Followers

Sunday, January 11, 2015

துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்



துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்.



'இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. இரண்டு பைத்தியக்காரர்களின் செயலானது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எண்ண ஓட்டம் ஆகி விடாது. என்னுடைய சகோதரரும் ஒரு முஸ்லிம். அவர் இரண்டு தீவிரவாதிகளால் அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலக வாசலில் வைத்து 12 பேரோடு சேர்த்துக் கொல்லப்பட்டார். கொன்றவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள்.'

-மாலிக். துப்பாக்கிச் சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்டின் சகோதரர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சொன்னது.......

முன்பெல்லாம் யூதர்கள் ஃப்ரான்ஸில் வெளிப்படையாக தங்களை இனம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக யூதர்கள் எதையும் செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் ஃப்ரான்ஸ் மக்கள் மனதில் பரவலாக இருந்ததே காரணம். பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்ட நாளிலிருந்து தங்களின் அடையாளங்களோடு யூதர்கள் பகிரங்கமாக வெளி வருகின்றனர். 'நான் யூதன் தான்' என்று தற்போது பயமில்லாமல் சொல்கின்றனர். ஒட்டுமொத்த மக்களும் முஸ்லிம்களை வெறுக்க வேண்டும் என்பதே யூதர்களின் ஆசை. பத்திரிக்கை அலுவலக தாக்குதலால் இது நிறை வேறியுள்ளது. இந்த தாக்குதலால் பலனடைந்தது யார் என்று இப்போது விளங்குகிறதா? இதிலும் புரியவில்லை என்றால் நம் நாட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். :-)

ஐரோப்பிய யூனியனில் மிக வேகமாக இஸ்லாம் பரவியதும், பாலஸ்தீனத்துக்கு ஃப்ரான்ஸ் ஆதரவு ஓட்டளித்ததும் தான் யூதர்களை ஃப்ரான்ஸின் பக்கம் பார்வையை திருப்ப வைத்தது. பாலஸ்தீன மக்களின் மேல் வெறுப்பும் உண்டாகும், இஸ்ரேலுக்கு ஆதரவு கூடும், இஸ்லாத்தின் வேகமும் மட்டுப்படுத்தப் படும் என்பது யூதர்களின் கணக்கு.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஃப்ரான்ஸை அவர்கள் என்றுமே எதிரி நாடாக பார்த்ததில்லை. எங்கு திரும்பினாலும் மசூதிகள்: இஸ்லாமிய சட்டங்களை கடை பிடிக்க எந்த தடையும் இல்லை. பிரசாரம் பண்ணவும் எந்த தடையும் இல்லை. இவ்வாறு இருக்க ஃப்ரான்ஸில் தீவிரவாதத்தை அரங்கேற்றினால் பின்னடைவு இஸ்லாத்துக்கு என்பதை விளங்காதவர்களா முஸ்லிம்கள்?

இரட்டை கோபுரத்தை தாக்கி இஸ்லாமியர்களின் பெயரை களங்கப்படுத்தியது போல் இன்று பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி அதே பாணியை கையாண்டுள்ளது மொசாத். இரட்டைக் கோபர தாக்குதலுக்கு பிறகு தான் இஸ்லாம் அமெரிக்காவில் இன்னும் வேகமாக பரவியது. அதே போல் ஃப்ரான்ஸிலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் பரவும்.

இந்தியன் முஜாஹிதீன், லஷ்கரே தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், போகோ ஹராம், அல் கொய்தா, என்று இன்னும் எத்தனை பெயர்களில் அநியாயங்களை அரங்கேற்றினாலும், குர்ஆனை பின் பற்றும் ஒரு சிறந்த முஸ்லிம் அந்த அநியாயங்களை செய்திருக்க மாட்டான் என்று உலகின் 90 சதமான மக்கள் இஸ்லாமியர்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை இஸ்லாமியர்களான நாங்கள் என்றுமே சிதைத்து விட மாட்டோம் என்று நடுநிலையாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.




3 comments:

UNMAIKAL said...

பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : பிரான்ஸ் அதிபர் பேச்சு....!!

பிரான்ஸிலுள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான விசாரணை சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பாக யாரும் எவ்வித குழப்பங்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
***************


முகநூல் முஸ்லிம் மீடியா கருத்து :

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை யார் செய்தது என்று முழுமையாக தெரியவில்லை என்றாலும் தண்டிக்கும் உரிமை உலகில் யாருக்கும் வழங்கப்படாததால் இந்த தாக்குதலை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேவேளையில் ஊடகங்களுக்கு என்று ஓர் தர்மம் இருக்கிறது, அந்த தர்மத்தை அவர்கள் காக்க வேண்டும்.
உலகிலேயே சிறந்த 10 தலைவர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் சிலை வைத்தார்கள். அந்த 10 சிலைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஓர் சிலை வைத்தார்கள்.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் போராட்டத்தால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்ட்டது.

சார்லி ஹெப்டோ என்ற இந்த பத்திரிக்கை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக யுத்தம் தொடுத்தார்கள்.

அமெரிக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிடப்பட்ட திரைப்படமான இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம் படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் கொந்தளித்த நேரத்தில் இந்த பத்திரிக்கை நபிகள் நாயகத்த்திற்கு உருவம் கொடுத்து கேலி சித்திரம் வரைந்து எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி ஒருமுறை இருமுறையல்ல பலமுறை கேலி சித்திரம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுப்போல் பிரான்ஸ் பெண்களின் புர்கா பிரச்சினைக்கு இந்த பத்திரிக்கை ஓர் முக்கிய காரணம்.

இப்படி தொடர்ச்சியாக இந்த பத்திரிக்கை எல்லை மீறியதால் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் ஃபேப்யூஸ் பத்திரிக்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கையையும் வெளியிட்டார்.

இது போன்ற கீழ்த்தரமான செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்.
அந்த பத்திரிக்கை எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர் கெரார் பியர்ட் அதற்கு பதிலளிக்கும் போது....

ஒரு பத்திரிக்கையாளனாக எவ்வாறு பிரான்ஸ் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தை காபூலுக்காகவும், ரியாத்துக்காகவும் வளைத்தால் அதனை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்று திமிராக பதிலளித்தார்.

இப்படி தொடர்ச்சியாக ஒரு சமூகத்திற்கு எதிராக யுத்தம் தொடுத்து வந்ததால் கோபம் கொண்ட இயக்கத்தினர் பதில் தாக்குதல் தொடுத்தார்களா அல்லது இதை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்களா என்று சரியாக தெரியவில்லை.

யார் செய்திருந்தாலும் ஆயுதம் தூக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கமாகும்.

UNMAIKAL said...

எதற்காக வெட்கப்பட வேண்டும் ? செங்கிஸ்கான் ஜும்ஆ உரை....!!

யாரோ செய்யும் செயல்களுக்கு இங்குள்ள முஸ்லிம்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த பிரான்ஸ் பத்திரிகையான சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி 12 பேர் கொல்லப்பட்ட செய்தியை வைத்து கொண்டு மீண்டும் ஊடகங்கள் கருத்து சுதந்திரம் பற்றியும், சகிப்புத்தன்மை பற்றியும் பேசி முஸ்லிம்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்து உள்ளன!

இங்குள்ள முஸ்லிம் தலைவர்களும் வழக்கம் போல் இதை இஸ்லாம் கூறவில்லை முஸ்லிம் ஆக வெட்கப்படுகிறோம் என தங்களது தேசபக்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

பிளசண்ட் டே ஹோட்டல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழதத்தையே கலவரக்காடாக்கி மூன்று மாணவிகளை உயிரோடு எரித்ததற்காக யாராவது வெட்கப்பட்டாரகளா ?

அண்ணணா தம்பியா ? எனக் கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக தினகரன் பத்திரிகையை தீக்கிரையாக்கி மூன்று ஊழியர்களை கொளுத்தியதற்காக யாராவது வெட்கப்பட்டாரளா ?

விடுதலைப்புலிகள் இலங்கையிலும், தமிழகத்திலும் நடத்திய படுகொலைகளுக்காக தமிழ் அமைப்புகள் யாராவது வெட்கப்பட்டார்களா ?

கத்தி, டேம் 999 போன்ற படங்களை வெளியிடக் கூடாது என திரையரங்குகளில் நடத்திய வன்முறைக்கு யாராவது வெட்கப்பட்டார்களா ?

சங்பரிவாரங்கள் குஜராத்திலும், நாடெங்கும் நடத்திய படுகொலைகளுக்காக இந்துவாக யாராவது வெட்கப்பட்டார்களா ?

சங்பரிவார்கள் இந்து மதத்தை இழிவுபடுத்தினர் எனக் கூறி நடத்திய பத்திரிகை அலுவலகம், சினிமா தியேட்டர், சினிமா படப்பிடிப்பு போன்ற இடங்களில் நடத்திய பயங்கர தாக்குதல்களுக்கு இந்துக்கள் யாராவது வெட்கப்பட்டார்களா ?

பர்மாவிலும் இலங்கையிலும் நடந்த படுகொலைகளுக்காக இங்குள்ள பவுத்தர்கள் யாரும் வெட்கப்பட்டார்களா ?

இராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்கா நடத்திய படுகொலைகளுக்காக கிறிஸ்தவர்கள் யாராவது வெட்கப்பட்டார்களா ?

உலகத்தில் யாராவது ஒரு முஸ்லிம் செய்தால் மட்டும் ஏன் நீங்கள் உடனே வெட்கப்படுகின்றீர்கள் ?

என் தாயை தந்தையை இழிவுபடுத்தினால் நான் வாயால் தட்டி கேட்பேன்! எனது சகோதரன் கையால் தட்டிகேட்பான் ! எங்கள் தாயைவிட தந்தையை விட ஏன் உயிரைவிட மேலான உத்தம நபியை, உருவ வழிபாடு உருவாகி விடக்கூடாது என்பதற்காக தன் உருவத்தை இந்த உலகில் விட்டு செல்லாத ஒரு உத்தமரை கேலிச்சித்திரம் வரைந்தால் எங்களில் ஒரு முரட்டு சகோதரன் துப்பாக்கி சாதாரணமாக புழங்கும் நாட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கேட்பான்! இது இயல்பு!

இதற்காக நாம் வெட்கப்பட தேவையில்லை ! வேண்டுமானால் செய்தவர்கள் வெட்கப்படட்டும்,

பதில் சொல்லட்டும்! இங்குள்ள நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்! பதில் சொல்ல வேண்டும் ?

- செங்கிஸ்கான்

https://ta-in.facebook.com/pages/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/318795831612907

UNMAIKAL said...

தீவிரவாதியிடமிருந்து 15 வாடிக்கையாளர்களைக் காத்த பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டின் முஸ்லீம் ஊழியர்!

Posted by: Sutha Published: Sunday, January 11, 2015, 10:29 [IST]

>>>லசன்னா பதிலி

வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான செயல் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

பாரீஸ்: பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு மர்ம நபர் சிறை பிடித்தபோது, அந்த நிறுவனத்தின் ஊழியர் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை தீவிரவாதியின் பிடியில் சிக்காமல் மறைத்து வைத்து காப்பாற்றியுள்ளார்.

அந்த ஊழியர் ஒரு முஸ்லீம் என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றன.

பாரீஸின் போர்ட் டி வின்செஸ் என்ற பகுதியில் உள்ள ஹைபர் கோஷர் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதி ஒருவன், அங்கிருந்தவர்களை சிறை பிடித்து பல மணி நேரம் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டான். இறுதியில் அவனை போலீஸார் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.

அந்த நிறுவனத்தில் லசன்னா பதிலி என்ற 25 வயது முஸ்லீம் இளைஞர் வேலை பார்த்து வருகிறார். இவர் மாலி நாட்டைச் சேர்ந்தவர். பிரான்சில் வசித்து வரும் இவர் பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேர வேலையாளராக இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் கடையில் பணியில் இருந்தபோதுதான் தீவிரவாதி புகுந்து விட்டான். இதையடுத்து தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை முடிந்தவரை காப்பாற்ற முடிவு செய்த லசன்னா, அவர்களில் பலரை குளிர்சாதன சரக்கு இருப்பு வைக்கும் அறைக்குள் தள்ளி மூடியுள்ளார். இதனால் பலர் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து லசன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், 15 பேரை நான் காப்பாற்றினேன். பின்னர் அவர்களை மறைத்து வைத்த இடத்தில் மின்சாரத்தையும் அணைத்து விட்டேன். அனைவரையும் அமைதியாக இருக்குமாறும், சத்தம் போடாமல் இருக்குமாறும் கூறினேன். இல்லாவிட்டால் தீவிரவாதி நம்மை நோக்கி வந்து விடுவான் என்றும் அவர்களை எச்சரித்தேன்.

நான்கு மணி நேரம் நாங்கள் இப்படி முடங்கிக் கிடந்தோம். பின்னர் அங்கிருந்து ஒரு லிப்ட் மூலம் வேறு பகுதிக்கு தப்ப முடிவு செய்தேன். என்னோடு அனைவரையும் பத்திரமாக அழைத்துச் செல்லவும் முயன்றேன். ஆனால் அவர்கள் பயந்து கொண்டு வர மறுத்தனர். இதனால் நான் மட்டும் தப்பி வந்தேன். அப்போது தீவிரவாதி உள்ளேதான் இருந்தான்.

நான் வெளியே வந்தபோது போலீஸார் என்னை தலை குனியுமாறும், கைகளை மேலே தூக்குமாறும் கூறினர். எனக்குக் குழப்பமாகி விட்டது. என்னைத் தீவரவாதி என்று அவர்கள் நினைத்து விட்டார்கள். மேலும் எனக்குக் கைவிலங்கிட்டு ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படி வைத்திருந்தனர்.

ஆனால் நான்தான் கடைக்குள் நடந்ததை அவர்களிடம் விளக்கி, தீவிரவாதி எந்த இடத்தில் இருக்கிறான், எப்படிப் போக வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கினேன்.

அதன்படியே போலீஸாரும் உள்ளே புகுந்து அவனை சுட்டுக் கொன்று அனைவரையும் மீட்டனர். அதன் பின்னர் நான் ஒளித்து வைத்திருந்தவர்களும் மீண்டு வந்தபோது என்னை பாராட்டி விட்டுச் சென்றனர். தற்போது இணையதளங்களில் லசன்னாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/international/muslim-employee-paris-market-praised-hiding-customers-from-gunman-218762.html