'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, April 25, 2016
மாலேகான் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விடுதலை!
2006 மாலேகான் குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் மும்பை வழக்கு மன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சல்மான் ஃபார்ஸி, சபீர் அஙமது, நூருல் ஹூதா, ரைஸ் அஹமது, முஹம்மது அலி, ஆஷிஃப் கான், ஜாவித் ஷேக், ஃபரூக் அன்ஸாரி, அஃப்ரார் அஹமது, இந்த ஒன்பது பேரும் கடந்த பத்து ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக சிறையில் காலம் தள்ளினர். இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போதிய நிரூபணம் ஆகாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷபீர் அஹமது ஏற்கெனவே இறந்து விட்டார். சிறையில் பத்து வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே கழித்துள்ளனர். நாற்பதுக்கும் மேல் இறந்ததும் இஸ்லாமியர்கள். அதைக் காரணமாக வைத்து கைது செய்ததும் இஸ்லாமியர்கள். இந்த கொடுமை உலகில் வேறு எங்குமே நடந்திருக்காது.
இழந்த அந்த பத்து வருடங்களை மோடிக்களும் அமீத்ஷாக்களும் திருப்பி தந்து விடுவார்களா? இந்துத்வாவாதிகளே! உண்மை உலகில் எங்கு சென்றாலும் உங்களை துரத்தி பழி வாங்கும். மறந்து விடாதீர்கள்.
டாக்டர் ஃபரூக் கூறுகிறார் 'எங்களது பத்து வருட வாழ்க்கை வீணாகி விட்டது. பழியை இத்தனை காலம் சுமந்திருந்தோம். எங்களின் குடும்பமும் பழியை சுமந்தது' என்று வருத்தமுடன் கூறுகிறார்.
ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் இந்த வழக்கை விசாரித்து உண்மை குற்றவாளிகளான சாது பிரக்யா சிங், ஜெனரல் புரோகித், அசீமானந்தா போன்றோரை உள்ளே தள்ளியதால் இவர்கள் இன்று வெளியாக முடிந்தது. இல்லை என்றால் இவர்களின் கதை உலகுக்கு தெரியாமல் சிறையிலேயே முடிக்கப்பட்டிருக்கும். உண்மையை உலகுக்கு சொன்னதால் ஹேமந்த் கர்கரேயின் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்தது இந்துத்வா
இறைவா! குண்டு வெடிப்பை நடத்தி மக்களை கொன்று விட்டு இன்று ஆட்சியிலும் அமர்ந்திருக்கும் அநியாயக் காரர்களை இந்த உலகிலும் மறு உலகிலும் தண்டிப்பாயாக! அந்த தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் படி செய்வாயாக!
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
25-04-2016
http://indianexpress.com/article/india/india-news-india/malegaon-blast-case-mumbai-court-discharges-all-eight-accused/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment