Followers

Wednesday, April 13, 2016

திருமணத்துக்கு தடை கோரும் இந்துத்வா!திருமணத்துக்கு தடை கோரும் இந்துத்வா!

கர்நாடக மாநிலம் மைசூரை பிறப்பிடமாகக் கொண்டவர் அஷிதா. வயது 24. எம்பிஏ முடித்துள்ளார். படிக்கும் காலத்தில் எம்பிஏ மாணவனான ஷகீலை காதலித்துள்ளார். திருமணமும் முடிக்க ஆசைப்பட்டுள்ளார். இரு வீட்டு பெற்றோர்களும் பூரண சம்மதம் தெரிவித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 17ல் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் பிஜேபி தலைவர்கள் மஞ்சுநாத், சித்தராஜ கவுடா மற்றும் பஜ்ரங்தள் தொண்டர்கள் இந்த திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து அவர்களை களைத்தனர்.

இது பற்றி அஷிதா கூறும்போது 'நான் யாரை திருமணம் செய்து கொள்வது என்பது எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள பிரச்னை. இதில் இவர்கள் ஏன் தேவையில்லாமல் தலையிடுகிறார்கள்' என்று காட்டமாக கேட்டுள்ளார்.

ஷகீல் தந்தை முக்தார் அஹமது கூறும் போது ' இருவரும் எமபிஏ படித்த பட்டதாரிகள். சிறு குழந்தைகள் அல்ல. தங்களின் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்' என்கிறார்.

பெண்ணின் தகப்பனான டாக்டர் நரேந்திர பாபு கூறுகிறார் 'எனது நண்பனின் மகன் ஷகீல். எனது மகள் ஒரு முஸ்லிமை விரும்புகிறாள் என்று சொன்னபோது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் எனது மகளின் சந்தோஷமே எனது சந்தோஷம். இருவரும் படித்தவர்கள். வாழ்வும் நல்லபடியாக இருக்கும். மற்றவர்கள் சொல்வது போல் இது 'லவ் ஜிஹாத்' அல்ல' என்று மறுத்துள்ளார்.

இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து பிரச்னை முடிந்தது. இடையில் இந்த இந்துத்வாவாதிகளுக்கு என்ன வேலை? ஓ... நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதுதான் இவர்களுக்கு பிடிக்காதே... :-)

தகவல் உதவி
டெக்கான் ஹெரால்ட்
13-04-2016

http://www.deccanherald.com/content/540158/pro-hindu-elements-protest-girls.html

6 comments:

Dr.Anburaj said...


முஸலீம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் பாக்கிஸ்தான் பிாிக்க வேண்டியதாயிற்று.
ஒரு இந்து பெண் முஸ்லீமை மணந்து முஸ்லீம் ஆனால் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை ஒன்று குறைந்து போகின்றது. வருங்காலத்தில் இது கடும் விளைவுகளை எற்படுத்தும். அந்த பெண்ணுக்கு சுற்றம் உறவினா்கள் இந்துக்ளாக இருப்பதால் அவர்களோடு நல்ல உறவை இழக்க வேண்டியது வரும். அப்பெண்ணுக்கு விவாகரத்து கண்வன் மரணம் போன்ற கடும் சொதனைகள் ஏற்பட்டால் பெண்வழி உறவுகளின் உதவி கிடைக்காது? குறையலாம் .

ஒரு முஸ்லீம் பெண் இந்து வாலிபனை மணந்து இந்துவாக மாறினால் அப்போதும் இதையே சொ்லவீா்களா ? சொன்னால் தாங்கள் புரண யோக்கியன்.

Varatharaj Vijayasundaran said...

I have one doubt if a Hindu male marry a Muslim female with both parents approval will your Jamth will act same like this.

சுவனப் பிரியன் said...

//I have one doubt if a Hindu male marry a Muslim female with both parents approval will your Jamth will act same like this//

வேறு மதத்தை தேர்வு செய்தால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியாகி விடுகிறார். அதற்கு ஜமாத் ஏன் ஒப்புதல் தர வேண்டும். பிறப்பால் வருவதல்ல இஸ்லாம். நடத்தையால் வருவது.

ஆனால் இந்து மதம் வேண்டாம் என்று கூறும் கருணாநிதியும் இந்துதான். ஏனெனில் இந்து மதம் அதன் சாதிகள் பிறப்பால் வருவது. இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

சுவனப் பிரியன் said...

//ஒரு முஸ்லீம் பெண் இந்து வாலிபனை மணந்து இந்துவாக மாறினால் அப்போதும் இதையே சொ்லவீா்களா ? சொன்னால் தாங்கள் புரண யோக்கியன்.//

வரதராஜனுக்கு கொடுத்த பதிலை படிக்கவும் அன்பு ராஜ்.

Dr.Anburaj said...


அரேபிய வல்லாதிக்கம் இந்துக்களையும் முஸ்லீம்களையும் சமநிலையில் வைக்காது.முஸ்லீம்கள் உயா்ந்தவா்கள்.இந்துக்கள் இழிபிறப்பு -காபீா்கள் என்ற சமமற்ற நிலையில் வைத்துதான் விசயங்களை பாிசீலனை செய்யும். ஆகவே தான் சுவனப்பிாியன் இப்படித்தான் கூறுவாா். இந்து பெண்களை லவ் ஜிகாத்தில் விழாமல் பாதுகாப்பது இந்துக்களின் கடமை. தவறினால் குழப்பங்களை சந்தித்து அவஸ்தை பட வேண்டியதுதான்.

Dr.Anburaj said...


ஆனால் இந்து மதம் வேண்டாம் என்று கூறும் கருணாநிதியும் இந்துதான். ஏனெனில் இந்து மதம் அதன் சாதிகள் பிறப்பால் வருவது. இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
01.கருணாநிதி இந்துமதம் வேண்டாம் என்று கூறவில்லை.அவரது வீட்டுக் பெண்களைப் பாருங்கள்.பக்த சிகாமணிகள்.இராஜராஜ சோழனுக்கு பிரமாண்டமான விழா எடுத்தாா் கருணாநிதி. கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யவில்லை.
02.இந்துமதம் மட்டும் அல்ல அனைத்து மதமும் பிறப்பால்தான் அமைகின்றது.முஸலீம் குடும்பத்தில் பிறந்த குழந்தை முஸ்லீம் நம்பிக்கையின் வீச்சுக்கு ஆளாகி முஸலீம் ஆக மாறுகின்றது.மனிதனாகவாழ்வதும் போக்கிாியாக வாழ்வதும் வேறு விசயம்.
03. ஆயிரம் ஆண்டுகள் அந்நியமதத்தவா் ஆட்சியில் இந்தியா இருந்த துா்பாக்கியம் இங்கே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.பழையது கழியவில்லை.
கலாச்சார தூா்வாருதல் நடக்கவில்லை.
04.தொழில் முறையில் சாதிகளற்ற வேதகால இந்து சமூகம் பின் சாதி இருகிப் போனதால் தீண்டாமை ஆதிக்க நோக்கம் போன்ற ஈனத்தனங்கள் குடிகொண்டன.


வேதகால இந்து சமூகம் சாதிகளற்றது என்ற உண்மை தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தொியும் ??? திருமாவளவன் கூட அந்த கோணத்தில் பேச மாட்டேன் என்கிறாா்.இதை உணா்ந்தால் சாதி மாற்றம் சாதி கலப்பு திருமணம் தாராளமாக நடக்குமே! தீண்டாமை ஒழிந்து விடுமே ! சொல்வாா் யாரும் இல்லையே.அரசம் சொல்வது இல்லை.


05.இன்றும் மதசாா்பு கொள்கை எந்த கொள்கையும் யின்றி இருப்பதால் இந்து சமூகத்தில் கலாச்சார தூா்வாறுதல் கவனிக்கப்படாமல் உள்ளது.இந்தியாவில் உள்ள சமயசாா்பு என்பது கிறிஸ்தவா்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அடிபணிந்து போவதுதான்.அதனால் இந்து ஒருவன் மதம்மாறித் தொலைந்தால் ஒரு இந்து அதை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. மதம் மாற்றத்தை எதிா்க்கும் இந்துவை இந்துக்களே மதவெறியா்கள் என்று கடும் சொல்லால் வறுத்து விடுவாா்கள். 1000 ஆண்டுகள் அடிமையாக வாழ்நது விட்டவனுக்கு சுயமாியாதை இருக்குமா ,
ஆனால் ஒரு முஸ்லீம் பெண் இந்துவை காதலித்து இந்துவானால் அவள் சமூகம் மிகக் கடுமையாக எதிா்க்கும். எப்படியாவது கணவனை முஸ்லீம்ஆக மாற்ற அவளைத் தூண்டும். மதத்தை முன்னிட்டு கணவனை பிாிந்து வந்து விடு என்று நிா்பந்தப்படுத்தும். ...... பட்டணத்தைச் சோ்ந்த ஒரு முஸ்லீம் (கணினி பொறியாளா்) பெண்ணை இந்து நாடாா் பையன் கணினிபொறியாளா் - ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் காதல் எற்பட்டு திருமணம் செய்து கொண்டாா்கள்.

இருமத திருமணத்தில் உள்ள சிரமங்களை விளக்கியும் விடாப்பிடியாக விடாப்பிடியாக விடாப்பிடியாக விடாப்பிடியாக காதலை முன்நிறுத்தியது முஸ்லீம் பெண்தான்.

இந்துவாக மதம் மாற வேண்டும் என்றும் பல நிபந்தனைகளை பெண் ஏற்று திருமணம் இந்து கோவிலில் வைத்து நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பெண்வீட்டாா் சற்று பணக்காரா்கள்.சிறிது காலத்திற்குப் பின் மகள் வீட்டிற்கு பெற்றோா் வந்தாா்கள். இந்து கணவனை மதம் மாற்றிய பெரும் முயற்சி மேற்கொண்டாா்கள். பலிக்கவில்லை. முஸ்லீம் பெண்னை பொட்டு வைக்கக்கூடாது திருவிளக்கு ஏற்றக் கூடாது என்று கட்டாயப்படுத்தினாா்கள். படிப்படியாக மனம் மாறி விட்டாள் மகள். 7 மாதம் கா்ப்பமான நிலையில் பெண்னை தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றாா்கள்.பெண்ணின் வீட்டிற்குச் சென்ற மருமகனை யாரும் மதிக்கவில்லை. ஒரு மாதத்தில் மனைவி தொலை பேசியில் கணவனை தொடா்பு கொண்டு முஸ்லீம் ஆக மாறினால் குடும்பமாக வாழலாம். இல்லையேல் பிாிந்து விடலாம் என்று உறுதியாக கூறிவிட்டாா். பிறந்த குழந்தையை பாா்க்க அ?னுமதிக்கவில்லை. ..... பட்டணம் ஒரு வகையில் பாக்கிஸ்தான்தான். அங்கு காவல்துறை வாலாட்ட இயலாது. மற்றவா்கள் ஒன்றும்ஊருக்குள் நுழைந்து நியாயம் கேட்க இயலாது. 12 மாதத்திற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. குழந்தையோடு வேறு ஒரு முஸ்லீம் இளைஞனை மணந்து கொண்டு அப்பெண் வாழ்ந்து வருவதாக கேள்வி. பாவம் இந்து கணவன். மனம் நொந்து வாழ்நது வருகின்றான். வேறு திருமணம் செய்ய ஆலோசனை வழங்கி விட்டேன். நடக்க வேண்டும் என்று பிராத்த்தனை செய்கின்றேன்.

இந்து இளைஞா்களே முஸலீம் பெண்களை காதலிக்காதீா்கள்.ஆபத்து.ஆபத்து.
இந்து பெண்களே முஸ்லிம் களை காதலிக்காதீா்கள்.