Followers

Sunday, January 18, 2015

இங்கு எதற்காக இந்த பெண்மணிகள் வரிசையில் நிற்கிறார்கள்?நேற்று சென்னை ஆவடி ரோட்டில் உள்ள பள்ளி வாசலின் முன்னால் கண்ட காட்சியே இது..... இங்கு என்ன விசேஷம்? எதற்காக இவர்கள் இந்த பனியில் தங்கள் குழந்தைகளோடு கால் கடுக்க நிற்கின்றனர்? இவர்களைப் பார்த்தால் இந்துக்கள் போல் தெரிகிறதே? அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் கேட்கலாம்.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. மாலை நேர தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனங்களை ஓதி விடச் சொல்லித்தான் இந்த இந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு வரிசையில் காத்து நிற்கின்றனர். இந்த ஒரு பள்ளியில் மாத்திரம் இந்த நிலை இல்லை. பெரும்பாலான தமிழக பள்ளி வாசலில் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளோடு காத்து நிற்கும் இந்து தாய்மார்களை தமிழமெங்கும் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

குழந்தைக்கு உடல் சரியில்லை என்றால் மருத்துவரிடம் காட்டச் சொல்லித்தான் இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் இந்து தாய்மார்கள் குர்ஆன் வசனத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் தங்கள் குழந்தைகளுக்கு சுகம் கிடைக்கும் என்று வருகிறார்கள். ஓதி ஊதி விடும் நாம் 'குர்ஆன் மேலும் நம்பிக்கை வையுங்கள்: மருத்தவரிடமும் கொண்டு செல்லுங்கள்' என்று நாம் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் பள்ளியில் மாற்று மதத்தவர்கள் விரும்பினால் உள்ளே அழைத்து அவர்களை உட்காரச் சொல்லி கண்ணியம் செய்யும் படி இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. இடப் பற்றாக்குறையால் உள்ளே அழைக்கா விட்டாலும் பள்ளி வாசலை ஒட்டி இவர்கள் அமர்வதற்கு ஒரு திண்ணை போன்று சிமெண்டில் கட்டி வைத்தால் கால் கடுக்க அவர்கள் நிற்பது குறைய வாய்ப்புள்ளது. அதற்கு அருகிலேயே குர்ஆனின் மொழி பெயர்ப்புகள், நபிகள் வாழ்க்கை வரலாறு போன்ற துண்டு பிரசுரங்களை வைத்தால் நல்லது. காத்திருக்கும் நேரம் அவர்கள் கண்ணில் குர்ஆனின் வசனம் பட வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் கூட உண்மையை அவர்கள் விளங்க நேரிடும். பள்ளி வாசல் நிர்வாகிகள் இதனை கருத்தில் கொண்டு மாற்று மத நண்பர்கள் அமர்வதற்கு வழி செய்வார்களாக!

2 comments:

Dr.Anburaj said...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் “ஊருக்கு அடுத்த ஊா் இரத்தினபுாி ஆகும். இங்குள்ள அம்மன் கோவிலில் முஸ்லீம் பெண்கள் குழந்தைகளோடு -ஆவடியில் நிற்பது போல் நிற்கின்றாா்கள்.
மனித உடலில் பிராணனின் சமநிலை குறைவே -பேதமே நோய்வாய்படுதல் என்று யோக சுத்திரம் நோய்படு நிலையை விளக்குகிறது. சில பேருக்கு முறையான யோக பயிற்சியினாலோ பிறவிபயனாக வோ மன“ உடலில் உள்ள பிராணனை பிறா் மேல் செலுத்தி அவர்கள் உடலில் ஏற்பட்டள்ள பிராண சமநிலை சீா்குலைவை நீக்க முடியும். இவ்வளவே. சிறு நோய்களை இது குணமாக்க முடியும்.சாய்பாபா போன்றவர்கள் மிகக் கடுமையான புற்று நோயைக் கூட குணமாக்கியுள்ளதாகக் கேள்விப்பட்டேன்.(தமிழக கவா்கள் திரு.ரெட்டி யின் மனைவி ) முறையான சமய கல்வி பெறாத காரணத்தாலே இந்துக்கள் இப்படி ஏமாளிகளாக வாழ்ந்து ஏமாந்து வருகின்றனா்.

Dr.Anburaj said...

திசையன்விளையில் எம்.எல் மருத்துவனை என்று ஒன்று இருந்தது. அதன் மருத்துவா் கத்திவைத்து பிராண சிகிட்சை செய்வாா். நேயாளிகள் அனைவருக்கும் கத்தியை காட்டி காட்டி எடுப்பாா். யாரையும் தன்னை தொட்டுவிட அனுமதிக்க மாட்டாா். கத்தியால் வீசும் போது மிகவும் உணா்ச்சி வசப்பட்டு காணப்படுவாா்.மிகவும் களைப்பாகவும் காணப்படுவாா். நிறை நோய்கள் குணமாகும்.குறிப்பாக குழந்தைகள் நோய்க்கு 25 கிமி சுற்றளவிற்கு நோயுள்ள குழந்தைகள் சிகிட்சைக்கு வருவாா்கள். யோகா முறையாகப் பணின்றால் இது சாத்தியமே. ஒருமுறை எனது மனைவியின் வீட்டிற்கு இரவு 9 மணி அளவில் சென்றேன்.முதல்குழந்தை பிறந்து 4 மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடுமையான காய்ச்சல். மருத்துவனைக்கு 9 கீமி தாண்டி திசையன்விளைக்கு தான் வரவேண்டும். பஸ் வசதி கிடையாது. என்ன செய்வது என அத்தையும் மனைவியும் யோசித்துக் கொண்டிருந்த வேளைநான் போய் சோ்ந்தேன். குழந்தையைக் கையில் எடுத்து சிவமகாமந்திரம் ஜெபித்து பிராண சிசிட்சை கொடுத்தேன்.குழந்தைகயின் காய்ச்சல் மாயமாய் போனது. எனது அத்தைக்கு என்னது அப்பா கை பட்டவுடன் காய்ச்சல் பறந்து போனதே என்று ஆச்சாியப்பட்டாா்.பின் அனைவரும் நிம்மதியாக தூங்கினோம். அனைவராலும் பிராண சிகிட்சை செய்ய முடியும்.