந்து, பெங்கால், ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரா தமிழ்நாடு என்று பரவும் நக்ஸல்பாரிகளிலிருந்து, உல்பா கம்யூனிஸ்டுகளிலிருந்து, வடகிழக்கு பயங்கரவாதிகளிலிருந்து நடுத்தெருவில் சந்தையில் என்று குண்டுவைக்கும் பயங்கரவாதிகள், வன்முறையையே தங்கள் வாழ்க்கையாக கொண்டுள்ளனர். கம்யுனிஸ வரலாறுகளை எங்கு புரட்டினாலும் அங்கு ரத்தக் கறையைத்தான் முதலில் நாம் பார்கிறோம். ஆட்சியை பிடிப்பது வரை ஏழைகளின் பக்கம் நிற்பர். ஆட்சியில் அமர்ந்து விட்டால் முதலாளிகளின் பக்கம் சாய்ந்து விடுவர். இந்த இரட்டை வேடத்தினால்தான் உலக மக்கள் கம்யூனிஸத்தை தூக்கி எறிந்தது.

உடனே நீங்கள் ஐஎஸ்ஐஎஸ்ஐ உதாரணமாக்கி இஸ்லாத்தில் இல்லையா என்று கேட்கலாம். இந்த தீவிரவாதிகளை உருவாக்கியதே அமெரிக்க ஆயுத வியாபாரிகள்தான். முகமூடிகளை கழற்றினால் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்களாகவும், அமெரிக்கர்களாகவும், இஸ்ரேலியர்களாகவும் இருப்பர். அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ்ஐ ஒடுக்கி விடலாம். ஆனால் அரபு நாடுகளை மிரட்டி வைக்க அதற்கு ஐஎஸ்ஐஎஸ் தேவைப்படுகிறது. ஒபாமா கட்சியை நடத்த அமெரிக்க ஆயுத வியாபாரிகள் பெரும் பணத்தை தருகின்றனர். அவர்களை ஒபாமா எந்த நாளும் பகைத்துக் கொள்ள மாட்டார். அமெரிக்காவின் தேவை முடியும் வரை ஐஎஸ்ஐஎஸ் தினமும் கழுத்தறுப்பு வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும். :-)

அடுத்து தீண்டாமையை எடுத்துக் கொள்வோம். நமது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கம்யுனிஸம் இருந்தும் எந்த இடத்திலும் அவர்களால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அநேக கிராமங்களில் கம்யூனிஸ கொடி பறப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த அளவு அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸத்தை விரும்பினாலும் அவர்களுக்கு இன விடுதலையை கம்யூனிஸத்தால் தர இயலவில்லை.

முன்பு மீனாட்சிபுரமாக இருந்து இன்று ரஹ்மத் நகராக மாறியுள்ள கிராமத்துக்கு சில ஆண்டுகள் முன்பு பிபிசி குழு கள ஆய்வுக்கு சென்றிருந்தது. அதனை மேற்கொண்டு பார்போம்.

தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.

நன்றி:
பிபிசி தமிழோசை

லெனினின் கருத்துக்களும், ஸ்டாலினின் கருத்துக்களும் சாதிக்காதவைகளை நபிகள் நாயகம் கொண்டு வந்த ஏக இறைக் கொள்கை தமிழகத்தில் சாதித்துக் காட்டியுள்ளது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல எழுதி வைத்த கம்யூனிஸ சட்டங்களை விட அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தி அதில் வெற்றியும் கண்ட இஸ்லாமிய கொள்கையே சிறந்தது என்பது என் வாதம். இஸ்லாம் இனியும் தமிழகத்தில் வீறு கொண்டு எழும். சமாதியாகி விட்ட கம்யுனிஸ கொள்கை இனியும் துளிர்காது.

உங்களை விட அதிக கொள்கை பிடிப்புடன் இருந்து நாத்திகம், கம்யூனிஸம், பெரியாரிஸம், புத்திஸம் என்று எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் இஸ்லாத்தில் சரணடைந்தவர்தான் பெரியார் தாசன். அது போன்று உங்களுக்கும் ஒரு நாள் வரலாம்.

ஆனால் நீங்கள் முயற்சி செய்யுங்கள். நம்பிக்கையில்தானே வாழ்க்கையே ஓடிக் கொண்டிருக்கிறது. :-)

இன்னும் வரும்......


