

சவுதியில் தொடர்கின்ற மழை....
முன்பெல்லாம் சவுதியில் மழை பெய்வது அபூர்வமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிலும் இந்த ஆண்டு தொடர்ச்சியாக நம் ஊரைப் போல மழை வெளுத்து வாங்குகிறது. பாலைவனம் அனைத்திலும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து கப்பல் கப்பலாக மண்ணை கொண்டு வந்து பாலைவன மணலோடு கலந்து களிமண்ணாக மாற்றுகிறார்கள். சாலை ஓரங்களில் மரங்களை வரிசையாக நடுகிறார்கள். எங்கெல்லாம் காலி இடம் உள்ளதோ அங்கெல்லாம் மரங்களை நடுகிறார்கள். காய்கறி பழங்கள் என்று அனைத்தும் இங்கு பயிரிடப்படுகிறது.
இவ்வாறு பசுமை புரட்சி ஏற்பட்டதால் இன்று மழையை இறைவன் தாராளமாக இறக்குகிறான். நாளை பெட்ரோல் முடிந்தாலும் வெளி நாட்டு காரர்களை அனுப்பி விட்டு விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ள முடியும்.
இதற்கு மாறாக இன்று நம்நாட்டு விளை நிலங்களும் கனிம வளங்களும் கொள்ளை போகின்றன. மரத்தை வெட்டியே கட்சியை வளர்த்த ராமதாஸின் மகன் முதல்வராக போட்டி போடுகிறார். அரசே பன்னாட்டு கம்பெனிகளுக்கு விளை நிலங்களை தாரை வார்க்கிறது. கட்சிக்கு நிதி கொடுத்து விட்டால் எந்த தேச துரோக செயலையும் செய்ய துணிந்து விடுவர் நம் அரசியல்வாதிகள்.
3 comments:
கட்சிக்கு நிதி கொடுத்து விட்டால் எந்த தேச துரோக செயலையும் செய்ய துணிந்து விடுவர் நம் அரசியல்வாதிகள்.
பாரதிய ஜனதாக் கட்சியில் இருப்பவா்கள் அப்படியில்லை. இருப்பினும் அரசியலில் ஒழுக்கம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்தான்.
எல்லாம் இஸ்ரேல் காரன் கொடுத்த அறிவு.தொழில் நுட்பம்.பாலைவன விவசாயம் தொழில் நுட்பம் அனைத்தும் இஸ்ரேலியா்கள் கண்டுபிடிப்பு.
சுவனப்பிாியன் உடனே குடையை விாியுங்கள்.
சவுதி மக்கள் குடை பிடிக்கும் போது தாங்கள் குடை பிடிக்காமல்
இருந்தால் ஹராம் ஆகிவிடும்.
வாஹாபியா்கள் கோபம் கொள்வாா்கள்.
Post a Comment