Followers

Wednesday, February 04, 2015

'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா?'

சாரங்கன்!

// சுவனப்ரியன்!

சனாதன தர்மமானது ஒன்றே குலம் அந்த குலமான ஒருவனே தேவன் என்கிறது, கடவுளையும் மற்றவற்றையும் பிரித்து பார்ப்பதில்லை. இது உங்களுக்கு ஒத்த சிந்தனையா.

சனாதன தர்மமானது ஒரே கடவுளின் அம்சங்களாக நாம் இருக்கிறோம் நமக்கு பெயரும் ரூபங்களும் மட்டுமே வேவ்வேறு [சதேவ இதமக்ர ஆஸீத் நாம ரூபாப்யாம் வ்யாகரவாணி. ஏகம் சாட் விப்ரா பஹுதா வதந்தி, ஏகமேவ அத்த்விதீயம்...] இது உங்களுக்கு ஒத்து வருமா.//


இது பற்றி குர்ஆன் கூறுவதைப் பார்போம்....

'மனிதனை சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான்'.
-குர்ஆன் 32:9

இந்த வசனத்தைத்தான் பலரும் தவறாக விளங்கியுள்ளனர். உதாரணத்துக்கு ஒரு பலூனை நீங்கள் ஊதி அதனை பறக்க விடுகிறீர்கள். நீங்கள் ஊதிய காற்றுதான் அந்த பலூனில் அடைக்கப்பட்டுள்ளது. உங்களின் காற்று இல்லை என்றால் அந்த பலூனானது சுருங்கி ஒரு மூலையில் கிடக்கும். இப்போது அந்த பலூனும் நீங்களும் ஒன்றாகி விடுவீர்களா? இதனை உங்களின் அறிவு ஒத்துக் கொள்ளுமா? கண்டிப்பாக இல்லை என்றே சொல்வீர்கள்.

அதுபோலவே மனிதன் என்ற பலூனுக்கு இறைவன் தனது உயிரை ஊதி அந்த உடலுக்கு உயிர் உண்டாக்குகிறான். அதன் பிறகு அந்த மனிதனிலிருந்து ஒரு துணையை படைக்கிறான். இருவரையும் பூமிக்கு அனுப்புகிறான். அந்த இருவரின் புதல்வர்களின்.... புதல்வர்களின்..... புதல்வர்களின் .... புதல்வர்கள்தான் நாமெல்லாம். :-) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனின் உயிரானது இருந்து வருகிறது.

அந்த பலூன் உடைந்து விட்டால் ஊதப்பட்ட உங்களின் காற்று எப்படி வெளியேறுகிறதோ அது போலவே இறைவனால் ஊதப்பட்ட மனித உடல் இறந்து விட்டால் அதன் ஆன்மாவானது பலூனின் காற்றைப் போலவே இறைவனின் வசம் சென்று விடுகிறது. உலக முடிவு நாளன்று அந்த ஆன்மாக்களை ஒன்று கூட்டி சொர்க்கம் நரகம் கொடுக்கப்படுவதாக ஏறத்தாழ எல்லா மத வேதங்களும் சொல்கிறது. குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது.

ஆனால் இறைவன் ஊதிய அந்த உயிரை தவறாக விளங்கிக் கொண்டு அந்த இறைவனே நம்முள் இருக்கிறான் என்று பலரும் நம்புகின்றனர். கிருத்தவர்களும் பலரின் நம்பிக்கை இதுவாகத்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையில் தான் கலெக்டர் உமா சங்கரும் தேவனோடு பேசினேன். தேவன் என்னுள் இருக்கிறார் என்றெல்லாம் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் அத்வைதம் உண்டானது. மனிதனும் தெய்வமாகலாம் என்ற கோட்பாடு உருவானதும் இந்த அடிப்படையில்தான். இஸ்லாத்திலும் சூஃபிக்களில் சில பிரிவினர் இந்த நம்பிக்கையில் இருப்பர்.

மனிதன் எந்த காலத்திலும் தெய்வமாக முடியாது. வாழும் தெய்வங்கள் என்று கூறப்பட்ட பிரேமானந்தா, நித்தியானந்தா, சாய்பாபா என்று பலரையும் நம் காலத்திலேயே பார்த்து விட்டோம். இறைவனும் பார்கிறான் நீங்களும் பார்கிறீர்கள். உங்களின் பார்வை திறன் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான். ஆனால் நம்மை படைத்த இறைவன் ஒரே நேரத்தில் பூமி முதற்கொண்டு இந்த கேலக்ஸி முழுமையுமே கண்காணிக்கும் சக்தி படைத்தவன்.

நீங்களும் கேட்கிறீர்கள். இறைவனும் கேட்கிறான். உங்களின் கேட்கும் திறன் 200 அடி அல்லது 300 அடிக்குள்தான் இருக்கும். ஆனால் நம்மைப் படைத்த இறைவனோ அமெரிக்காவிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அல்லது ஆண்டிப் பட்டியிலிருந்து ஒருவன் அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கும் திறன் படைத்தவன்.

இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனின் தன்மை இறைவனுக்கும் இருந்தாலும் இருவரின் சக்தியும் வேறு வேறு ஆனது. இதை சரி வர புரியாததானேலேயே கடவுளின் பெயரால் மனிதர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்து, கிருத்தவம், யூதம், இஸ்லாம் இவற்றின் வேதங்கள் கூறும் கடவுள் கொள்ளை ஏறத்தாழ ஒன்றே. உங்களின் வேதங்களை நன்கு ஆய்வு செய்தால் இந்த உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.


No comments: