Followers

Saturday, April 16, 2016

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

//சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும். அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.// - ம. வெங்கடேசன்

தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமஸ்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டும்?. ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

-தாயுமானவன்

தாயுமானவன் நியாயமான கேள்விகளைக் கேட்டுள்ளார். சமஸ்கிரத ஆர்வலர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வெண்டும்.

2 comments:

Dr.Anburaj said...


இந்து( இந்தியனின் ) விஞ்ஞான அறிவு 1500 ஆண்டுகளுக்கு முன்பே மிதவை அளவை!

By }டாக்டர் எம்.முத்துக்குமார் ஆதாரம் 17.4.2016 தினமணி சுடா்


ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு என்பது ஒரு பொருளினை நீர் நிறைந்த தொட்டியின் உள்ளே நீருக்குள் அமிழ்த்தும்போது அதிலிருந்து வழிகின்ற நீரின் எடையும், பொருளின் எடையும் சமம். இது 15-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடு. பௌதிகத்தில் இது ஒரு முக்கிய கோட்பாடாக இன்றுவரை கருதப்படுகிறது.

விழுப்புரம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் ஒரு வரலாறு கூறப்பட்டுள்ளது. சோழ மன்னன் ஒருவன் தன் நண்பனான பாண்டிய மன்னனிடம், தான் உறையூரில் கட்டி வருகின்ற கோயில் திருப்பணிக்காக, நன்கொடை கேட்கிறான். பாண்டிய மன்னனும் மனமகிழ்ந்து, என் பட்டத்து யானை மீது நான் ராஜ வஸ்திரம், முடி, செங்கோல் தரித்து அமர்ந்தால், எவ்வளவு எடை வருமோ, அந்த எடைக்கு எடை தங்கம் தருவதாக வாக்களிக்கிறான். அதுபோலவே அதிக அளவு தங்கத்துடன் உறையூருக்கும் வந்து விடுகிறான். இப்பொழுதுதான் பிரச்னை ஆரம்பிக்கின்றது. யானையோடு ராஜாவின் எடையை எப்படிக் கணக்கிடுவது என்ற குழப்பம் அங்கு ஏற்பட்டது.

அப்பொழுது அங்கிருந்த ஓடக்காரன் ஒருவன், உறையூர் அடுத்துள்ள முக்கொம்பு நீர் தேக்கம் என்கிற காவிரி, கொள்ளிடம் நதிகள் பிரிந்து ஓடுகின்ற முனைக்கு எல்லோரையும் அழைத்து வந்தான்.

ராஜ வஸ்திரம், ராஜ முடி, ராஜ செங்கோல் ஏற்று ராஜாவையும், யானையையும் அங்கே ஆற்றிலே நிற்கின்ற ஒரு பெரிய மரக்கலத்தில் ஏற்றினான். பின்பு மரக்கலத்தின் வெளிப்புறத்தில் நீர்மட்ட அளவினை தன் கையிலிருந்த சுண்ணாம்புக் கட்டியால் கப்பலின் கீழ்ப்புறத்தில் கோடிட்டான். பின்பு ராஜா, யானையை இறக்கி வெளியே வரவிட்டான். கப்பல் பாரம் குறைந்து லேசானதால் சற்று உயர்ந்தது. பின்பு அந்த வெளிக்கோடு தண்ணீரைத் தொடத்தக்கதாக, கப்பலில் தங்கத்தை நிரப்பினான். பிரச்னை தீர்ந்தது. இந்தக் கல்வெட்டு 1500 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்டது.

Dr.Anburaj said...

சமஸ்கிருதம் படிக்க வேண்டும். பாரம்பாியமான செம்மொழி. நமது நாட்டு மொழி. அழிவின் எல்லையில் இருக்கும் மொழி. அழியாமல் காக்க வேண்டிய கடமை இந்தியா்கள் அனைவருக்கும் உ ண்டு. ஆகவே வாழ்க்கை நிலைக்கு தக்க நேரம் ஒதுக்கலாம். பிறாமணா்கள் பெண்தருவாா்களா என்றெல்லாம் பொிய முட்டுக் கட்டையை நாமே போட்டுக் கொள்வது பொருத்தமானதல்ல. பிறாமணா்களின் பெண்கள் உயா்ந்தவா்கள் என்ற கருத்து பதிவில் காணப்படுகின்றது. தவறு.

இந்தியமண்ணில் அரேபியன்கள் போல் வாழ்ந்து வரும் சுவனப்பிாியன் ஒரு குதா்க்க வாதி. இந்து-இந்தியா என்றால் அவருக்கு ஏதும் பிடிக்காது.