Followers

Monday, January 19, 2015

ரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்!



ரஷ்யாவில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20000 க்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யாவின் காகஸஸ் மாநிலத்தில் மாகாஸ் என்ற நகரத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அங்கு கலந்து கொண்ட மக்கள் அனைவரும் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அடாத செயலை கண்டித்தனர். கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சார்லி ஹெப்டோ தாண்டி விட்டதாக பலரும் அந்த பத்திரிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.

எங்கோ ஒரு மூலையில் அரேபிய கிராமத்தில் பிறந்த காய்ந்த பேரித்தம் பழங்களைத் தின்று வாழ்வு நடத்திய ஒரு மனிதரை கேலிச் சித்திரமாக்குவற்கு ரஷ்ய மக்களும் உடன்பட வில்லை. அந்த அளவு நபிகள் நாயகத்தின் வாழ்வானது கம்யூனிஸ கோட்டைகளையும் அசைத்துப் பார்க்கிறது. என்னதான் கம்யூனிஸத்தை அந்த மக்களின் மீது ஆட்சியாளர்கள் திணித்தாலும் அதனையும் மீறி இஸ்லாம் இந்த மக்களின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்துள்ளதையே இந்த போராட்டம் காட்டுகிறது.

தகவல் உதவி
washingtonpost (வாஷிங்டன் போஸ்ட்)
18-01-2015

No comments: