Followers

Wednesday, April 06, 2016

மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தினத் தந்தி
05-04-2016

-----------------------------------------------------------


'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'

-குர்ஆன் 37: 143,144,145


யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.

அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.

ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.

இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.

ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.

இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.

http://www.dailythanthi.com/News/World/2016/04/05155516/Swallowed-alive-man-survives-inside-whales-stomach.vpf

22 comments:

Dr.Anburaj said...

அதிசயங்கள் மதங்களில் விதிவிலக்காக நடைபெறுகின்றது. விதியாக்க நினைத்தால மனிதன் ஏமாறுவான் .யோனாவின் வாழக்கையை ரொம்ப விவாதிக்கக்கூடாது.

குரான் ஒரு பேத்தல் அரபு நாட்டு பழைய புத்தகம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

எனபது மிகவும் தவறானது. ஒரு பொிய மீனால் விழுங்கப்பட்ட மனிதன் உயா்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிறிறில் இருக்க இயலாது.இறந்து சில மணி நேரங்களில் ஜீரணித்து மலமாக வெளியேறி வீடுவான்.

உயா்ப்பிக்கும் நாள்( JUDGEMENT DAY ) என்று ஒரு நாள் சாத்தியம் இல்லை. குரான் காட்டும் மூடநம்பிக்கை இது.

அடுத்து பிராணவாயு அவருக்கு கிடைக்காது.

யுனுஸ் நபி கதை கதைதான்.அம்மட்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மீன் இழுத்துக் கொள்ளும் காற்று நுரையிரைலுக்குத்தான் செல்லும். வயிற்றினுக்குள் மிகவும் அல்ப அளவே செல்லும். அது ஒரு மனிதனுக்கு சில நிமிடங்களுக்கு தான் போதுமானது. அகவே ஆக்ஸஜன் குறித்த தங்கள் விளக்கம் சாியான பேத்தல்.மருத்துவம் படித்த ஒரு முஸ்லிமிடம் கருத்து கேட்டு வெளியிடலாமே ?

அடுத்து வயிற்றினுள் உள்ள ஜீரணசுரப்பிகள் சுரக்கும் அமிலத்தன்மை வாய்ந்த சுரப்பி நீா்களின் தாக்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீா்கள்.

மேற்படி கடலில் மிதந்த கழிவுகளில் மிதந்து காலம் கடத்தியிருக்கின்றாா்.அவ்வளவுதான்
புராணக் கதைகளுக்கு அலங்காரம் செய்வது ஆபத்தானது.

சிலை வணக்கம் மட்டும் பாவம் என்பது முட்டாள்களின் கதை.
மனிதனை ஏன் காட்டுமிராண்டியாகப் படைத்தான் ?
முதல் மனிதன் கையில் முழு வாழ்க்கை வசதிகளையும் குரானையும் நோட்டு புத்தகங்கள் பெனைா பென்னீல் அச்சு இயந்திரம் அரபு பாடசாலை வீடு மசுதி என்று ஒரு நவீன சமூகமாக இறைவன் அல்லா என் படைக்கவில்லை.காட்டுமிராண்டடியாக மிருகங்கள்போல் வாழ்ந்து படிப்படியாக அனைத்து விசயங்களிலும் துறைகளிலும் பாிணாம வளா்ச்சி பெற்று வாழ்ந்ததாகவேதான் ஆதாரம் உள்ளது. தங்களால் மறுக்க இயலுமா?

முதல முதலாக மனித இனம் படைக்கப்பட்ட போது ஒரு நவீன சமுகமாக மனிதனை இறைவன் படைக்கவில்லை ? மறுக்க முடியுமா ?
பிறா்மனை நோக்கா பேராண்மை என்று பேசும் திருக்குறள் எங்கே ?
யுத்தத்தில் கைப்றறப்பட்ட பெண்களை குமுஸ் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் ஒரு அரபு நாட்டு காலத்திற்கு ஒவ்வாத பல கருத்துக்களைக் கொண்ட குரான் எங்கே.

Dr.Anburaj said...

மேலும் திமிலங்கள் அதிக ஆழத்திற்கு முழ்கிச் செல்லும்
இதனால் ஏற்படும் நீாின் அழுத்தம்
மனிதனை பாதிக்கக்கூடும்.
மொத்தத்தில் திமிலங்கத்தின் வயிற்றினுள் இருந்ததா்ா் பிழைத்தாா் என்பது பிழையானது.

நம்ப தகுதியானதல்ல.இது போன்ற விசயங்களை விளம்பரப்படுத்துவது தவறு.

hakkeem said...

Brother Anburaj,

That suppose there are scientific facts mentioned in the Holy Qur’an, out of which say approximately 80% have been proved to be 100% correct. 80% of the scientific facts mentioned in the Qur’an have been proved by Science till today to be 100% correct.The remaining 20 % is ambiguous – unknown. Not even 0.001% have been proved false. Even if one verse is proved false , the Qur’an is not the word of Allah (SWT). So of these 20 % I say goes in the ambiguous slot … unknown. So my logic says … ‘When 80% is 100% correct, the remaining 20% is ambiguous, out of which not even 0.001% has been proved wrong, all are unknown – my logic says when 80% is correct, even those 20% will be InshAllah correct. It is not a blind belief – it is a logical belief.

Dr.Anburaj said...


சகோதரா் ஹக்கீம் அவர்களே
நான் தங்களோடுஅ விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.மேற்படி திமிலங்கத்தின் இரைப்பையினுள் இருந்ததாக சொல்லப்படும் விசயத்தில் எனது ஆட்சேபணைகள் மூன்று
01. ஆக்ஜிஜன் போதியஅளவிற்கு வயிற்றினுள் இருக்காது.சில நிமிடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
02.திமிலங்கள் அதிக ஆழத்திற்குச் செல்லும்.நீாின் அழுத்தம் உள்ளே இருந்ததாகச் சொல்லப்படும் மனிதனை பாதிக்கக்கூடும்.
03.மீனின் வயிற்றினுள்சுரக்கும் ஜீரண நீா்களின் தாக்கத்தை எப்படி இவர் தாக்கு பிடித்து எந்த சேதமும் இன்றி வெளியே வந்தாா்.
இந்த 3 ஆட்சேபணைகளுக்கு முதல்ல் பதில் அளிக்க வேண்டும்.
நியாயத் தீா்ப்பு நாள் என்பது சாத்தியமில்லாதது.அது குரான் பைிள் காட்டும. ஒரு படுமுட்டாள்தனமான கருத்து.கபுா் வேதனை என்பது குரானில் உள்ள அடுத்த முட்டாள்தனமாக போதனையாகும். அது குறித்து நான் எற்கனேவே பல பதிவுகளைச் செய்துள்ளேன்.அதற்கும்தாங்கள் மறுப்பு எழுதவேண்டும்.

என் அறியாமை இருள் அகற்றுங்கள்.

குரானில் பிழைகளுக்குப் பஞ்சம் இல்லை.

குரானில் விஞ்ஞான உண்மைகள் விரவிக் கிடக்கின்றது என்று கிளி பிள்ளை சொல்வது போல் சொல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

செங்கொடி என்ற வலைதளத்தை முன்னாள் முஸ்லீம் ஒருவா் நடத்துகின்றாா்.அதில்ஏரளமான கட்டுரைகள் உள்ளது.அதைப்படித்து விட்டு அதற்கு அவைகளை பொய் என நிரூபிக்கும் கருத்தை தாங்கள் பதிவ செய்ய லாம்.

சும்மா குரான் விஞஞானத்தின் ஆதாரம் சுரங்கும் என்றெல்லாம் பீற்றுவது கிளிப்பிள்ளையின் பேத்தல்.

Dr.Anburaj said...

செங்கொடி யில் உள்ள கட்டுரை ஒன்று
இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கட்டுமானங்களான‌ அல்லாவின் ஆற்றல், குரான், ஹதீஸ்கள் ஆகிய மூன்றும் முஸ்லீம்கள் சொல்லிக்கொள்வதுபோல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும், முரண்பாடற்றும், ஐயந்திறிபறவும் அமைந்திருக்கவில்லை என்றாலும்; இஸ்லாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் எனும் கூற்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாது இஸ்லாமை சாராத பிற மதங்களை சார்ந்தவர்களிடமும் குறிப்பிட்ட சிறுஅளவு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம், ஒன்று மதக்கோட்பாடுகளில் நம்பிக்கைக்கைகளில் பிடிப்புற்று நடந்துகொள்ளும் அல்லது பிடிப்புற்று நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளும் முஸ்லீம்களின் இயல்பு. இரண்டு மதக்கோட்பாடுகளுக்கு, வேத வசனங்களுக்கு ஏற்ப வளைக்கப்படும் அறிவியல். எல்லா மதங்களுமே இயல்பில் அறிவியலை மறுத்தாலும் நடைமுறையில் அறிவியலுக்கு தாம் எதிரியல்ல என காட்டிக்கொள்ள முயல்கின்றன. இந்த நடைமுறை தற்கால இஸ்லாமிய மதவாதிகளால், மதப்பரப்புரையாளர்களால் வெகுவாகவும், தொடற்சியாகவும் எடுத்துக்காட்டப்பட்டு; அதையே, ஏனைய மதங்களைப்போல் அறிவியலை அனுசரித்துச்செல்வதில்லை அறிவியலை தன்னுள்ளே அடக்கிக்கொண்டது தான் இஸ்லாம் என்பதற்கான ஆதாரமாகவும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாம் என்பது மெய்யான ஒன்றாகவும் அதன் கோட்பாடுகளும், இறையியலும் மட்டும்தான் உலகில் ஈடேற்றம் பெறுவதற்கான ஒரே வழியாகவும் முன்வைக்கின்றனர். அவ்வாறன்றி, இஸ்லாமும் ஏனைய மதங்களைப்போலவே பிற்போக்குத்தனங்களையும், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளையும், முரட்டுத்தனமான கருத்துமுதல் வாதத்தையுமே தன்னுள் கொண்டுள்ளது.இஸ்லாம் மதமல்ல மார்க்கம் அதாவது வாழ்க்கைக்கான வழிகாட்டி எனவே அதை மதம் என்று கூறுவது தவறு என்பவர்கள், ‘இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை, அது ஒரு மனிதனுக்கு அவன் வாழ் நாளில் அனைத்து கணங்களுக்கும் தேவையான குறிப்புகளை வழங்கி அவனை வழி நடத்துகிறது என்றும் இதில் கட்டாயம் ஒன்றுமில்லை என்றும் ஏனைய மதங்களின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் தவறான பாதையை உணர்த்தி அவர்களை அழைக்கவும் செய்வதால் இது மதமல்ல மார்க்கம் என்கிறார்கள். சரியோ தவறோ தனக்கென ஒரு வாழ்முறையை அல்லது வாழ்க்கைக்கான வழிமுறையை சொல்லாத மதம் எது? பார்ப்பனீய இந்து மதத்தில் சாதிய்ய படிமுறைகள் வாழ்முறையாக இருக்கிறது. பௌத்தத்தில் ஆசையை துறப்பது வழிமுறையாக இருக்கிறது. கன்பூசியத்தில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வது வாழ்முறையாக இருக்கிறது. கிருத்தவத்தில் சகித்துக்கொள்வது வாழ்முறையாகவும், இஸ்லாத்தில் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொள்வது வாழ்முறையாகவும் இருக்கிறது. இவைகளை அடிப்படையாகக்கொண்ட சட்டங்களின் வாயிலாக தம்மை பின்பற்றுபவர்களின் வாழ்வில் தமக்கிசைந்த கட்டுக்கோப்பை கொண்டுவரவே எல்லா மதங்களும் விரும்புகின்றன. இதில் இஸ்லாத்திற்கு என்ன தனிச்சிறப்பு? எல்லா மதங்களும் தமக்குள் செய்தே ஆக வேண்டுமென்று சிலவற்றையும் சில விதிவிலக்குகளையும் கொண்டிருக்கின்றன. எல்லாமதங்களும் விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன இதில் இஸ்லாத்தில் மட்டும் விலக்கிருக்கிறதா என்ன? உலகில் பார்ப்பனீய இந்து மதத்தை தவிர ஏனைய மதங்கள் தங்களின் மதத்திற்கு வருவோரை மகிழ்வுடன் வரவேற்கவே செய்கின்றன. இதில் இஸ்லாமை மட்டும் மார்க்கம் என விளிக்கவேண்டிய தேவை என்ன? மார்க்கம் என்றால் வழி என்று பொருள், வழி என்றானால் அதில் பயணிக்கும் மக்களுக்கு தம் வழியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வேண்டும். எல்லா மதங்களுமே தம்மை பின்பற்றும் மக்களை மூளை இல்லாத பிறப்பாகவே பார்க்கின்றன. அவர்களின் செயல்கள் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. இதில் எங்கே சுதந்திரம் வருகிறது? மதம் என்பதன் பொருள் என்ன? பரிசீலனைக்கு இடமின்றி ஒரே விதமான சிந்தனையினூடான வெறி என்பது தான். இந்த இலக்கணத்தினின்று இஸ்லாம் மாறுபடுகிறதா என்ன? பின் எப்படி அதை மதம் எனவழைக்காமல் மார்க்கம் என்றழைப்பது?

Dr.Anburaj said...

பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பற்றி பேசும்போது ஒரு கண்ணோட்டத்தை வகுத்துக்கொண்டு அதன்படி பேசுவார்கள். கிமு கிபி என்பது போல் காலத்தை இஸ்லாத்திற்கு முன் இஸ்லாத்திற்கு பின் என்று பிரித்துக்கொண்டு முகம்மதுக்கு முன்னுள்ள காலம் அறியாமைக்காலம் என்ற தொனியிலிருந்துதான் பேசுவார்கள். இந்த அடிப்படையில் இருந்துதான் குரானின் வசனங்கள் அறிவியலை (அதாவது அந்த நேரத்தில் கண்டறியாததாக கருதப்படும் அறிவியலை) மெய்ப்பிப்பதால் இது முகம்மதின் வாக்காக இருக்கமுடியாது. கடவுள் என்ற ஒரு சக்தி இருந்து, அது எல்லாவற்றையும் அறிந்திருந்து கூறியதால் தான் இப்படி சாத்தியமாயிற்று என்ற திசையில் பேசுவார்கள். ஆனால் மெய்யாக இவர்கள் குறிப்பிடுவதுபோல் குறிப்பிட்ட வசனம் அறிவியல் கூறுகளை விளக்குமா? என்றால் இருக்காது சாதாரணமாக அந்த வசனம் வெளிப்பட்ட சூழல் குறித்த, தேவை குறித்த விளக்கமாக இருக்கும், ஆனால் அதை பிரித்து, நுணுகி, யூகம் செய்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலோடு ஏதாவது விதத்தில் ஒத்துப்போவது போல் பொருள் கொண்டு, ஆஹா குரான் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என விதந்து போற்றுவார்கள். இவைகளையும் மீறி குரானின் வசனங்களை அறிவியல் நேரடியாக ம‌றுக்கும் வேளைகளில் அது யூகத்தின் அடிப்படையிலான கோட்ப்பாடுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியலல்ல என திருப்பிப்போடுவார்கள்.குரானில் மட்டுமல்லாது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் பலவற்றில் அறிவியலின் கூறுகள் மறைபொருளாக தலைகாட்டி இருக்கின்றன. “மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை” இது கம்பராமாயணத்தில் வருவது. இதனைக்கொண்டு கம்பனுக்கு விமானம் பற்றிய அறிவு இருந்தது என்று கொள்ள முடியுமா? “அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது அது அருகேயும் உள்ளது, அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது” ஈசோ உபனிசத்தில் இருக்கும் இதை க்வாண்டம் மெக்கானிசம் பற்றியது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்” என எழுதிய ஔவையாருக்கு அடர்த்தி பற்றிய கோட்பாடுகள் ஆர்கிமிடீஸுக்கு முன்பே தெரியும் என்று முடிவுக்கு வரலாமா? “சாணிலும் உளன் அனுவை சதகூறிட்ட கோணிலும் உளன்” என்பதில் அணுப்பிளவு பற்றி வருகிறது, திருக்குறளில் நிர்வாகவியல், குறுந்தொகையில் உளவியல், பட்டினப்பாலையில் நகர் நிர்மாணம், சீவக சிந்தாமணியில் தொலைக்காட்சி, திருப்பாவையில் வானியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் மட்டுமல்ல உலகிலுள்ள பல மொழிகளின் பண்டை இலக்கியங்களில் இதுபோல் பற்பல அறிவியல் கூறுகளை கூறலாம். லூயி கார்ல், ஐன்ஸ்டீனுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை தன்னுடைய கதைகளில் விளக்கியதாக கூறுகிறார்கள். பாராசூட், கருவியல் உட்பட ஏராளமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே படமாக வரைந்து வைத்தவர் லியானர்டோ டாவின்சி. அறிவியல் தெளிவு ஏற்படுவதற்கு முன்பே எப்படி இவைகளை அவர்களால் கூற முடிந்தது? முகம்மதுவுக்கு அல்லா போல வேறு ஏதோ ஒரு கடவுள் அவர்களுக்கு கூறிச்சென்றனரா? இவைகளையெல்லாம் அவர்களின் கற்பனைத்திறனுக்கு சான்றாக கூறமுடியுமேதவிர சம்பந்தப்பட்டவர்களின் தெய்வீகத்தொடர்புகளுக்கு சான்றாக ஆகாது.

Dr.Anburaj said...

அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?

அப்துல் அஸீஸ்

இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம்.

இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும் இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.

ச‌வுதி ம‌ன்ன‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு புத்த‌க‌த்தை எழுத‌ மாரிஸ் புக்காயிலை ப‌ணித்தார் என்று தெரிய‌வில்லை என்றாலும், ப‌ல‌ ஹேஷ்ய‌ங்க‌ள உல‌வுகின்ற‌ன‌. ஒன்று ந‌வீன‌ ம‌ருத்துவத்தில் பரிணாமவியல் சொல்லித்தரப்படுவதாகவும், அதன் படி அல்லாஹ் மனிதனை படைக்கவில்லை என்றும், குரங்குகளே மாறி மாறி மனிதனாக ஆகிவிட்டன என்றும் கூறப்படுவதாக ச‌வுதி இமாம்கள் கருதினர். இதனால், நவீன மேலை நாட்டு மருத்துவர்களை கொன்டு சவுதி மன்னர் தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றும் கருதினர். உடல் ந‌ல‌ம் குன்றியிருந்த‌ ச‌வுதி ம‌ன்ன‌ர் இப்ப‌டி ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்தை ம‌றுக்க‌ விரும்ப‌வில்லை. ஆக‌வே இப்ப‌டி ஒரு புத்த‌க‌த்தை எழுதி ச‌வுதி இமாம்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ விரும்பினார் என்றும் க‌ருத‌ இட‌முண்டு.

இந்த புத்தகம் வெளிவந்ததும் இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அல் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதே என்பதை ஆணித்தரமாக நிறுவ உபயோகப்படுத்தப்பட்டது.

இதே வேளையில் அல் குர் ஆனும் பல்வேறு மொழிகளில் புதிய மொழிபெயர்ப்பாக வெளிவரத்தொடங்கியது. இதற்கு ஆதாரமாக சவுதி அரசாங்கத்தின் இஸ்லாமிய பிரச்சார பிரிவு உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும், அரபி மொழி பரவலுக்கும் ஏராளமாக செலவழித்தது. இதனால், அரபி மொழி கற்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றினர்.

அரபி மொழி அறிவும், மாரிஸ் புக்காயீலின் புத்த‌க‌மும் ஒரு புதிய‌ பாதையை இஸ்லாமில் உருவாக்கியுள்ள‌து என்றால் அது மிகையாகாது.

அறிவிய‌ல் ரீதியில் அல் குர்ஆனுக்கு த‌ஃப்ஸீர் எழுதுவ‌தை இது தொட‌ங்கி வைத்துள்ள‌து.

ஜ‌க‌ல்லூல் எல் ந‌க்க‌ர் என்ற‌ எகிப்திய‌ விஞ்ஞானி, புவியியலில் தற்போது கண்டறியப்பட்டுள்ள விஷயங்களை அல் குர் ஆன் எப்படி அன்றே சொல்லியுள்ளது என்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் Committee of Scientific

Notions in the Glorious Qur’an. Supreme Council of Islamic Affairs என்ற எகிப்து அரசாங்க அமைப்பில் சேர்மனாக இருக்கிறார்.

Dr.Anburaj said...

குரானுக்கு தஃப்ஸீர்கள் (விளக்கங்கள்) எழுதுவது என்பது நான்கு அடிப்படை விஷயங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.

முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்.

இரண்டாவது அல் குர்ஆனின் வசனங்களை நபிகள் பெருமானாரே (ஸல்) ஹதீஸ்களில் விளக்கியிருக்கும் இடங்களை வைத்து விளக்குவதாகும்.

மூன்றாவது சஹாபாக்கள் (நபிகள் பெருமானாரின்(ஸல்) தோழர்கள்) அல்குரானை விளக்கி போதித்ததை கூறும் ஹதீஸ்கள் மூலமாக விளக்குவதாகும்.

நான்காவது சஹாபாக்களின் போதனையின் கீழ் கற்றுக்கொண்ட மற்றவர்கள் விளக்குவதை வைத்து விளக்குவதாகும்.

ஆனால், இந்த நான்கு தஃப்ஸீர்களையும் உதறித்தள்ளிவிட்டு, தற்போது தான் தோன்றித்தனமாக அறிவியல் புத்தகங்களை வைத்து அல்குரானின் வசனங்களை விளக்க முற்பட்டுள்ளார்கள் இந்த புதிய தலைமுறையினர். இவர்களில் இந்திய அளவில் ஜாகிர் நாயக் அவர்களும் அவரை பின் தொடர்ந்து தமிழ்நாட்டு முஸ்லீம்களில் பலரும் இது போல அறிவியல் புத்தகங்களை முன்னே வைத்துகொண்டு அல் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத முற்பட்டுள்ளார்கள்.

இது ஆபத்தான போக்கு மட்டுமல்ல, இது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு அடுக்காத போக்குமாகும்.

இது குறித்து என் நண்பர்களுடன் நீண்ட விவாதம் புரிந்துள்ளேன். முதலில் என்னுடைய வாதத்தினை கேலியாக பார்த்த பலரும் என்னுடைய விவாதத்தில் உள்ள உள்ளக்கிடக்கையை உணர்ந்துள்ளனர். இதனை திண்ணை வாசகர்களுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு சகோதரருடன் நடந்த விவாதத்தினையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

அல் குர்ஆன் மீண்டும் மீண்டும் (11:1, 41:3, 41:44, 54:17, 54:22, 54:32, 54:40 இன்னும் பல வசனங்களில்) தன்னை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக இயம்புகிறது. ஆகவே இதற்கு நேரிடையாக அரபியில் அர்த்தம் என்னவோ அதனையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்களோ அல் குர்ஆன் கூறுவதை மறுத்து, அது குழப்பமாகவும், மறைபொருளாகவும் கூறப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு தலையைச் சுற்றி விளக்கம் கூற முற்படுகிறார்கள்.

எவனொருவன் அல் குர்ஆனுக்கு தன்னுடைய சொந்தக்கருத்தை கூறி அதுவே சரியென்று இயம்புகிறானோ அவன் தவறு செய்கிறான் என்று நபிபெருமானார்(ஸல்) இயம்பியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட தவறான தஃப்ஸீர்கள் மூன்று வழியை சேர்ந்தவை. முதலாவது தத்துவ ரீதியாக விளக்குவது. அதாவது கம்யூனிஸ்டு ஒருவர் அல் குர்ஆனில் கம்யூனிஸ்ட் தத்துவங்கள்தான் இருக்கின்றன என்றும் அதன் வசனங்களை திரித்து கம்யூனிஸ கொள்கைக்கு தகுந்தாற்போல மாற்றி விளக்கம் கூறுவதாகும். ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் பலர் இதுபோல கம்யூனிஸ பார்வையில் அல் குர்ஆனை பார்த்து விளக்கம் கூறியுள்ளன. நல்லவேளையாக ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இது போன்ற தவறான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.

இது போன்ற இன்னொரு முயற்சியே சூஃபி வழியாகும். அதாவது அல் குர்ஆனின் வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று கருதிக்கொண்டு அதற்கு ஒவ்வொரு சூஃபியும் ஒரு விளக்கம் கொடுப்பதாகும். ஒவ்வொரு அல் குர்ஆன் வசனத்துக்கும் ஒன்றின் உள்ளே ஒன்றாக ஏழு அடுக்காக மறைபொருள் உண்டு என்று இவர்களாக எழுதிக்கொண்டனர். ஆனால், இதுவும் தவறானதொன்றே என்பது வெளிப்படை.

Dr.Anburaj said...

அடுத்ததாக வந்துள்ள தவறான தஃப்ஸீரே விஞ்ஞானப்பூர்வமாக அல் குர்ஆனை விளக்கும் முறையாகும். இதுவும் நபிபெருமானார்(ஸல்) அவர்களின் நேரடியான கண்டிப்பையும் உதாசீனம் செய்து மனம் போன போக்கில் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சியாகும்.

உதாரணமாக கீழ்க்கண்ட வசனங்களை உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்வதாக கற்பனை செய்துகொள்கின்றனர் அறிவியல் தஃப்ஸீர்காரர்கள்.

37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்! கீழ்திசைகளின் இறைவன்.

37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.

70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கண்டுபிடிக்க, கீழ்வருமாறு கூறுகின்றனர்.

“உங்கள் தட்டையான உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.

ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விரித்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும். இதிலிருந்து புவி –ன்பது உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா”

அல் குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரே ஒரு கிழக்குதான், ஒரே ஒரு மேற்குதான் அறியப்பட்டிருந்தது என்றால், இந்த வசனம் பெரும் பிரச்னையை கிளப்பியிருக்கும் என்பது நிச்சயம் இல்லையா? எந்த ஒரு ஹதீஸிலும் இது பற்றிய கேள்வியை காணமுடியாது. ஏன் அந்த காலத்திய அரபியர் யாரும் பல கிழக்கு திசைகளை பற்றியும் பல மேற்கு திசைகளை பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கவில்லை?

சூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான். அதுமட்டுமல்ல இரண்டு எல்லை கிழக்குகளுக்கும் இடையே இருப்பது பல கிழக்குகள், இரண்டு எல்லை மேற்குகளுக்கு இடையே இருப்பது பல மேற்குகள். அதனால்தான் பன்மையில் கிழக்குகளும் மேற்குகளும் குறிப்பிடப்படுகின்றன.

அப்போது பல கிழக்குகளும் பல மேற்குகளும் இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். இஸ்மயீல் இப்னு கதீர் அவர்கள் 700 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த வசனங்களுக்கு தஃப்ஸீர் எழுதும்போது பனிக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் மறைகிறான். கோடைக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் சூரியன் மறைகிறான் என்று தஃப்ஸீர் எழுதியுள்ளார். சூரியன் கடுங்குளிர் காலத்தில் ஒரு கிழக்கில் உதிப்பவன் கோடைக்காலம் வர வர கிழக்கு திசை மாறிக்கொண்டே செல்கிறது. பன்னெடுங்காலமாக இந்த இரண்டு கிழக்குகளுக்கு இடையே சூரியன் உதிக்கும் திசை மாறுகிறான் என்பதை மக்கள் அறிந்தே வந்துள்ளார்கள்.

Dr.Anburaj said...

ஆனால், இந்த வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு, பல கிழக்கு திசைகள் என்பதே கிடையாது, பல கிழக்கு திசைகள் இருக்கவேண்டுமென்றால் அது கோளமாகத்தான் இருக்கவேண்டும் என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கேட்காத கேள்விக்கு தஃப்ஸீர் எழுதுகிறார்கள்.

27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.

இதே போல ஹதீஸ்களுக்கும் தஃப்ஸீர் எழுத ஆரம்பித்துள்ளார்கள்.

உதாரணமாக கீழ்க்கண்ட ஹதீஸை பார்ப்போம்

Bukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

அல்குரான் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் கொடுக்கும் இந்த ஹதீஸ் மிக முக்கியமான ஹதீஸாகும்.

பூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது? அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே!

ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.

ஆனால், அல் குர்ஆனை நம்பாத விஞ்ஞானிகள் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா? பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்?

Dr.Anburaj said...

ஆனால், இந்த ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்க முனைந்த ஒரு சகோதரர் இது நபி (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் கூறிய தவறான விஷயம் என்று விளக்கம் அளிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது “விழுப்புரம்” போய்டிச்சா என்று கேட்பது போன்றது இது என்று விளக்கம் அளிக்கிறார். விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று ரயிலில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம். ஆகவே பேச்சுவழக்கில் சூரியன் செல்கிறது என்று நபி(ஸல்) கூறுகிறார். ஆனால், சூரியன் செல்லவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்பது அவருக்கு தெரியும் என்று ஒரு சகோதரர் கூறுகிறார்.

ரயிலில் உள்ள அனைவருக்கும் விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று தெரியும். ஆனால், நபிகள் பெருமானார்(ஸல்) எந்த இடத்திலாவது சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்த்திசையில் சுற்றுகிறது என்று கூறியுள்ளாரா என்று சகோதரர் காட்டவேண்டும். அதே போல, ரயில் உட்கார்ந்திருக்கும் மற்றவர்கள் போல, அந்தகாலத்திய அரபுகள் அனைவரும் சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்று அறிந்திருந்தார்கள் என்று காட்டவேண்டும்.

மேலும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் தவறான தகவல்கள் பலவற்றை கூறியிருக்கிறார் என்றும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சகோதரர் ஒத்துக்கொள்வாரா?

குரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று இவர்கள் எழுதிவிடலாம். இன்னும் இவர்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். இவர்களோ, அல் குர்ஆனும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி. ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வ‌து என்று தெரிய‌வில்லை.

ஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. தரையானது உருண்டையாக இருந்தால், எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா? அரேபியாவில் மறைந்த பின்னாலா? அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா? அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா? இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள்? உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே? எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான‌ உல‌க‌த்தில் சூரியன் எங்குமே மறைவதில்லையே! சூரியன் மறையவே மறையாதபோது எப்படி மறைந்த பின்னர் அல்லாவை சஜ்தா செய்வதோ, அல்லது அனுமதி கேட்பதோ நடக்கும்?

ஒவ்வொரு நாளும் சூரிய‌ன் ச‌ஜ்தா செய்ய‌ செல்வ‌தை ந‌பி(ஸ‌ல்) குறிப்பிட்டு சூரிய‌ன் தின‌ந்தோறும் ச‌ஜ்தா செய்ய அர்ஷை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார். தினந்தோறும் ஓடுவதை குறிப்பிட்டு சொன்னதை கியாமத் நாளை நோக்கி ஓடுவதாக இட்டுக்கட்டி கூறுகிறார்கள். இவர்களே சற்று ஹதீஸை படித்து பார்க்க அழைக்கிறேன். எந்த அளவுக்கு அதன் மீது இட்டுக்கட்டுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டுகிறேன்.

Dr.Anburaj said...

மேலும் தரை உருண்டை என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அல்லாஹ் இறக்கிய வசனங்களோ திரும்பத்திரும்ப தரை என்பது தட்டை என்றே கூறுகின்றன.

இவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் ந‌ல்ல‌து. உல‌க‌ம் த‌ட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை இவர்கள் கூறுவது வியப்புக்குரியது.

2.22 firaashaw

2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான் (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

13.3 Madda

13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்! இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்! அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

15.19 madadnaahaa

15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.

20.53 mahdan

20:53 ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).

43.10 mahdan

43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.

50.7 madadnaahaa

50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

51.48 farashnaahaa

51:48 இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

71.19 bisaaTaa

71:19 ‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

78.6 mihaadaa

78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

79:30 dahaahaa

79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

88.20 suTiHat

88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

91:6 tahaha

91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

ஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா, பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ பொருளில் எத்தனை வார்த்தைக‌ள் உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.

அல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

ஆனால், பதிலுக்கு இவர்களோ, “கோளத்தின் மீது எதையும் விரிக்க முடியாதா?” என்று கேட்கிறார்கள்.

இவரிடம் கேட்கிறேன். கோள‌த்தின் மீது விரிப்ப‌தாக‌ எங்கே அல்லாஹ் இற‌க்கியிருக்கிறான்? நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து? அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார்? நானா நீங்க‌ளா?

ஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை

நிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. . என்றும் உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹ் எதற்கு எதையும் மறைமுகமாக சொல்லவேண்டும் என்று இவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறவேண்டுமென்றால், அவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. கோளத்தின் மீது விரித்திருக்கிறோம் என்று அவன் தெளிவாக இறக்கியிருந்திருப்பான். நேரடியாகவே சொல்லியிருந்திருப்பான். இந்த உலகத்தையும் மனிதர்களையும் உருவாக்கிய அல்லாஹ், இந்த மனிதர்களுக்காக பயந்துகொண்டு மறைமுகமாக சொல்லியிருக்கிறான் என்றல்லவா இவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்?

Dr.Anburaj said...

பிறகு பதில் கூறிய சகோதரர் ”நீங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் அல் குர்ஆனை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்” என்று அறிவுரை கூறுகிறார்

இவர்கள் இதனைத்தான் செய்கிறார்கள் போலிருக்கிறது. முதலில் அறிவிய‌ல் நூல்க‌ளை ப‌டித்துவிட்டு அத‌ற்கு த‌குந்தாற்போல‌ அல் குர்ஆனை சிந்திப்ப‌து ச‌ரியான‌தா என்று சிந்திக்க‌ வேண்டுகிறேன். இன்று த‌க்காளி ந‌ல்லது என்று அறிவிய‌ல் சொல்லும். நாளை த‌க்காளி கெட்ட‌து என்று அறிவிய‌ல் சொல்லும். அத‌ற்கு ஏற்றாற்போல‌ அல் குர்ஆனை ப‌டிக்க‌ வேண்டுமா? அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா?

அல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற

முடியாது. பொருள் கூறக்கூடாது.

இவர்களின் வாதத்தின் படி அல் குர்ஆனின் சில ஆயத்துக்களின் பொருளை சிந்தித்து பூரணமாய் விளங்க உலகின் அனைத்து துறைகளிலும் தேற்சி பெற்றிருக்கவேண்டும் என்கிறார்கள்! இப்போது அல் குர்ஆன் தப்சீர்கள் பல, ஒரு நபரால் மட்டுமே எழுதப்படுகிறது. அப்போது, அவர் எத்துறையில் வல்லுனராய் உள்ளாரோ அத்துறையில் மட்டுமே செம்மையாக சிந்தித்து சரியான பொருளை தர முடியும். அதே நேரம் பல துறையை சார்ந்த விற்பன்னர்கள் ஒன்றுகூடி எழுதினால் அது கிட்டத்தட்ட முழுமையான தப்சீராய் அமையும் என்பது இவர்களது வாதம். இது நேராக நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைக்கும் கண்டிப்புக்கும் ஆட்பட்டது என்பதி நாம் கூறித்தெரியவேண்டியதில்லை.

இவரது செய்தியின் படி, ”சமீபத்தில், அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதி இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட, “அறிவியல் வழிகாட்டி அல் குர் ஆன்” என்ற புத்தகம் படித்தேன். அதில் அவர் விலங்கியல் பேராசிரியர் என்பதால் அந்த அறிவினூடேயே பல ஆயத்துகளை அறிவியல் விளக்கொளியில் சிந்தித்து இருந்தார். அதன்பயனாய், பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாய், முதஷாபிஹாத் (இறைவன் மட்டுமே பொருள் அறிந்துள்ள)வசனங்கள் என்று இதுகாறும் கூறப்பட்ட, “55:6 – செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன” வசனத்திற்கு அவரின் விளக்கம்: எந்த உயிர்க்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை. தலையை பூமியில் வைப்பதே சஜ்தா. தாவரங்களுக்கு தலை வேர்ப்பகுதி. ஆகவே, அதனை தரையில் வைத்து அவை எப்போதும் சுஜூது செய்கின்றன என்கிறார்!”

டி.ஏ.எம். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ஆகிய‌ இட்டுக்க‌ட்டுப‌வ‌ர்க‌ள், அறிவிய‌லை வைத்துக்கொண்டு அல் குர்ஆனை நிரூபிக்க‌ முனைகிறார்க‌ள். அல் குர்ஆன் யார‌து நிரூப‌ண‌த்துக்கும் காத்திருக்க‌வில்லை. இப்ப‌டியெல்லாம் நிரூபிக்க‌ முனைவ‌து மேலும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும்தான் இப்படிப்பட்ட இட்டுக்கட்டுபவர்களை ஆட்ப‌டுத்தும்.

உதாரணத்துக்கு செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன என்ற வசனத்துக்கு ஹபீப் முஹம்மது சொல்லும் விளக்கத்தை பார்க்கலாம். எந்த உயிருக்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை என்று இவராக ஒன்று சொல்கிறார். அல்லது பல செடி கொடிகள் வேர்களே இல்லாமல் வேறு மரங்களில் வளர்கின்றன. அவற்றின் வாய் மேலே இருக்கிறது. சில செடிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. அவற்றின் வாய் எங்கே இருக்கிறது? அவைகள் எப்படி ஸுஜூது செய்யும்? செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா? ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம்? இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று இவர்களாக ஒரு வாய்-தலை வியாக்கியானம், அதற்கு இன்னொரு விளக்கம் என்று இவர்களே அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுத கிளம்பி விடுகிறார்கள்.

Dr.Anburaj said...

குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக சொல்லும் பரிணாமவியல் எப்படி அல் குர் ஆனில் இருக்கிறது என்று விலங்கியல் பேராசிரியர்கள் தப்ஸீர் எழுதிவிட்டார்களா? அப்படி எழுதவில்லை என்றால், ஏன் எழுதவில்லை?

ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம் என்று இவர்களாக விஞ்ஞானிகளிடம் தஃப்ஸீர் எழுத அழைப்பு விடுக்கிறார்கள்.

அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் அல் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும்தான். அறிவியல் புத்தகங்கள் மூலமாக அல்ல.

நாளை அறிவியல் புத்தகங்கள் மாறினால், இன்னொரு தஃப்ஸீர் எழுதுவார்களா அல்லது அல் குர்ஆன் தவறு என்று எழுதுவார்களா? இன்று வரும் விஞ்ஞானிகள் நேற்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்கிறார்கள். நாளை வரும் விஞ்ஞானிகள் இன்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்வார்கள். இதுதான் விஞ்ஞானத்தை வைத்து தஃப்ஸீர் எழுதுவதில் உள்ள பெரிய தவறு.

10:60 அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி

என்ன நினைக்கிறார்கள்?

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

வஸ்ஸலாம்

Dr.Anburaj said...

இப்னு பஷீர்(2), on 22/11/2009 at 8:39 பிப said:

அஸீஸின் கேள்விகள் சிக்கலான கேள்விகள்தான்.
1) எந்த இடத்திலும் சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்லாஹ் இறக்கவில்லை.
2) பூமி சமதளம் அல்ல அது உருண்டை என்று நேரடியாக அல்லாஹ் இறக்கவில்லை
3) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழ் சென்று ஸஜ்தா செய்வதாக கூறியுள்ளது பிரச்னையான ஒன்றுதான்.

சூரியன் மறைவதே இல்லை என்பது உண்மைதான். இப்போது நம் முன் இருப்பது, அல்லாஹ் குரானில் இறக்கியுள்ளபடி சூரியனும் சந்திரனும் பூமியை சுற்றுகிறது என்று நம்புவதா அல்லது காபிர் விஞ்ஞானிகள் சொல்வது படி சூரியனை பூமி சுற்றுகிறது ஆனால் சந்திரன பூமியை சுற்றுகிறது என்று நம்புவதா என்றுதான் கேள்வி.

நாம் முஸ்லீம்கள். ஆகையால் குரான் ஹதீஸ் சொல்வது படி பூமியை சூரியன் சுற்றிவருகிறது, பூமி சமதளம் என்று நம்புவதுதான் சரியானது.

இல்லையென்றால் நாம் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று ஆராயவேண்டும்.

அல்லாஹ் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்குரானில் இறக்கினார் ஆனால் உத்மான்(ரலி) அதனை அல்குரானில் இல்லாதமாதிரி புதிய குரானை உருவாக்கிவிட்டார் என்று சொல்லலாமா?

அதுவும் பிரச்னை. அப்புறம் அல்லாஹ் குரானை பாதுகாக்கிறார் என்று அல்குரானிலேயே சொல்வதை என்ன செய்வது? அதுவும் சரிப்படாது.

சரி அல்லாஹ் அல்குரானை இறக்கும்போது உலகம் தட்டையாகத்தான் இருந்தது. நடுவே உலகத்தை அல்லாஹ் உருண்டையாக ஆக்கிவிட்டார் என்று சொல்லலாமா? இது ஓரளவு பரவாயில்லை. இருந்தாலும் உதைக்கிறது. அல்லாஹ் அல்குரானை முழுமைப்படுத்திவிட்டதாக சொல்கிறான். ஆகையால், உலகத்தை உருண்டையாக்கிய பின்னால் இந்த மாற்றத்தை அறிவிக்க இன்னொரு நபியை அனுப்பவேண்டிவரும். இந்த சமாளிப்பும் சரியாக தெரியவில்லை.

அல்லாஹ் நேரடியாக இப்படி உலகம்தான் சூரியனை சுற்றுகிறது என்று சொன்னால், அந்த கால அரபியர்கள் முழு முட்டாளாக இருபப்தால், நபிகள் நாயகத்தை மதிக்க மாட்டார்கள். கேலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று பயப்பட்டிருப்பார். அதனால் இறக்கவில்லை என்று சொல்லலாமா? இது ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால், அதற்கு முன்னாலேயே அரிஸ்டாட்டில் உலகம் உருண்டை என்று சொல்லிவிட்டார். ஆர்யபட்டா உலகம் உருண்டை அது சூரியனை சுற்றுகிறது என்று எழுதிய புத்தகத்தை அரபியில் கிபி 500இலேயே மொழிபெயர்த்துவிட்டார்கள். இருந்தும், இப்படி அல்லாஹ் சொல்லியிருக்கிறார் என்றால் பிரச்னைதான். சரி எப்படி சமாளிப்பது என்று சிந்திப்போம்.

செங்கொடி,
ஒரு முஸ்லீம் அல்குரானில் இருக்கும் இந்த பிரச்னைகளை எப்படி சமாளிப்பது, அல்லாஹ்வையும் நபிகள நாயகத்தையும் எப்படி கேலியிலிருந்து காப்பாற்றுவது என்றுதான் சிந்திக்கவேண்டுமே அன்றி, இப்படி அல்குரான் தவறாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது.

இதற்காகத்தான் அல்லாஹ் “சிந்திக்கமாட்டீர்களா?” என்று மூஃமீன்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறான்.

Dr.Anburaj said...

இப்னு பஷீர்(2), on 22/11/2009 at 8:39 பிப said:

அஸீஸின் கேள்விகள் சிக்கலான கேள்விகள்தான்.
1) எந்த இடத்திலும் சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்லாஹ் இறக்கவில்லை.
2) பூமி சமதளம் அல்ல அது உருண்டை என்று நேரடியாக அல்லாஹ் இறக்கவில்லை
3) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழ் சென்று ஸஜ்தா செய்வதாக கூறியுள்ளது பிரச்னையான ஒன்றுதான்.

சூரியன் மறைவதே இல்லை என்பது உண்மைதான். இப்போது நம் முன் இருப்பது, அல்லாஹ் குரானில் இறக்கியுள்ளபடி சூரியனும் சந்திரனும் பூமியை சுற்றுகிறது என்று நம்புவதா அல்லது காபிர் விஞ்ஞானிகள் சொல்வது படி சூரியனை பூமி சுற்றுகிறது ஆனால் சந்திரன பூமியை சுற்றுகிறது என்று நம்புவதா என்றுதான் கேள்வி.

நாம் முஸ்லீம்கள். ஆகையால் குரான் ஹதீஸ் சொல்வது படி பூமியை சூரியன் சுற்றிவருகிறது, பூமி சமதளம் என்று நம்புவதுதான் சரியானது.

இல்லையென்றால் நாம் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று ஆராயவேண்டும்.

அல்லாஹ் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்குரானில் இறக்கினார் ஆனால் உத்மான்(ரலி) அதனை அல்குரானில் இல்லாதமாதிரி புதிய குரானை உருவாக்கிவிட்டார் என்று சொல்லலாமா?

அதுவும் பிரச்னை. அப்புறம் அல்லாஹ் குரானை பாதுகாக்கிறார் என்று அல்குரானிலேயே சொல்வதை என்ன செய்வது? அதுவும் சரிப்படாது.

சரி அல்லாஹ் அல்குரானை இறக்கும்போது உலகம் தட்டையாகத்தான் இருந்தது. நடுவே உலகத்தை அல்லாஹ் உருண்டையாக ஆக்கிவிட்டார் என்று சொல்லலாமா? இது ஓரளவு பரவாயில்லை. இருந்தாலும் உதைக்கிறது. அல்லாஹ் அல்குரானை முழுமைப்படுத்திவிட்டதாக சொல்கிறான். ஆகையால், உலகத்தை உருண்டையாக்கிய பின்னால் இந்த மாற்றத்தை அறிவிக்க இன்னொரு நபியை அனுப்பவேண்டிவரும். இந்த சமாளிப்பும் சரியாக தெரியவில்லை.

அல்லாஹ் நேரடியாக இப்படி உலகம்தான் சூரியனை சுற்றுகிறது என்று சொன்னால், அந்த கால அரபியர்கள் முழு முட்டாளாக இருபப்தால், நபிகள் நாயகத்தை மதிக்க மாட்டார்கள். கேலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று பயப்பட்டிருப்பார். அதனால் இறக்கவில்லை என்று சொல்லலாமா? இது ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால், அதற்கு முன்னாலேயே அரிஸ்டாட்டில் உலகம் உருண்டை என்று சொல்லிவிட்டார். ஆர்யபட்டா உலகம் உருண்டை அது சூரியனை சுற்றுகிறது என்று எழுதிய புத்தகத்தை அரபியில் கிபி 500இலேயே மொழிபெயர்த்துவிட்டார்கள். இருந்தும், இப்படி அல்லாஹ் சொல்லியிருக்கிறார் என்றால் பிரச்னைதான். சரி எப்படி சமாளிப்பது என்று சிந்திப்போம்.

செங்கொடி,
ஒரு முஸ்லீம் அல்குரானில் இருக்கும் இந்த பிரச்னைகளை எப்படி சமாளிப்பது, அல்லாஹ்வையும் நபிகள நாயகத்தையும் எப்படி கேலியிலிருந்து காப்பாற்றுவது என்றுதான் சிந்திக்கவேண்டுமே அன்றி, இப்படி அல்குரான் தவறாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது.

இதற்காகத்தான் அல்லாஹ் “சிந்திக்கமாட்டீர்களா?” என்று மூஃமீன்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறான்.

Dr.Anburaj said...

1.பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.
ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

1.கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.
இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

1.“குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

Dr.Anburaj said...

1.பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.
ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

1.கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.
இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

1.“குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

Dr.Anburaj said...


ஹக்கீம் அண்ணா பதில் அளியுங்கள்.

சுவனப்பிாியன்ஐயா அவர்களே பதிவுகளை வெளியிடுங்கள்.. பதில் அளிக்கும் மேதைகள் பதில் அளிக்கட்டும்.முட்டாள் அடியேன் விபரம் தொிந்து கொள்கின்றேன்.

Dr.Anburaj said...இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'

-குர்ஆன் 37: 143,144,145

அல்லாவை அவர் துதிக்காது இருந்தால் நியாயத்தீா்ப்பு நாள் வரை அவர் மீனின் வயிற்றினுக்குள் இருப்பாா் என்று அல்லா சொன்னதாக புரூடா விடுகின்றாா் அண்ணாச்சி முஹம்மது அவர்கள். 2000 ஆண்டுகளுக்கு மேல் ஒரு ஆன ஒரு புராண சம்பவம்.
யோனா துதிக்காது இருந்திருந்தால் மீனின் வயிற்றில் நியாயத்தீாப்பு நாள் வரை இருந்திருப்பாா்.

அதாவது மீனும் நியாயத்தீா்ப்பு நாள் வரை உயிரோடு இருக்கும்.

நியாயத் தீா்ப்பு நாள் என்று ஒரு நாள் கிடையாது.

இது படு முட்டாள்தனமாக இருக்கின்றது.

Dr.Anburaj said...

எங்கே அண்ணா ஹக்கீம்
என்றே மனம் தேடுதே
ஆவலாய் ஓடிவா
இருளில் கிடக்கும் என்மனம்
வெளிச்சம் பெறவே குரான் ஒழியை
ஏற்றவா வா வா
ஹக்கீம் அண்ணா அண்ணா அண்ணா ...................

Ashak S said...

டேய் முட்டாள் டாக்டரு, குரானில் பல விசயங்களை நிரூபிக்க முடியாது, நாளை நடக்கும் என்று சொல்வதை எப்படி நிரூபிக்க முடியும், judgement day என்பதும் அப்படித்தான், ஹிந்து மதத்தின் படி மறு பிறவி உண்டு இதை நீ நிருபிப்பாயா? உன் கேள்வியை குரானில் பிழை உள்ளது என்பதை ஒவ்வொன்றாக என்னிடம் கேள் இன்ஷா அல்லாஹ் நான் நிருபிக்கிறேன் உன் வாதம் தவறு என்று, அதே போல் நானும் உன் ஹிந்து வேதத்தில் இருந்து கேட்ப்பேன் பதில் சொல்லவேண்டியது உன் கடமை.