Followers

Thursday, April 21, 2016

சவூதி அரசு மோடிக்கு கொடுத்த விருதை எப்படி பார்க்கிறீர்கள் ?



நியூஸ் 7 கேள்வி நேரம்

அனல் பறந்த கேள்விகள்;

ஆணித்தரமான பதில்கள்!

இன்ஷா அல்லாஹ்

வெள்ளி 22.04.16 இரவு 9மணிக்கு...

✔பீஜே அவர்களின் தெளிவான பதில்கள்:

✔பாரத் மாதா கி ஜே ஏன் சொல்லக் கூடாது?

✔சவூதி அரசு மோடிக்கு கொடுத்த விருதை எப்படி பார்க்கிறீர்கள். அதை ஆதரிக்கிறீர்களா?

✔ஷிர்க் ஒழிப்பு மாநாடு சமூக ஒற்றுமைக்கு எதிரானதா?

✔ஷிர்க் ஒழிப்பு மாநாடு லகும் தீனுக்கும் வலிய தீன் என்பதற்கு எதிராக இருக்கிறதே?

✔டி.என்.டி.ஜே.வை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பது போல் தெரிகிறதே! அது ஏன்?

✔மதம் சார்ந்த பிரச்சனைக்கு முஸ்லிம்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

✔டி.என்.டி.ஜே ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு இல்லையென்றால் நோட்டா அல்லது தேர்தல் புறக்கணிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமா?

✔அரசியல் கட்சிகளில் குறைந்த தீமை, அதிக தீமை எது? அடையாளம் காட்டும் பொறுப்பு டி.என்.டி.ஜே.விற்கு இருக்கிறதே?

✔ஒரே மாதிரியான முடிவை முஸ்லிம்கள் எடுப்பார்கள் என்றால் முஸ்லிம் தலைவர்கள் பிரிந்து இருப்பது ஏன்?

✔தி.மு.க. மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிக்கு ஒதுக்கியிருப்பது அந்தக் கட்சியின் பலம் அதிகரித்து விட்டதா?

✔பா.ஜ.க.வில் நல்ல வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் டி.என்.டி.ஜே. ஆதரிக்குமா?

✔ஆதரவு முடிவுக்கு பி.ஜே.பி. கட்சியைதான் பார்க்க வேண்டும் என்றால் - அ.தி.மு.க. தி.மு.க. மாறிமாறி பி.ஜே.பி.யை ஆதரித்துள்ளதே – அவர்களுக்கு இது பொருந்தாதா?

✔மமக எஸ்.டி.பி.ஐ. பி.ஜே.பி.யை ஆதரிக்கவில்லையே நீங்கள் ஏன் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை?

✔ஓட்டுக்காகவும், நோட்டுக்காகவும்தான் முஸ்லிம் கட்சிகள் அரசியல் நிலை எடுக்கிறார்களா?

✔மக்கள் நலக் கூட்டணியை டி.என்.டி.ஜே. ஆதரிக்காதது ஏன்?

✔முஸ்லிம் வாக்குகளை ஏன் ஓரணியில் திரட்டவில்லை?

✔பி.ஜே.பி.யால் பல ஜாதி மக்களை ஒன்று படுத்தமுடிகிறது என்றால் ஜாதியில்லாத முஸ்லிம்களை ஏன் ஒன்றுபடுத்தமுடியவில்லை?

✔முஸ்லிம் லீக் கட்சி கொள்கையில் சமரசம் செய்து கொள்வதால் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்பதா?

பாருங்கள்! பார்க்கத்தூண்டுங்கள்!!

2 comments:

Dr.Anburaj said...

15000 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பாியம் கொண்ட இந்துஸ்தானத்தின் பிரதமா் மோடி அவர்கள்
ஜனநாயகம் என்ற பெயா் இல்லாவிட்டாலும் மனித இனத்தை நேசித்து ஜனநாயக வாழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயல்பாய் பெற்று மனித இனத்தை நிா்வகித்து வரும் நாடு.
இந்துஸ்தானத்து பழைமையான வேதமாகிய ரிக் வேதத்தில் கூட ” நல்ல கருத்துக்கள் நான்கு திசைகளிலும் இருந்து நம்மை அடைவதாக என்ற பிராத்தனை உள்ளது.வீட்டிற்கு ஜன்னல் இருப்பதைப் போல் மனித மனத்திற்கும் அறிவுக்கும் புதிய அறிவை தெளிவை வாழ்க்கை்கு புதிய தீா்வுகளை தேடும் மனப்பாங்கு அவசியம் என்பதை தெளிவாக மேற்படி கருத்து எடுத்தக் காட்டியுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீா். அன்பா் பணிசெய்ய ஆளாக்கி விட்டால் இன்பநிலை தானே வந்து ஏய்தும் பராபரமே, எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பாரபரமே என்று மனித நேயத்தை சாதி மதம் நாடு போன்ற அனைத்து எல்லையைக் கடந்து எடுத்துச் சொன்ன பண்பாடு இந்திய பண்பாடு.பாக்கிஸ்தான் பிாிவினை தொடா்ந்து பயங்கரவாத நடவடிக்கைகள் எனறு இந்தியாவை ஜஹாதிகள் காயப்படுத்தி வந்தாலும் இந்திய முஸ்லீம்களுக்கு இந்துக்களைப் போல் சகல உாிமைகளும் கொடுத்து மனித நேயம் பாராட்டும் அரசியல் அமைப்பு இங்குள்ளது.இந்து சமய சாா்பான அரசு அமைக்கும் திட்டத்திற்கு கடுகளவுதான் ஆதரவு அளிக்கும் நாடு.
முஸ்லீம்களுக்கு சொா்க்கமாக திகழும் இந்துஸ்தானத்து பிரதமருக்கு எத்தனை உயா்ந்த விருது கொடுத்தாலும் அது பொருத்தமானதுதான்.
அந்த மகத்தான பண்பாட்டின் அடையாளம் திரு.நரேந்திர மோடி.

Dr.Anburaj said...

கடும் பகை கொண்டு இஸ்ரேல் நாட்டை ரோமானியப்படைகள் ஆக்கிரமித்தப் போது யுதா்கள் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் பெற்றாா்கள்..யுதா்களை நேசித்து அன்பு பாராட்டி வாழ் வைத்தது இந்தியா. இஸ்ரவேலின் வரலாறு என்ற புத்தகத்தில் ” யுதா்களை கொடுமைசெய்யாத ஒரே மக்கள் இந்துக்கள்தான்” என்று நன்றியுடன் எழுதியுள்ளாா்கள்.

முஹம்மது பிறக்கும் முன்னரே ஈரான்-பாரசீகம் நாடு கலாச்சார பாரம்பாியம் கொண்ட ஒரு அற்புத நாடு.அரேபிய காடையா்கள் அந்த நாட்டை கொடும் போா் புாிந்து சொல்லவொண்ணா அட்டூழியம் செய்து அந்த நாட்டின் பாரம்பாியமான பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை அழித்து அதை அரேபிய அடிமை நாடு ஆக்கினாா்கள். பாா்ஸிகள் என்று அழைக்கப்பட்ட ஈரான் மக்களில் கொஞ்சம் போ் இந்திய திரு நாட்டில் தஞ்சம் புகுந்தாா்கள். அவர்களை இன்றளவும் காத்து ஓம்பி ரடசித்து வருவது இந்துஸ்தான் ஆகும்.முஸ்லீம்கள் அல்லாத பாரசீக மக்களை
இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.
அந்த மகத்தான பண்பாட்டின் அடையாளம் திரு.நரேந்திர மோடி.