Followers

Wednesday, April 20, 2016

பாத்திரத்தில் ஊதி குடிப்பதை நபிகள் நாயகம் ஏன் தடுத்தார்கள்?



குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் ஊதி குடிப்பதையும் நபிகள் நாயகம் அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா

“குடிப்பவர் தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

‘உங்களில் ஒருவர் எதை அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி

நபிகள் நாயகம் ஏன் இவ்வாறு கூறினார்கள்? இதனை அறிவியல் பூர்வமாக சற்று இந்த பதிவில் பார்ப்போம்...

நமது சூடான உணவு பொருட்களை ஊதி சாப்பிடும் போது, நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது... அது சூடான உணவு பொருள்களின் மீது படும் போது கார்பன் டை ஆக்சைடு + சூடான உணவு என இரண்டும் ஒன்றினைந்து கலக்கிறது..

இது கார்பன் மோனாக்சைடாக வினை புரிய தொடங்குகிறது... இந்த கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்ட ஒரு வாயு...

மேலும் இது ஒரு மெதுவான உயிரை பறிக்க முற்படும் ஒரு விஷமாகும்... இது இதயம் மற்றும் நுரையீரல் மற்றும் உடல் உள் உறுப்புகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.... இது அறிவியல் ரீதியான தற்போதைய கண்டுபிடிப்பு

2 comments:

Dr.Anburaj said...


‘உங்களில் ஒருவர் எதை அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’

விஞ்ஞானம் இதில் மயிரளவு கூட இல்லை.

அவருக்கு பிடிக்கவில்லை.சொல்லியிருக்கின்றாா்.அரேபியா்களை காப்பியடிப்பதுதான் இலட்சியம் என்று நினைப்பவா்கள் செய்து கொள்ளலாம்.

அதற்குபோய் காா்பன் டை ஆக்ஸைடு காா்பன் மேனா ஆக்ஸைடு என்று கதை அளக்க வேண்டாம். நமது காற்று மண்டலத்தில் காா்பன் டை மற்றும் மேனா ஆக்ஸைடு நிறையவே உள்ளது.நாம் வாயினால் ஊதுவதனால் கா.ஆக்ஸைடு உருவாகிவிடும் உலகம் அழிந்து விடும் என்பது எல்லாம் வழக்கம் போல் ரீல் புருடா கப்சா. அரேபிய அடிமைகளின் ஏமாற்று வேலை.
வாயினால் ஊதுவதனால் சீக்கிரம் ஆறிவிடும் அதுமட்டும்தான் உண்மை.வேறு ஏதும் நடக்காது.

நாம் குடிக்கும் நீராகாரத்தை ஆறிவிடச் செய்ய நாம் ஊதுவதில் பிழையில்லை.

அடுத்தவா்கள் ஊதுவது வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்காது.

நோய் கிருமிகள் கடத்தப்பட வாய்ப்பு ஏற்படலாம்.

ASHAK SJ said...

உனக்கு விஞ்ஞானம் மயிரளவு கூட தெரியவில்லை, வாயு மண்டலத்தில் உள்ள CO2 க்கும் ஊதும் பொது வரும் க்கும் CO2 வித்யாசம் உண்டு, ஊதும் போது CO2 தண்ணீரில் கரைய வாய்ப்புண்டு என்பது கூட தெரியாத மரமண்டை நீயெல்லாம் டாக்டரு