Followers

Monday, April 04, 2016

பீஹாரில் 13 லட்சம் மது பாட்டில்கள் அழிப்பு!



கடந்த ஏப்ரல் 1 முதல் பீஹாரில் மது விலக்கு அமுல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே இருப்பில் உள்ள சரக்குகளை என்ன செய்வது? ஒரே நேரத்தில் 13 லட்சம் மது பாட்டில்களை (கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்) புல் டோஷர் விட்டு அழித்துள்ளது பீஹார் அரசு. இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் நிதிஷ் குமாருக்கும் அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தானுக்கும் எமது நெஞ்வார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அணையவிருந்த பல ஏழை குடும்பங்கள் இனி பத்துயிர் பெற்று எழும். வறுமையோடு போராடும் பீஹார் எடுத்த இந்த புரட்சிகர முடிவை மற்ற மாநிலங்களும் பின் பற்ற வேண்டும்.

ஆனால் நமது தமிழக அரசோ அரசு அதிகாரிகளுக்கு இத்தனை கோடி சாராயம் விற்றே தீர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து சர்குலர் அனுப்புகிறது. இரண்டு முதல்வர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

ஜெயலலிதா அவர்களே! எத்தனை காலம் முதல்வராக இருந்தோம் என்பது முக்கியமல்ல. இருந்த நாட்களில் நாட்டு மக்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று வரலாறு சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டு காலம் கடந்தும் காமராஜரை நாம் நினைவு கூறுகிறோம். அது போல் உங்கள் பெயரும் நிலைக்க இலவசங்களை ஒழித்து விட்டு பூரண மது விலக்கை ஆட்சி முடியப் பொகும் இந்த நேரத்திலாவது அமுல் படுத்துங்கள். சசிகலாவின் சாராய ஆலைகளை மது மறுவாழ்வு மையங்களாக மாற்றுங்கள்.

தகவல் உதவி
ஒன் இந்தியா
31-04-2016







No comments: