Followers

Sunday, April 10, 2016

மோடி அமைச்சருக்கு கோர்ட் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது!



ஒய் எஸ் சவுத்ரி மொரீஸியஸ் பேங்கில் லோன் எடுத்து அதனை சரி வர திருப்பி செலுத்தாததால் பல முறை வங்கி மந்திரிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியது. ஆனால் இது எதற்கும் எந்த பலனும் இல்லாததால் கோர்ட் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அறிவியல் தொழில் நுட்பத்துக்கு இவர்தான் மத்திய அமைச்சர். இவருக்குக் கீழ் இருந்தால் அந்த துறை உருப்படுமா?

சுஜானா தொழிற் குழுமத்துக்கும் இவர்தான் எம்டி. 100 கோடிக்கு மேல் வங்கியில் கடன் வாங்கி அதற்கு எந்த பதிலும் இவர் தருவதில்லை. கோடீஸ்வர எம்பி. ஆனால் அரசிடம் வாங்கிய கடனை மட்டும் அடைக்க மனமில்லை. ஒரு மந்திரிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது இந்திய அரசியலுக்கு அவமானம்.

ஏற்கெனவே விஜய் மல்லையாவை தப்பிக்க விட்டது பிஜேபி அரசு. தற்போது அமைச்சரே 100 கோடியை ஏப்பம் விட்டுள்ளார். இவர்கள் ஆட்சியை விட்டும் இறங்கும் போது அரசு கஜானா சுத்தமாக காலியாகி இருக்கும். தேச பக்தர்கள் அல்லவா? :-)

தகவல் உதவி
என்டிடிவி
08-04-2016

http://www.ndtv.com/india-news/non-bailable-warrant-against-union-minister-ys-chowdary-1340092

1 comment:

Dr.Anburaj said...


விஜய் மல்லையாவை யாரும் விட்டுவிடவில்லை. இவரையம் விடமாட்டாா்கள்.சம்மா மோடி மோடி என்று மட்டம் தட்ட வேண்டாம். மோடி ஆட்சியிலா அவருக்கு கடன் வழங்கப்பட்டது.மோடி ஜாமின் அளித்தாரா பாிந்துரை அளித்தாரா ? தொழில் செய்து நட்டம் அடைந்திருக்கலாம்.
ஏன் சதா மோடியை காித்து கொட்டுகிறாய் சுவன்பிாியன் என்ற அரேபிய அடிமையே????