'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 11, 2015
சவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை? :-)
ஹானஸ்ட் மேன்!
//சுவனப்பிரியன்!
என்னது குரான் தருகிறதா? நீர் சவுதி அரேபியாவில் software engineer போன்று ஏதாகிலும் வேலை செய்கிறீரா? அல்லது இங்கிருந்து மத பிரச்சாரம் செய்ய அங்கு சென்றீரா? என் ஒரு உறவினர் கூட சாப்ட்வேர் engineer தான் . ஆனால் போன் செய்ய கூட டைம் இல்லை என்று கூறுகிறார். காரணம் கேட்டால் வேலைப்பளு என்கிறார் நீரோ சதா சர்வ காலமும் இங்கே பதில் (=மறுமொழி) எழுதுவதோடு வேறு சில இணையதளங்களிலும் எழுதுகிறீர். உங்களுக்கு என்னதான் அங்கே (சௌதி அரேபியாவில்) வேலை.?//
எனது கம்பெனி மரம் சம்பந்தப்பட்ட பொருட்களை சைனா, மலேசியா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சவுதி முழுக்க விற்பனை செய்கிறது. சவுதியிலும் பல மர பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்கிறது. சொந்தமாக நான்கு பெரும் ஷோ ரூம்கள் எனது கம்பெனிக்கு உள்ளது. அந்த ஷோ ரூம்களின் வரவு செலவுகளை கணிணியில் ஏற்றி விட வேண்டும். பிறகு சம்பள நாட்களில் அனைவருக்கும் ஓவர் டைம், விடுப்பு கணக்கு பார்த்து அதனை சரி செய்ய வேண்டும். வருட முடிவில் ஷோ ரூம்களில் கணக்கெடுப்பு எடுத்து ஏதும் பொருட்கள் குறைகிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஷோ ரூம்களில் வேலை பார்பவர்கள் தனது நாட்டுக்கு விடுப்பில் சென்றால் மற்றொருவருக்கு பொருப்பை கொடுக்க பொருட்களை சரி பார்ப்பது. அவர்களிடம் பொருப்பை ஒப்படைப்பது. சில நேரங்களில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு பணியாளர்கள் சண்டை போட்டாலோ அடி தடியில் இறங்கினாலோ அவர்களை அழைத்து அன்பாக பேசி சில நேரம் கண்டித்து சமாதானம் செய்விப்பது. :-) சைனா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வரும் கம்பெனி அதிகாரிகளுக்கும் எனது முதலாளிக்கும் மொழி பெயர்பாளனாக சில நேரங்களில் அமர்வது. இதுதான் எனது வேலை.
வருட கடைசியிலும், சேல்ஸ் மேன்கள் விடுப்பில் செல்லும் போதும் எனக்கு சற்று வேலை பளு அதிகமாகும். அது போன்ற நேரங்களில் நான் இணையத்தின் பக்கம் வருவதில்லை. மற்ற நாட்களில் எனது வேலை நேரமான 8 மணி நேரத்தில் 2 மணி நேரத்தில் எனது அன்றாட வேலைகளை முடித்து விடுவேன்.
எனது அலுவலகமும் எனது தங்கும் இடமும் அருகருகே அமைந்துள்ளது. குடும்பம் தமிழகத்தில் இருக்கிறது. நான் மட்டும் தனியாக இங்கு உள்ளேன். வருடம் ஒரு முறை தமிழகம் சென்று விடுவேன். ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 2 மணி நேரம் அலுவலக வேலை. 8 மணி நேரம் தூங்கி விடுவேன். சாப்பாடு, குளியல், வீட்டுக்கு தொலைபேசி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு 2 மணி நேரம். இறைவனை தொழுவதற்கு ஒரு நாளில் மொத்தம் ஒரு மணி நேரம். அனைத்தையும் கூட்டினால் 13 மணி நேரம் வரும். 24 ல் 13 ஐ கழித்தால் மீதி வருவது 11 மணி நேரம். 24 மணி நேரமும் கம்பெனி செலவில் இணைய இணைப்பு கொடுத்துள்ளனர். வியாழன் அரை நாள் விடுமுறையும் வெள்ளி முழுநாள் விடுமுறையும் கொடுக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 11 மணி நேரம் ஓய்வாக கிடைத்தால் நான் என்ன சார் செய்வேன்? :-)
இவ்வாறு அதிகம் ஓய்வு கிடைத்தால் பலர் அதிக நேரம் தூங்குவர். நண்பர்களோடு அரட்டை அடிப்பர். ஊர் சுற்றுவர். சீட்டு விளையாடுவர். சிலர் தினம் இரண்டு சினிமாக்களை பார்பர். அல்லது சாட்டிங்கில் தேவையில்லாமல் கடலை போட்டுக் கொண்டிருப்பர். அல்லது வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பர்.
ஆனால் நான் எனது ஓய்வு நேரத்தை இறைவனைப் பற்றிய தேடலில் செலவழிக்கிறேன். அந்த தேடலில் கிடைக்கும் அனுபவங்களை பதிவுகளாக பகிர்கிறேன். அதனை ஏன் பொதுவில் அதுவும் இந்துத்வா தளத்தில் பகிர்கிறீர்கள் என்று கேட்கலாம். குர்ஆன் கூறுகிறது.
'தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்வோருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.'
-குர்ஆன் 4:114
நாளை இறப்புக்குப் பின் மறுமை நாளில் இறைவன் முன்னால் 'இறைவா! எல்லா உண்மைகளையும் தெரிந்த சுவனப்பிரியன் எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். எனவே என்னை மட்டும் தண்டிக்காமல் சுவனப்பிரியனையும் சேர்த்து தண்டிப்பாயாக' என்று யாரேனும் என் மீது வழக்கு தொடர்ந்தால் நான் என்ன சார் பண்ணுவேன்! அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கை வலிக்க தமிழில் டைப் செய்து கொண்டிருக்கிறேன்.
இது ஒரு பொது நலம் கலந்த சுய நலம் என்றால் மிகையாகாது. :-)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment