Followers

Wednesday, April 27, 2016

ரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு



ரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு (இது ஒரு மீள் பதிவு)

(தங்களின் ரத்தத்தை யாரோ ஒருவருக்கு தானமாக கொடுக்க வரிசையில் நிற்கும் தவ்ஹித் சகோதரர்கள். துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் லதீஃபா மருத்துவ மனையில் நடத்திய ரத்த தான முகாமையே நாம் படத்தில் பார்கிறோம்.)

நேற்று மாலை நேர தொழுகைக்கு தவ்ஹீத் பள்ளிக்கு தொழச் சென்றிருந்தபோது ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்கைக்காக இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அந்த குடும்பத்தினர் ராஜகிரி தவ்ஹீத் ஜமாத் கிளையை அணுகினர். உடன் தவ்ஹீத் சகோதரர்கள் இரண்டு பேர் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர். ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் அன்பளிப்பாக ரத்த வங்கியில் அளிப்பார்களாம். அந்த பணத்தை வாங்காது 'அந்த ஏழை குடும்பத்துக்கே அந்த பணத்தை சேர்ப்பித்து விடுங்கள்' என்று அந்த இரு தவ்ஹீத் சகோதரர்களும் சொல்லி விட்டு வந்துள்ளனர்.

யாரோ ஒருவருக்காக தனது ரத்தத்தையும் கொடுத்து அதற்காக அளித்த அன்பளிப்பையும் அந்த ஏழை குடும்பத்துக்கே கொடுத்த அந்த தவ்ஹீத் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது போன்ற மனித நேயப் பணி தமிழகமெங்கும் சத்தமில்லாமல் ஏதோ ஒரு மூளையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே வேளை தவ்ஹீத் ஜமாத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு அவதூறுகளும் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டக் கொண்டிருக்காமல் சமூகத்தில் சத்தமில்லாத மறுமலர்ச்சி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அந்த சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக ஏகத்தவ வாதிகள் உள்ளனர். இந்த சிறிய அமைப்பு பல ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத புரட்சி.

எல்லா புகழும் இறைவனுக்கே!

2 comments:

Dr.Anburaj said...

அதே வேளை தவ்ஹீத் ஜமாத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு அவதூறுகளும் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன

பச்சைப் பொய்.அப்படிஏதும் கிடையாது. முஸ்லீம் மக்களை முழுமையாக அரேபிய மக்கள் போல் அரேபிய அடிமைகளாக மாற்றிட அந்த இயக்கம் முயன்று வருகின்றது. இந்திய சாா்பை முஸ்லீம்கள் கைவிடத் தூண்டுகின்றது.அதுதான் மோதலுக்கு காரணம். இந்திய முஸ்லீம்கள் அரேபிய அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வர வேண்டும். நிறைய போ்கள் வந்து விட்டாா்கள். அவர்களை மீண்டும் அரேபிய கலாச்சார சிறைக்குள் அடைக்கும் முயற்சியை இந்திய முஸ்லீம்கள் ஏற்கவில்லை.இது மோதலா ? விவேகம்

Dr.Anburaj said...


தற்போது அனைத்து கல்லூாிகளிலும் சாதி மத பிரச்சாரம் இன்றி - விளம்பரம் இன்றி இலவசமாக ரத்ததானம் கழகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.இரத்தம் தேவைப்பட்டவா்கள் அருகில் உள்ள கலலலூாிகளை அணுகினால் தேவையான இரத்தம் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

எனது உறவினா் ஆன ஒரு இந்து பெண்ணுக்கு இரத்தம் கொடுத்தாா் திருநெல்வேலியைச் சோ்ந்த தௌஹித் ஜமாத உறுப்பினா். சில வாரங்கள் க ழித்து இசுலாமிய சமய சாா்பான புத்தகங்களைக் கொடுக்க வந்து விட்டாா். அவரது துரதிஷ்டம் நான் அங்கிருந்தேன். புத்தகங்களை வாங்க நான் அப் பெண் மறுத்து விட்டாாா்.இரத்ததானம் என்பது தன்னை மறந்த ஒரு தொண்டு ஆக இருக்க வேண்டும். மதத்திற்கு ஆள்பிடிக்கும் தந்திரமாக இருக்கக்கூடாது என்று கண்ணிப்பாக தொிவித்து விட்டேன். அரேபிய அடிமைத்தனத்தை விட்டு ஒழிக்க அறிவுரை கூறினேன். நண்பா் நெளிந்து நெளிந்து இருந்து விட்டு காபி குடித்து விடடு வருகிறேன் என்று சொலலி கிளம்பி விட்டாா.