'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, January 01, 2015
யுவன் சங்கர் ராஜாவின் திருமணம் இன்று நடந்தேறியது!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கும் சகோதரி ஜபருன்னிஷாவுக்கும் இன்று கீழக்கரையில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. கீழக்கரையில் உள்ள செங்கல் நீரோடை என்ற இடத்தில் இந்த திருமண வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்று இன்று புது வருடம் முதல் தேதியன்று புது வாழ்வு தொடங்கும் யுவனை நாமும் வாழ்த்துவோம். இதற்கு முன் நடந்த இரண்டு திருமணங்களும் யுவனுக்கு தோல்வியிலேயே முடிந்தது. மூன்றாவது திருமணமானது அவரது வாழ்வை மேலும் சிறப்புக்குரியதாக ஆக்கட்டும் என்று பிரார்த்திப்போமாக!
திருமணமான மணமக்களை இஸ்லாமிய முறையில் வாழ்த்தும் முறை:
"பாரகல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்"
பொருள்: "இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."
என்று நபிகள் நாயகம் கூறுவார்களென நபித் தோழர் அபூஹூரைரா தனது அறிவிப்பில் கூறுகிறார்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: அஹ்மத்.
http://www.business-standard.com/article/pti-stories/yuvan-shankar-raja-gets-married-a-third-time-115010100979_1.html
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=125376
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தமபதிகளுக்கு வாழ்த்துகள்
"பாரகல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்"
பொருள்: "இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."
சிலர் திருமணத்துக்காக மதம் மாறி விட்டார் என்று திரும்ப திரும்ப அதனையே எழுதி மன திருப்தி பட்டுக் கொள்கின்றனர். இந்து மதத்தில் இருந்து கொண்டு அவரால் மூன்றாம் திருமணம் செய்ய முடியாதா? உதாரணத்துக்கு கலைஞர் மூன்று திருமணம் செய்து கொண்டு அனைத்து பிள்ளைகளையும் அரவணைத்து செல்கிறாரே! இந்து மத கடவுள்களே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணந்துள்ளனரே!
எனவே குர்ஆன் வசனங்கள் தான் என்னை மாற்றியது என்று சொல்லியும் திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைப்பது சளிப்பைத் தட்டவில்லையா?
இஸ்லாம் கற்றுத் தந்த திருமண வாழ்த்து...
"இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."
4 திருமணம் முடிக்கவே யுவன் மதம் மாறினார் எனும் அதிமேதாவிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்.
கருணாநிதி.... 3
எம்.ஜி.ஆர்.... 2
கமல்ஹாசன் ...... 3
ராதிகா .. ..4
விஜயகுமார் ..2
விஜயகுமார் பொண்ணு 3
செல்வராகவன் 2
சரத்குமார் 2
என வரிசை படுத்தி திருமணம் செய்வதை விமர்சிக்க காணவில்லை.... இவர்கள் இந்து மதத்திலேயே இருந்து கொண்டு தான் பலதார மணத்தை செய்துள்ளனர்.
கருணாநிதி.... 3
எம்.ஜி.ஆர்.... 2
கமல்ஹாசன் ...... 3
ராதிகா .. ..4
விஜயகுமார் ..2
விஜயகுமார் பொண்ணு 3
செல்வராகவன் 2
சரத்குமார் 2
மனப்பக்குவம் அற்றவர்களின் செயல் நமக்கு முன் உதாரணம் ஆகாது. யுவன் சங்கா் வாழ்க வளமுடன். ஏன் அவருக்கு முந்தைய மனைவிகளுடன் இணைப்பு ஏற்படவில்லை. இதற்கும் குரானுக்கும் என்ன சமபந்தம்.தலாக் தலாக் என்று முஸலீம் தெருக்களில் ஓசை கேட்கிறதே? அதற்கு என்ன காரணம் ? யுவன் சங்கருக்கு சொந்த வாழ்க்கையில் ஏதோ தோல்வி.இதற்கு அரேபிய மதவாதியாக மாறுவது எந்த வகையிலும் நியாயமமாதல்ல.மாறிவிட்டாா்.வாழ்த்துவோம்.இனியாவது இல்லறம் சிறக்கட்டும். இராமன் வழியில் மங்களம் பொங்கட்டும் மனையில்.மனைவியால சந்தோசம் பிறக்கட்டும்.
Post a Comment