Followers

Monday, September 02, 2019

சங்கிகளுக்கு மாட்டுக் கறிதான் தலையாய பிரச்னை



ஃப்ராங்க்பர்ட்: ஜெர்மனியில் உள்ள இந்தியன் எம்பாஸியில் நடந்த விழாவில் பல உணவு வகைகள் பறிமாறப்பட்டன. சைவம், அசைவம் என்று எவருக்கு எது விருப்பமோ அதனை எடுத்துக் கொள்வது போல் மெனு தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த மெனுவில் புரோட்டாவும், பீஃப் கறியும் கேரள சமாஜத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வட நாட்டு சங்கிகள் இதனைப் பார்த்து கோபமடைந்து கேரள சமாஜத்தின் சமைத்து வைக்கப்படடிருந்த உணவகத்தை வலுக்கட்டாயமாக மூட வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள சமாஜத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். காவல் துறை வந்து 'இது ஜெர்மனி: இந்தியா அல்ல: யாருக்கு எது விருப்பமோ அதனை யாரும் சாப்பிடலாம்' என்று சங்கிகளை எச்சரித்து அனுப்பினர். கல்வியாளர்கள் மத்தியில் சங்கிகளின் அநாகரிக செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது. எந்த உணவை சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை. சைவப்பிரியர்களை மாமிசம் சாப்பிடு என்று வற்புறுத்தினால் அதனை பிரச்னையாக்கலாம்.
உலகில் தலை போகும் பிரச்னைகள் நமக்கு முன்னால் அணி வகுத்து நிற்க சங்கிகளுக்கு மாட்டுக் கறிதான் தலையாய பிரச்னை. அதே சங்கிகள் மோடி அரசு கோமாதாவை பார்சல் செய்து பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஏறறுக் கொள்வார்கள். கோமாதாவின் மீது உண்மையான பக்தியிருந்தால் வெளி நாட்டு ஏற்றுமதியை அல்லவா தடை செய்திருக்க வேண்டும்?
தகவல் உதவி
Kerala kaumudi
02-09-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்.


No comments: