Followers

Wednesday, February 11, 2015

போகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை?



நைஜீரியாவின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமான போகோ ஹராமில், வெள்ளையின பிரெஞ்சுப் படையினருக்கு என்ன வேலை?

கமெரூன் நாட்டின் வட பகுதியில், போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும், கமெரூன் அரச படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில், எட்டுப் பிரெஞ்சுப் படையினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது, கமெரூன் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எட்டு வெள்ளையின பிரெஞ்சுப் படையினரை விடுவிப்பதற்கு பிரெஞ்சு அரசு முயன்று வருகின்றது.

கமெரூன் அரசைத் தொடர்பு கொண்ட பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் Fabius, அந்த எட்டுப் போரையும் உடனடியாக விடுவித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார். அவர்களுக்கு பிரான்சில் விசாரித்து தண்டனை வழங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

கமெரூன் அரச படையில் அவர்களின் உதவிக்காக ஃப்ரெஞ்சுப் படை சென்றது என்றாலாவது அதில் அர்த்தம் இருக்கும். ஆனால் போகோ ஹராமுக்கு ஆதரவாக இந்த ஃப்ரெஞ்சுப் படை செயல்பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு தெரிவது போகோ ஹராம் என்ற பெயரில் பல அநியாயங்களை நிகழ்த்துவது. அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது. உலகுக்கு இஸ்லாம் தீவிரவாத இயக்கம் என்ற அவப் பெயரை ஏற்படுத்துவது என்பது இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

நாம் முன்பே கூறி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், இந்தியன் முஜாஹிதீன் இது போன்ற இஸ்லாமிய பெயரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் எல்லாம் யூதர்களின் வேலை என்று பல முறை சொல்லியிருக்கிறேன். அது உண்மைதான் என்பது இந்த ஃப்ரெஞ்சுப் படையினரின் கைது உறுதிப் படுத்துகிறது.

மனிதனை உயிரோடு எரிப்பதும், மனித தலையை வெட்டி அதனை இணைய தளத்தில் விடுவதும், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அந்த இடத்தில் 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி விட்டு மறைந்து கொள்வதும் குர்ஆனை பின் பற்றும் இஸ்லாமியன் கண்டிப்பாக செய்ய மாட்டான்.

இஸ்லாத்தின் வளர்சியை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுப் படுத்த இது போன்ற அராஜகங்களை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு நடத்துகின்றன. முஸ்லிம்களை அதில் சிக்க வைக்க திறம்பட காய்களை நகர்த்துகின்றன. ஆனால் இதனால் எல்லாம் இஸ்லாத்தின் வளர்சியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. மன அமைதியின்றி தவிக்கும் அமெரிக்க ஐரோப்பிய மக்களுக்கு இஸ்லாம் ஒன்றுதான் நிரந்தர தீர்வை தரும் என்று உரக்க சொல்வோம்.

இந்தத் தகவலை ஆப்பிரிக்காவில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளங்கள் வெளியிட்டுள்ளன.

L’armée Camerounaise arrête 8 soldats français combattant aux cotés de Boko Haram

http://africeleb.com/larmee-camerounaise-arrete-8-soldats-francais-combattant-aux-cotes-de-boko-haram/

தகவல் உதவி
கலையரசன்

1 comment:

Anonymous said...

//இஸ்லாத்தின் வளர்சியை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுப் படுத்த இது போன்ற அராஜகங்களை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு நடத்துகின்றன//
உமது நாத்தம் பிடித்த மதத்தை தடுக்க அவர்கள் ஏன் இப்படி தலையை சுற்றி மூக்கை தொடும் வழியை பின்பற்ற வேண்டும் சுவனம். பிற நாடுகளில் இருந்து துலுக்கர்கள் வந்து குடி ஏறுவதை அவர்கள் தடுக்க முடியாதா அல்லது பிற மதங்களை ஒடுக்க சட்டங்கள் போட முடியாதா? ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவனோ அல்லது அரபு, ஆப்கனை சேர்ந்தவனோ இந்தியாவில் நிலம் வீடு வாங்கி குடியேற முடியுமா, ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் முடியும். அந்த அளவு அந்த நாடுகளில் மத சுதந்திரம் இருக்கிறது. உமது கூட்டம் வளர கூடாது என்று நினைத்து இருந்தால் அந்த நாடுகள் ஆரம்பத்திலேயே அவற்றை தடுத்திருக்க முடியும். தீவிரவாதத்தை தூண்டி உமது மத வளர்ச்சியை தடுப்பதை விட தங்கள் நாட்டில் சட்ட திட்டங்களை செயல்படுத்தியே உமது கூட்டத்தின் வளர்ச்சியை தடுத்திருக்க முடியும். சிறு மதி படைத்த உமது கூட்டத்தின் முன் தங்கள் பரந்த மனதை அவர்கள் காட்டினார்கள் அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பிரெஞ்சு அரசாங்கம் அனுப்பி அவர்கள் அங்கே போயிருந்தால், பிடிபட்டு வெளிப்படையாக தெரியும் அளவிற்கா தங்களை காட்டி கொள்வார்கள்.

//மன அமைதியின்றி தவிக்கும் அமெரிக்க ஐரோப்பிய மக்களுக்கு இஸ்லாம் ஒன்றுதான் நிரந்தர தீர்வை தரும் என்று உரக்க சொல்வோம்.//

இன்று உலகில் உண்ண உணவு கூட இல்லாமல் பஞ்சத்திலும் பசியிலும் தவிக்கும் நாடுகளும் , போர் போர் என்று சண்டையிட்டு கொண்டிருக்கும் நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் தான் அதிகம். துலுக்க இனம் அதிகரித்த பிறகு தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பிரச்சினைகளும் மக்களுக்கு அமைதியின்மையும் அதிகரித்தன. துலுக்கம் எந்த பிரச்சினைக்கு தீர்வை தந்திருக்கிறது. துலுக்கம் எங்கே போகிறதோ அங்கே பிரச்சினை தீரவும் இல்லை ஓயவும் இல்லை. துலுக்கனும், துலுக்கமும் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டில் தாமும் அமைதியாக வாழ மாட்டார்கள் மற்றவரையும் அமைதியாக வாழ விட மாட்டார்கள்.


Anandan Krishnan
Kanyakumari