7 comments:

செங்கொடி said...

வணக்கம் சுவனப்பிரியன்,

இந்த இடுகைக்கு மறுப்பு இடுகை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன். உங்கள் பார்வைக்கும் பங்களிப்புக்கும்.
https://senkodi.wordpress.com/2015/02/25/suvana-3/

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 1.

16. அஞ்சான், on 27/02/2015 at 1:02 பிப said:

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட விதண்டாவாதத்திலேயே ஊறித்த‌ளைத்த‌ மனநோயாளியே.
மறுபடியும் முதலிலிருந்தா?

எனக்கு பதிலளிக்க முடியாமல் அரண்டு போய் தோல்வியை உன்னுடைய பாணியில் பறைசாற்றி ஓடுகிறாய்.

விடமாட்டேன்.

17.Zidane, on 27/02/2015 at 2:09 பிப said:

Sengodi sir, please reply to anjaan’s questions

18.செங்கொடி, on 27/02/2015 at 3:54 பிப said:

ஸிதேன்,

மனப்பிறழ்தலுள்ளவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலை. இது போன்றவர்கள் பதிலை எதிர்பார்ப்பதும் இல்லை. இதுவும் ஒரு வகையில் சுய சொரிதல் தான். சொரிந்து கொள்ளட்டும் எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.

19. Suresh, on 28/02/2015 at 11:00 முப said:

//தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த போகிறாய்?//

அஞ்சான்,

உங்களின் இந்த வாக்கியம் சரியான விவாதமல்ல.

உங்கள் (May not be) கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் கூட பைபிளில் கூறப்பட்டுள்ளதை கடை பிடிக்க முடியவில்லை. அதனால், பைபிளில் கூறப்பட்டுள்ளவைகளை எந்த கிரகத்திலுள்ள மனிதர்களுக்கு செயல் படுத்த போகிறீர்கள்?

20. அஞ்சான், on 28/02/2015 at 3:24 பிப said:

//Zidane, on 27/02/2015 at 2:09 பிப said:

Sengodi sir, please reply to anjaan’s questions//

Zidane,

Do not disgrace yourself by addressing the pest sengodi as sir.

Through your comment you have declared that I am right and the pest sengodi is dodging through stupid, silly and utter nonsense.

This pest sengodi cannot reply my questions at all . He only can twist and turn always.

Anybody can notice that this parasite sengodi’s purpose is to disgrace a particular religion by hiding under the dead rotting communism corpse.

When this pest sengodi gets the “treatment” sooner or later by the dept. concerned then this pest sengodi will eat every bit of what he has vomited.

To escape sengodi pest will plead that he is mentally unfit . .

Nowhere he can escape at all.

I DARE HIM TO PUBLISH THIS COMMENT.

Hope you understood.

Zidane have a good day.

அஞ்சான்,, on 28/02/2015 at 6:42 பிப said:

திரு.Suresh அவர்களே,

கருத்துக்கு நன்றி,

செங்கொடி கூறுவதப்போல் கம்யூனிஷத்தைக் கொண்டு “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் என்று பைபிளில் அல்லது வேறு எந்த மத நூலிலாவது உள்ளதா?

அல்லது கிறிஸ்தவர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா?

பைபிளின் பெயரால் ஆட்சி செய்யப்பட்டு கம்யூனிஷத்தைப்போல் கோடானு கோடி மக்களை கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டிருக்கிறதா?

கிறிஸ்தவம் தோன்றி 2015 ஆண்டுகளில் இன்று வரை கிறிஸ்தவம், பைபிளின் பெயரால் கொல்லப்பட்டர்வர்களின் தொகையை விட ஒப்பீட்டில் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று தோன்றிய நச்சான கம்யூனிஷத்தால் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் தொகை மிகைத்திருக்கிறதே.

கிறிஷ்தவம், பைபிளின் பெயரால் மருத்துவமனைகள், அறநிலையங்கள், அனாதை இல்லங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இத்யாதி இத்யாதிகளால் இன பேதமின்றி தொன்றுதொட்டு மனிதசமுதாயத்திற்கு செய்திருக்கும் செய்துவரும் தொண்டுகளின் குண்டூசி தலைஅளவு கூட கம்யூனிஷம் செய்திருக்குமா?

கம்யூனிஷத்தின் ஆட்சியிலிருத்து விடுபட்ட நாட்டிலுள்ளவர்கள் எல்லாம் இன்று மகிழ்ச்சியில் சுதந்திரமாக திளைத்திருக்கிறார்களே.

கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் செங்கொடி எடுத்துக்கொண்டு துதிபாடி வாழ்வதில் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை.

செங்கொடி கம்யூனிஷத்தின் சிறப்புகளை இமயத்தின் மீது ஏறி நின்று கூவட்டும். கவலை இல்லை.

செங்கொடியின் நோக்கம் கம்யூனிஷ போர்வையில் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பது யாருக்கும் புரியாமலிருக்காது.

இன்றைக்கு ஒரு மதம், நாளை மற்றொன்று நாளை மறுநாள் மற்றொன்று இப்படியே ஒவ்வொன்றின் மீது அபத்தங்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்து வாசகர்களின் மனதில் நஞ்சை விதைத்து மத நல்லிணக்கத்தை வேரறுப்பதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.?

மத இன ஜாதி சண்டை சச்சரவுகளில்லாமல் இப்புவியில் உள்ள யாவரும் இன்புற்று வாழவேண்டும்.
என் கேள்விகளுக்கு செங்கொடி பதில் கூறியே ஆக வேண்டும்.

உங்கள் தினங்கள் இனியதாக தொடங்கட்டும்.

தொடரும் ….

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 2.

14.அஞ்சான், on 27/02/2015 at 10:03 முப said:

//உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்.// என கொட்டை எழுத்தில் பதிவின் கீழே போட்டிருப்பதின் நோக்கம் உன்னை போன்ற மனநோயாளிகள் உனக்கு டண்டணக்கா டடக்கு நக்கா பாடி ஆடவா?

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள்// — சரி ஓ.கே. !!

நீயே——////முறையாக விவாதிக்க வேண்டுமென்றால் பதிவிலுள்ள விசயங்களை அலசிப்பார்த்து அதற்கான எதிர்வினையை முன்வைத்து வாதிடுங்கள்.// —— என்றும்

விவாதிக்க வந்தால்——– //என்ன பிரச்சனை உங்களுக்கு?// //அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?// //இந்தப் பதிவில் இருந்த ஏதோ ஒன்று உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.// என்றும் கூறுகிறாய்.

உன் பதிவில் இருந்து நீயே,நீயே,நீயே,நீயே, குறிப்பிட்ட , பறை சாற்றிய, புலம்பிய, உளறியவை கொண்டே எனது கேள்விகள். – பதில்???

மறுபடியும் முதலிருந்து..
எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம். உண்மையா? பொய்யா?

நீ இந்த பதிவில் கூறியிருப்பது:
//1.உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை.//

//2.தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது.//

அப்படியென்றால் தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த? எந்த காட்டில்?

இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை என்றால் கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதாலேயா?

//3.ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது.//

ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்றால் செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?

கம்யூனிஷத்தின் பெயரை காப்பாற்ற சோஷியலித்தின் பெயரால் ரஷ்யாவிலும் சீனாவிலும் உலகெங்கிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல், நடத்தி சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?

//4.கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை//

அப்படியென்றால் ? ஏன் தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ?

நாட்டில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லாம் மனித குலம் இல்லையா? கம்யூனிஷம் மிருகங்களுக்கானதா?

//..”உங்களின் புரிதல் எல்லை வரை வந்து விவாதிக்க நான் தயார்.” என்று நீ தானே சவால் விட்டிருக்கிறாய்?

எங்கே என் கேள்விகளுக்கு தயை கூர்ந்து, அன்பு கூர்ந்து, இரக்கப்பட்டு பதில் கூறலாம் தானே?

15.செங்கொடி, on 27/02/2015 at 10:51 முப said:

அஞ்சான்

உங்கள் அசட்டுத்தனத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.முதலில் ஒருமையில் விழிப்பதை நிருத்துங்கள். அடுத்து நீங்கள் தேடலுடன் விவாதிக்க வந்திருக்கிறீர்கள் எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் எழுதுங்கள். அப்படியில்லாதவரை உங்கள் நோக்கம் எதுவோ அப்படித்தான் என் பதில்களும் இருக்கும்.

இது சுவனப்பிரியனுக்கான பதிவு தான். ஆனால் சுவனப்பிரியன் சார்பில் யார் வேண்டுமானாலும் வாதிடலாம். சுவனப்பிரியன் சார்பில் வாதிடுவது என்றால் சுவனப்பிரியனை நோக்கி முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். அதன் பிறகு கேள்விகள் கேட்க வேண்டும்.

மீண்டும் கூறுகிறேன். உங்களுடைய பின்னூட்டங்களை தொடக்கத்திலிருந்து படித்துப் பாருங்கள். அதில் எதிராளியை அசிங்கப்படுத்த வேண்டும் எனும் நோக்கம் தான் தெரிகிறதே தவிர நேர்மையான விவாதம் நடத்தும் நோக்கம் கொஞ்சமும் வெளிப்படவில்லை. ஆகவே, ஒரு நேர்மையான விவாதத்துக்கு தயாராகுங்கள் நிச்சயம் உங்களின் புரிதல் எல்லை வரை சென்று என்னால் பதில் கூற முடியும்.

இங்கு நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் விதண்டாவாதத்தனம் கொண்டவை.

எடுத்துக்காட்டு, தனியொரு நாட்டில் செயல்படுத்த முடியாது என்றால் வேற்றுக் கிரகத்திலா எனும் கேள்வி. அதற்கு அப்படித்தான் பொருள் வருகிறதா? சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்றால் சோசலிசம் கம்யூனிசத்தின் எதிரியா? என்ற கேள்வி. இந்தப் பொருளை எங்கிருந்து எடுத்தீர்கள்? எனவே, உங்கள் கேள்விகளின் நோக்கம் நேர்மையான விவாதத்தில் இல்லை.

பதில் கூறமுடியாத படி எழுதியிருக்கிறானே இவனை எப்படி அசிங்கப்படுத்துவது என்று சிந்தித்து நீங்கள் அசிங்கப்பட்டு நிற்கிறீர்கள்.

நேர்மையான முறையில் நீங்கள் விவாதிக்க விரும்பினால், நேர்மையான முறையில் அணுகுங்கள். மீண்டும் உங்கள் வழக்கமான நாராச நடையை தொடர்ந்தால் இது என்னுடைய கடைசி பதிலாக இருக்கும்.

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 3.

12.செங்கொடி, on 26/02/2015 at 5:37 பிப said:

அஞ்சான்,

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள் அது எனக்கு முதன்மையானதல்ல. ஆனால் யார் சார்பாக விவாதிக்கப் போகிறீர்கள் என்பதே முதன்மையானது.

என்ன பிரச்சனை உங்களுக்கு? இந்தப் பதிவில் இருந்த ஏதோ ஒன்று உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்பது அதில் தெரிகிறது.

முறையாக விவாதிக்க வேண்டுமென்றால் பதிவிலுள்ள விசயங்களை அலசிப்பார்த்து அதற்கான எதிர்வினையை முன்வைத்து வாதிடுங்கள்.

உங்களின் புரிதல் எல்லை வரை வந்து விவாதிக்க நான் தயார். ஆனால் உங்கள் நோக்கம் அப்படி இருப்பதாக தெரியவில்லை. வீண் அலட்டல்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை.

இந்தப்பதிவில் இருப்பது பதிவர் சுவனப்பிரியனுக்கான பதில்கள். இதில் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?

புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

13.maha, on 26/02/2015 at 9:53 பிப said:

செங்கொடி அவர்களே, செம காமெடி போங்க. அஞ்சானுக்கு பின்னால் யாரோ நெருப்பு வைத்து விட்டார்கள் போலும். குதியோ குதியென்று குதிக்கிறார். கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் மட்டும் பக்கத்தில் இருந்தீர்களானால் கடித்து குதறியிருப்பார். இவர் மட்டுமல்ல , உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சூடு தாங்காமல் குதியோ குதியென்று குதிக்கிறார்கள்.

இணையம் வந்ததும் வந்தது, இஸ்லாத்தின் டவுசரை கிழி கிழியென்று கிழித்து விட்டது. மற்ற மதங்களை தாக்கும் இடத்திலிருந்து, தங்கள் மதத்தை தற்காப்பதில்தான் முஸ்லிம்கள் இப்பொழுது நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள்.

அடுத்த 100 வருடம் தாங்கினாலும் பெரிய விசயம். இயற்கையின் அடிப்படையே ” மாற்றமே மாறாதது “. இதை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் இஸ்லாம் டான்ஸ் ஆடுவது பரிதாபத்திற்கு உரியது. சுவனப்பிரியன் மட்டுமல்ல. பல முஸ்லிம்கள் கள்ள மௌனத்துடந்தான் இருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் நிச்சயமாக பதில் இல்லை. வசைபாடி, மிரட்டி, சாபம் விட்டு, ஒப்பாரி வைத்து ஓடுவதுதான் தற்போதைய முஸ்லிம்களின் வழி.

14. அஞ்சான், on 27/02/2015 at 10:03 முப said:

//இந்தப்பதிவில் இருப்பது பதிவர் சுவனப்பிரியனுக்கான பதில்கள். இதில் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?// —- என்று கூறுகிறாய்

அப்படியென்றால் இந்தப்பதிவை பொதுப்பார்வையில் வைக்காமல் சுவனப்பிரியனுடைய தனிப்பார்வைக்கு மட்டும் என நீ ஏன் குறிப்பிடவில்லை?

ஏன் வலைத்திரட்டியில் இணைத்து மற்றவர்களை அழைத்தாய்?
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு நீ

இப்போது ஓடி ஒழிய சுவனப்பிரியனா ?

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 4.

8.செங்கொடி, on 26/02/2015 at 11:37 முப said:

அஞ்சான்,

நல்ல மனநல மருத்துவரைச் சென்று சந்திக்கவும். நான் மனநல மருத்துவன் அல்லன்
9. அஞ்சான்,, on 26/02/2015 at 1:04 பிப said:

‍இந்த பதிவில்
2. கேட்கப்படும் கேள்விகளை எந்த விதத்திலும் திசை திருப்பாமல், சரியான கோணத்தில் பதில் சொல்வேன் என்றும், தேவையற்ற திசைதிருப்பல்களோ, குறிக்கோளற்று பதில் கூறுவதோ, பதில் கூறாமல் கடந்து செல்வதோ இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்.

3. என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீடுகளுடனும், விவாதத்தை தேடல்களுடன், விவாத நேர்மையுடன் நகர்த்திச் செல்வேன் என்றும், என்னுடைய வாதங்களில் தவறிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாகவும் இருந்தால் தயங்காமல் அவற்றை ஏற்று மாற்றிக் கொள்வதில் எந்த வித அசூயையும் எனக்கு இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்.

4. இந்த விவாதத்திலிருந்து நானாக முறித்துக் கொண்டு வெளியேறிச் செல்லமாட்டேன், இறுதி முடிவு எட்டப்படும் வரை விவாதம் சீரிய முறையில் செல்வதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
என்று கூறப்பட்டிருப்பருக்கிறதா? இல்லையா?

எனது கேள்விகள் பதிந்தவற்றை கொண்டே உருவானதா? இல்லையா?

கற்பனை கோட்டைக்குள் இருக்கும் மன நோயாளியே!

நல்ல மனநல வைத்தியரை போய் பாரு என்று முதலில் நான் உனக்கு கூறியதை எனக்கே வாந்தியா?

என் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.

இல்லாவிட்டால்
“தனக்குள் தானே சிக்கிக் கொண்ட செங்கொடி எனும் மனநோயாளி” என்று இப்பதிவின் தலைப்பை உடனே மாற்றிவிடவும்.

10.செங்கொடி, on 26/02/2015 at 1:37 பிப said:

அஞ்சான்,

நீங்கள் யார்? சுவனப்பிரியனா? அல்லது அவர் சார்பில் கலந்து கொள்பவரா? ஆம் என்றால் தொடக்கத்திலிருந்து வாருங்கள். நாகரீகமாக பேசுங்கள். தேடலுடன் விவாதியுங்கள். உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். மாறாக, கழிந்து செல்ல வேண்டும் என விரும்பினால் உங்கள் வீட்டு கழிப்பறைக்குச் செல்லுங்கள்.

11.அஞ்சான்,, on 26/02/2015 at 2:27 பிப said:

திருப்பாதே. திசை திருப்பாதே.

கற்பனை கோட்டையில் கழிப்பறையை துணைக்கு அழைப்பதை கண்டு பரிதாபம் கொள்ளுகிறேன்.

என் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் எனக்கு இன்னும் என்னென்ன பெயர் கண்டு பிடிக்கப்போகிறாய்?

ஏன் சுவனப்பிரியன் என்பவரிடமே அஞ்சான் என்னை நார் நாராக கிழித்து தொங்க விட்டுக்கொண்டிருக்கிறார். அது எப்படி என்று நேரிடையாக கேட்டிருக்கலாமே?

உனது பதிவை படிக்கும் நடுநிலை பள்ளி மாணவன் கூட நான் கேட்ட கேள்விகளை கேட்பானே?

உன் கைகளாலேயே நீ சுறுக்குப்போட்டுக்கொண்டு தொங்குவதை காண சகிக்கவில்லை
.
பேசாமல் ஈரச்சாக்கை போர்த்திக்கொண்டு உன் இரு கால்களுக்கிடையில் உன் முகத்தை புதைத்துக்கொண்டு காலத்தை ஓட்டவும்.

ஈசன் உன்னை ரட்சிக்கட்டும்.

ஐயா, அன்புடையீர், அறிவு ஜீவியே, புவி சிறக்க உதித்தவரே, நான் கேட்ட கேள்விகளுக்கு அன்பு கூர்ந்து பதில் கூறுவீர்களா?

சட்டியில் இருந்தால் தானே?

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 5.

3.அஞ்சான், on 26/02/2015 at 7:00 முப said:

முற்றிலுமாக மூளைச்சலவை செய்யப்பட்டு புழம்பித்திரியும் மனநோயாளி செங்கொடியை நாய் என அழைப்பது சொறிநாய்களுக்கு கூட அவமானம் தான்.

ரஷ்யாவில் 1920 தொடங்கி 1991 வரை கிறிஸ்துவ மதத்தை எப்படி எப்படி எல்லாம் நசுக்கி அழித்தது என்று உனக்கு தெரியுமா?

ரஷ்யாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மதகுருக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்காண சர்ச்சுக்கள் இடித்து நொறுக்கப்பட்டதும் உனக்கெங்கே தெரியப்போகிறது.

கம்யூனிசத்தால் உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்டார்களே. ஆதாரங்கள் வேண்டுமா?

அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சிக்கு மக்களை கதறவிட்டுக்கொண்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிச ஆட்சியாளார்களை பற்றிய ஆதரங்கள் வேண்டுமா?

கற்பனை கோட்டைக்குள் இருக்கும் மன நோயாளியே நல்ல மனநல வைத்தியரை போய் பாரு.

4. செங்கொடி, on 26/02/2015 at 7:28 முப said:

மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்கும் அதே குரைப்புகள்.
முதலில் இந்தப் பதிவுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்பதை கூறுங்கள். பிறகு நீங்கள் கூறுபவற்றுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். விரிவாகப் பேசலாம்.

5.அஞ்சான்,, on 26/02/2015 at 8:05 முப said:

++முதலில் இந்தப் பதிவுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்பதை கூறுங்கள். பிறகு நீங்கள் கூறுபவற்றுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். விரிவாகப் பேசலாம்.++ என்று கூறும் அறிவிழந்த ஜீவியே

//கம்யூனிசம் செத்துப் போய் விட்டதா? ஒரு கொள்கை சமூகத்தில் தேவையற்றதாகி விட்டது, மரித்து விட்டது என்று கூற வேண்டுமாயின் முதலில் அந்தக் கொள்கை உலகில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செயல்படுத்தும் போது எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கை உருவானதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளைத் தந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கொள்கையை செத்துப் போன கொள்கை என்று கூற முடியும். ஆனால் இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது. கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை.//
என்று இப்பதிவில் நீ குறிப்பிட்டிருப்பதை மீண்டும் படி.

தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த போகிறாய்?

எனது கருத்தை மறுக்க முடியுமா மனநோயாளியே?

என்னுடைய ஆதாரங்கள் உன்னுடைய பதிலை மறுப்புகளை பின் தொடரும்.

6.செங்கொடி, on 26/02/2015 at 10:13 முப said:

அஞ்சான்,

முதலில் நாகரீகமாக உரையாடுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது என்றால் என்ன பொருள் என்று உங்கள் தமிழாசிரியரிடம் சென்று கேட்டுவிட்டு வாருங்கள்.

உணர்ச்சி வேகமாக செயல்பட்டால் அங்கு அறிவு குறையும் என்பதற்கு நடைமுறை உதாரணமாக இருக்கிறீர்கள்.

7. அஞ்சான்,, on 26/02/2015 at 11:01 முப said:

“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று ஒரு தனிப்பதிவு போட்டு வாசகர்களின் கருத்தை கேட்க முடியுமா?

உன் பிளாக்கிற்கு வாசகர் இருந்தால் தானே.!!!

கடுப்புடன் யாரையாவது வீண் வம்புக்கிழுத்து தலைப்பு கொடுத்து உன்னுடைய மனநோயை, பன்னாடைத்தனத்தை . “கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்ற அபத்தங்களுடன் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றாய்.

“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” “தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்று உனது பிளாக்கின் பேனரில் இணைக்க முடியுமா?

செத்துப்போன கம்யூனிசத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு எனது கேள்விக்கு பதில் கூற முடியாமல் நாகரிகம் இல்லை, தமிழ் தெரியவில்லை என பிதற்றலாமா?

இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை என்றால்கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்றுதானே?

ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்கிறாய்.

செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?

சோஷலிசம் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும் உலகெங்கிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல், நடத்தி சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?

எங்கே நாகரித்துடன், விளங்கும் தமிழில் விளக்கமாக பதில் கூறமுடியுமா?

அஞ்சான் said...

திரு. சுவனப்பிரியன் அவர்களே,

செங்கொடி எனும் ஒரு நச்சுக்கொடியின் பதிவொன்றை படித்து துணுக்குற்றேன்.

நான் அந்தபதிவில் இட்ட கருத்துக்களில் நச்சுக்கொடி தன்னுடைய பதில்களில் என்னை மீண்டும் மீண்டும் தாங்களுடன் இணைக்க படுபிரயத்தனம் எடுத்திருப்பதாலும்

நச்சுக்கொடிக்கான என்னுடைய கேள்விகள் பலரை சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதாலும் தாங்களுடைய இணையதளத்தை கண்டுபிடித்து நான் பதிந்தவற்றை இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

அன்பு கூர்ந்து அனுமதிப்பீர்களாக.

என் கருத்துக்களும் கேள்விகளுமே தெளிவுபடுத்தும் என்பதால் என் அறிமுகம் தாங்களுக்கு அவசியமிருக்காது.

தாங்களுடைய சுய செயல்பாடுகளில் என் குறுக்கீடு இருக்காது என்பதையும் பதிவு செய்கிறேன்.

உங்களுடைய தினங்கள் இனிய தினங்களாக தொடங்கட்டும்.

Best Regards.

அஞ்சான்

செங்கொடியை பிண்ணி பெடலெடுத்து தோலுரித்து வறுத்து எடுத்துக்கப்படும் காட்சிகள்.

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட கம்யூனிஷ அடிவருடி செங்கொடி. பகுதி 6.

20 பதில்கள்

1. அஞ்சான், on 25/02/2015 at 5:04 பிப said:

இசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசம்.

உலகம் முழுவதிலும் கம்யூனிசம் பெயரால் இவர்கள் செய்த வண்டவாளங்கள், கொடுமைகள் வெளியே வந்து, ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம்.

குரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.

2. செங்கொடி, on 25/02/2015 at 8:05 பிப said:

எது குரைப்பு? யார் நாய்? மனிதர்களுக்கு பொருளற்ற சப்தங்களை குரைப்பு என்று வகைப்படுத்தலாம். இங்கு எழுதப்பட்டிருப்பவை பொருளோடு கூடிய மறுப்பாக இருக்கிறது.

எனவே, இதை குரைப்பு என்று வகைப்படுத்த முடியாது. ஆனால் இங்கு பொருளற்று,பொருத்தமற்று இருப்பது உங்களின் பின்னூட்டம் தான். எனவே யார் நாய் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.